அனுராதா ஆச்சார்யா
அனுராதா ஆச்சார்யா | |
---|---|
பிறப்பு | 1972 (அகவை 51–52) பிகானேர், இந்தியா |
தேசியம் | இந்தியா |
குடியுரிமை | இந்தியர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | இந்திய தொழில்நுட்பக் கழகம் கரக்பூர் சிகாகோ, இல்லினாய்ஸ் பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | மரபணுத்தொகையியல் |
விருதுகள் | இளம் உலகளாவிய தலைவர், உலக பொருளாதார மன்றம் |
வலைத்தளம் | |
அனுராதா ஆச்சார்யாவின் வலைதளம் [1] |
அனுராதா ஆச்சார்யா (Anuradha Acharya) (பிறப்பு 1972) ஓர் இந்தியத் தொழிலதிபர் ஆவார். இவர் ஓசிமம் பயோ சொல்யூஷன்ஸ் மற்றும் மேப்மிஜெனோம் என்ற நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியும் ஆவார். 2011ஆம் ஆண்டில் உலக பொருளாதார மன்றத்தால் இவருக்கு "இளம் உலகளாவிய தலைவர்" விருது வழங்கப்பட்டது.
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]ஆச்சார்யா, இராஜஸ்தானின் பிகானேரில் பிறந்தார். ஆனால் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை கரக்பூரிலேயே கழித்தார். 1995இல் கரக்பூர், இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் பட்டம் பெற்றார். [2] பின்னர் இவர் 1995 இல் சிகாகோ சென்று இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் இயற்பியலிலும், மேலாண்மை தகவல் அமைப்புகளிலும் முதுகலைப் பட்டம் பெற்றார். [3]
சொந்த வாழ்க்கை
[தொகு]ஆச்சார்யா ஒரு பேராசிரியருக்குப் பிறந்தார். தனது வாழ்க்கையின் ஆரம்ப ஆண்டுகளை ஒரு வளாக நகரத்தில் வாழ்ந்தார். சுபாஷ் லிங்காரெட்டி என்பவரை மணந்தார். [4] இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Janampatri to Genomepatri – Anu Acharya". Janampatri to Genomepatri – Anu Acharya. Archived from the original on 2018-11-25. பார்க்கப்பட்ட நாள் 2021-04-15.
- ↑ A toast to IIT Kharagpur பரணிடப்பட்டது 14 பெப்பிரவரி 2012 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Movers and Shakers with Anuradha Acharya". frost.com.
- ↑ "Disclosure". www.ifc.org.