அனுபமா நிரஞ்சனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனுபமா நிரஞ்சனா
பிறப்புவெங்கடலட்சுமி
1934 (1934)
திர்தகல்லி, இந்தியா
இறப்பு1991
பணிமருத்துவர்,எழுத்தாளர்
வாழ்க்கைத்
துணை
நிரஞ்சனா

அனுபமா நிரஞ்சனா (Anupama Niranjana கன்னடம்: ಅನುಪಮಾ ನಿರಂಜನ ) (1934 – 1991) [1] மருத்துவர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் கன்னட மொழியில் நவீன புனைகதை மற்றும் புனைவிலி படைப்புகளை எழுதியுள்ளார்.

இவர் பெண்ணிய பார்வையோடு தனது படைப்புகளை உருவாக்கியுள்ளார். திரிவேணி மற்றும் எம்.கே இந்திரா ஆகிய சமகால பெண்ணிய சிந்தனையாளார்களோடு இணைந்து அறியப்படுகிறார். இவரது புதினமான ருணமுக்தலுவை புட்டண்ணா கனகல் ஒரு வெற்றிகரமான திரைப்படமாக உருவாக்கினார். [2]

இவரது இயற்பெயர் வெங்கடலட்சுமி ஆகும்.அனுபமா தார்வாடு மற்றும் பெங்களூரில் மருத்துவராகப் பயிற்சி பெற்றார். ஆரம்பகாலம் முதலே சமூக பிரச்சினைகள் குறிப்பாக பெண்கள் பிரச்சினைகள் ஆகியவற்றை மையமாக வைத்து புதினங்கள் மற்றும் கதைகளை எழுதியுள்ளார்.[3] நவீன கன்னட இலக்கியத்தின் முற்போக்கு எழுத்தாளரான கன்னட எழுத்தாளர் நிரஞ்சனாவை மணந்தார். இவர்களது மகள்கள் தேஜஸ்வினி மற்றும் சீமந்தினி பரவலாக அறியப்பட்ட கல்வியாளர்கள். அனுபமா புற்றுநோயால் இறந்தார்.பெண்களுக்காக இவரது பெயரில் ஒரு விருது வழங்கப்படுகிறது. [4]

முக்கிய விருதுகள்[தொகு]

  • கருநாடக சாகித்ய அகாதமி விருது 
  • சோவியத் லேண்ட் நேரு விருது 

சான்றுகள்[தொகு]

  1. Women writing in India, p. 382.
  2. Photo on Kamat's Potpourri
  3. One of her stories
  4. "Anupama Award" இம் மூலத்தில் இருந்து 2004-06-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040621235803/http://www.hindu.com/2004/05/17/stories/2004051711800500.htm. 

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுபமா_நிரஞ்சனா&oldid=3542232" இருந்து மீள்விக்கப்பட்டது