எம். கே. இந்திரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம். கே. இந்திரா
பிறப்புமாலூரு கிருஷ்ணராவ் இந்திரா
(1917-01-05)5 சனவரி 1917
தீர்த்தஹள்ளி, மைசூர் அரசு, பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு15 மார்ச்சு 1994(1994-03-15) (அகவை 77)
தொழில்எழுத்தாளர்
தேசியம்இந்தியர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்பனியம்மா
துணைவர்கிருஷ்ணராவ்

மாலூரு கிருஷ்ணராவ் இந்திரா (Malooru Krishnarao Indira) (5 சனவரி 1917-15 மார்ச் 1994) இவர் கன்னட மொழியில் நன்கு அறியப்பட்ட இந்திய புதின ஆசிரியராவார். இவர் பல்வேறு மதிப்புமிக்க விருதுகளை வென்ற 'பனியம்மா' போன்ற புதினங்களை எழுதியுள்ளார். இவர் தனது நாற்பத்தைந்து வயதில் புதினங்களை எழுதத் தொடங்கினார். [1] இவரது சில புதினங்கள் திரைப்படங்களாக உருவாக்கப்பட்டுள்ளன.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

பிரித்தானிய இந்தியாவின் முந்தைய மைசூர் இராச்சியத்தில் தீர்த்தஹள்ளியில் வளமான விவசாயியான டி.சூர்யநாராயண ராவ் மற்றும் பனசங்கரம்மா என்பவருக்கும் 1917 சனவரி 5 ஆம் தேதி இந்திரா பிறந்தார். இவரது சொந்த கிராமம் சிக்மகளூர் மாவட்டத்தில் நரசிம்மராஜபுரா என்பதாகும். எம். கிருஷ்ணா ராவ் உடன் பன்னிரெண்டாவது வயதில் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு இவரது முறையான கல்வி ஏழு ஆண்டுகள் நீடித்தது. கன்னட கவிதைகளைப் படித்த இவருக்கு இந்தி இலக்கியம் குறித்த நல்ல அறிவும் இருந்தது. [1] தனது ஒரு புத்தகத்தில் கூறியது போல இந்திரா புகழ்பெற்ற எழுத்தாளர் திரிவேணியை மண்டியாவில் இருந்தபோது சந்தித்தார். திரிவேணி இவரது எழுத்துத் திறனைப் பாராட்டினார், இது கதைகள் மற்றும் புதினங்களை எழுதவும் அச்சு ஊடகங்களில் வெளியிடவும் தூண்டியது. நாற்பத்தைந்து வயதில் தாமதமாக புதினங்கள் எழுதத் தொடங்கினார். இவர் தனது 77 வயதில் இறந்தார். எம்.கே.இந்திரா புகழ்பெற்ற பத்திரிகையாளர் சூபானாவின் டி.எஸ்.ஆர் எனப் புகழ் பெற்ற டி.எஸ்.ராமச்சந்திர ராவின் இளைய சகோதரியாவார்.

தொழில்[தொகு]

இந்திராவின் முதல் வெளியிடப்பட்ட புதினம் 'துங்கபத்ரா' என்பதாகும். இது 1963 இல் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து 'சதானந்தா' (1965), 'கெஜ்ஜே பூஜே' (1966) மற்றும் 'நவரத்னா' (1967) போன்ற பிற புதினங்களும் படங்களாக வெளிவந்தன. 'கெஜ்ஜே பூஜே' என்ற இவரது ஒரு புதினம்1969 ஆம் ஆண்டில் இயக்குனர் புட்டண்ணா கனகலின் இயக்கத்தில் ஒரு படமாக உருவாக்கப்பட்டது. 1976 ஆம் ஆண்டில் வெளியான 'பனியம்மா' இவரது மிகவும் பிரபலமான படைப்பாகும். 'பனியம்மா' என்பது ஒரு குழந்தை விதவையின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதினமாகும். இந்திரா தனது குழந்தை பருவத்தில் அறிந்த ஒரு விதவையின் நிஜ வாழ்க்கை கதை இது. விதவை இந்திராவின் தாயிடம் விவரித்தபோது இந்திரா இக்கதையைக் கேட்டார். [2] இந்த புதினம் பெண்ணியம் தொடர்பான பல புத்தகங்களில் விவாதத்திற்குரிய விஷயமாக இருந்து வருகிறது. ]பனியம்மா]வை இயக்குனர் பிரேமா கரந்த் ஒரு படமாக உருவாக்கினார். மேலும் இந்த படம் பல சர்வதேச விருதுகளை வென்றது. [3] இந்திராவின் மற்ற புதினங்களான 'கெஜ்ஜே பூஜே', 'பூர்வபரா' போன்றவையும் படமாக்கப்பட்டுள்ளது. இந்திரா நாற்பது புதினங்களை எழுதியுள்ளார்.

இந்திராவின் புதினங்களான, 'துங்கபத்ரா', 'சதானந்தா', 'நவரத்னா' மற்றும் 'பனியம்மா' ஆகியவை கன்னட சாகித்ய அகாடமி விருதுகளை வென்றுள்ளது. [1] இந்த ஆண்டு விருது ஆண்டின் சிறந்த கன்னட இலக்கியங்களுக்கு வழங்கப்படுகிறது. இலக்கியத்திற்கான இவரது பங்களிப்பைக் கருத்தில் கொண்டு, இந்திராவின் பெயரில் ஒரு விருது அமைக்கப்பட்டு சிறந்த பெண் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படுகிறது. [4] தேஜஸ்வினி நிரஞ்சனா, என்பவர் 'பனியம்மா'வை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். மேலும் இந்த மொழிபெயர்ப்பு அவருக்கு சாகித்ய அகாதமி விருதையும் மேலும் பல விருதுகளையும் வென்றுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._கே._இந்திரா&oldid=3708225" இருந்து மீள்விக்கப்பட்டது