அனிக்காடு பகவதி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அனிக்காடு பகவதி கோயில் இந்தியாவின் கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் ள அனிக்காட்டில் அமைந்துள்ள பத்ரகாளி தேவியின் இந்துக் கோயிலாகும். இக்கோயில் மலையின் உச்சியில் கோயில் அமைந்துள்ளது. [1]

துணைத்தெய்வங்கள்[தொகு]

இங்கு மூலவரான பத்ரகாளி பால பத்ரகாளியாக, கிழக்கு நோக்கி உள்ளார். காளி தேவியின் இளம் வயது வடிவமே பால பத்ரகாளியாகும். இங்கு சிவன், முருகன், கணபதி, சாஸ்தாவு ஆகிய துணைத்தெய்வங்கள் உள்ளனர்.

திருவிழாக்கள்[தொகு]

தினமும் மூன்று கால பூஜைகள் நடைபெறுகின்றன. மலையாள மாதமான மீனத்தில் அவிட்டம் முதல் அஸ்வதி வரை நடைபெறும் 'காலமெழுத்துபாட்டு' இக்கோயிலின் முக்கிய திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனிக்காடு_பகவதி_கோயில்&oldid=3841322" இலிருந்து மீள்விக்கப்பட்டது