உள்ளடக்கத்துக்குச் செல்

அந்தோனியும் கிளியோபாத்ராவும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அந்தோனியும் கிளியோபாத்ராவும் சந்திப்பு (ஓவியம்: லாரன்சு அல்மா-தடேமா, 1884)

அந்தோனியும் கிளியோபாத்ராவும் (Antony and Cleopatra) என்பது வில்லியம் சேக்சுபியர் எழுதிய ஒரு துன்பியல் நாடகம் ஆகும். இந்நாடகம் முதன் முதலில் பிளாக்பிரையர்சு அரங்கு அல்லது குளோப் அரங்கில் 1607 ஆம் ஆண்டளவில் "கிங்சு மென்" என்ற நாடகக்குழுவால் மேடையேற்றப்பட்டது.[1][2] இது முதன்முதலில் 1623 இல் அச்சில் வெளிவந்தது. இந்த நாடகம் அந்தோனி மற்றும் கிளியோபட்ராவின் காதலையும் அவர்களது வீழ்ச்சியையும் சித்தாிக்கிறது.

இதன் கதை புளூட்டாக்கின் லைவ்ஸ் என்ற பண்டைய கிரேக்க மொழியில் எழுதப்பட்ட புதினத்தை தாமசு நோர்த் என்பவர் 1579 ஆம் ஆண்டில் மொழிபெயர்த்து வெளியிட்ட நூலை அடிப்படையாகக் கொண்டது. சிசிலியன் கிளர்ச்சியின் காலத்திலிருந்து உரோமைக் குடியரசின் இறுதிப் போரின் போது இடம்பெற்ற கிளியோபாட்ராவின் தற்கொலை வரை கிளியோபாட்ராவுக்கும் மார்க் அந்தோனிக்கும் இடையிலான உறவைச் சித்தரிக்கின்றது. முதலாவது உரோமைப் பேரரசரும் அந்தோனியின் சக வெற்றியாளர்களில் ஒருவருமான ஆக்டேவியஸ் சீசர் இக்கதையின் முக்கிய எதிரி. இந்தக் கதைக்களம் முக்கியமாக உரோமைக் குடியரசு மற்றும் தாலமைக்கு எகிப்தில் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் இக்கதைக்களத்தின் புவியியல் இருப்பிடம் கற்பனை அலெக்சாந்திரியா மற்றும் கடுமையான உரோமை நகரங்களுக்கிடையே மாறுகிறது.

கதைச் சுருக்கம்

[தொகு]

உரோமை நாட்டு ஆட்சியரில் அந்தோனி ஒரு முக்கிய பொறுப்பாளி ஆவார். அவர் தனது கடமையை விட்டு விலகி கிளியோபாட்ராவின் காதலில் மூழ்கி அலெக்சாந்திரியாவில் குடியேறுகிறார். ஆக்டேவியஸ் சீசர் அந்தோனியிடம் பலமுறை அழைப்பு விடுத்தும் அவர் உரோமாபுரிக்குத் திரும்பவில்லை. தன் தங்கையான ஆக்டேவியாவை மணம் முடித்து வைத்து அந்தோனியை உரோமில் இருக்க வைக்க நினைத்தார். அதுவும் தோல்வியில் முடிந்தது. அந்தோனி கடமையை மறந்து காதலின் பின்னால் சென்றதால் போரில் வீழ்ச்சி அடைந்து, உயிரை நீத்தார். கிளியோபாத்ராவும் ஆஸ்ப் நச்சுப் பாம்பைத் தன்னைக் கடிக்க வைத்து உயிரை நீத்தார்.

பதிப்பு

[தொகு]

ஆய்வாளர்கள் இந்த நாடகம் 1603-04 ஆம் வருடத்திற்குள் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். எழுத்து வடிவில் 1623 ஆம் ஆண்டு “பாஸ்ட் போலியோ” என்னும் தொகுப்பில் வெளியிடப்பட்டது. தற்போது இந்த நாடகத்தை ஐந்து பாகங்களாகப் பிரிக்கின்றனர். ஆனால் முந்தைய காலத்தில் ஷேக்ஸ்பியா் இதை 40 காட்சிகளாகவே வடிவமைத்திருந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Barroll, J. Leeds (1965). "The Chronology of Shakespeare's Jacobean Plays and the Dating of Antony and Cleopatra". Essays on Shakespeare. University Park, Pennsylvania: Penn State University Press. 115–162. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-271-73062-2. 
  2. Shakespeare, William (1998). "The Jacobean Antony and Cleopatra". In Madelaine, Richard (ed.). Antony and Cleopatra. கேம்பிரிட்ச்: கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். pp. 14–17. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-44306-7. {{cite book}}: Unknown parameter |sectionurl= ignored (help)