ஆஸ்ப் (பாம்பு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐரோப்பிய ஆஸ்ப், விபெரா ஆஸ்பிஸ்

ஆஸ்ப் (Asp (snake) என்பது " ஆஸ்பிஸ் " என்ற சொல்லின் நவீன ஆங்கிலமயமாக்கல் ஆகும். இது பழங்காலத்தில் நைல் பகுதியில் காணப்பட்ட பல நச்சுப் பாம்பு இனங்களில் ஏதேனும் ஒன்றைக் குறிப்பதாக உள்ளது. இந்த ஆஸ்பிஸ், என்ற பெயரானது கிரேக்க மொழிச் சொல்லாகும். இதற்கு "வைப்பர்" என்று பொருள்படும். [1] தற்போது உள்ள எகிப்திய நாகப்பாம்பே அக்காலத்தில் ஆஸ்பிஸ் என்று அழைக்கப்பட்டது என்று நம்பப்படுகிறது. [2]

வரலாற்று முக்கியத்துவம்[தொகு]

எகிப்திய அரச குலத்தின் காலம் மற்றும் ரோமானிய எகிப்து முழுவதும், ஆஸ்ப் அரச சின்னமாக இருந்துள்ளது. [3] எகிப்து, கிரேக்கம் ஆகிய பகுதிகளில், வழக்கமான மரணதண்டனை அளிப்பதற்கு பதில் கண்ணியமான மரணத்திற்கு தகுதியானவர்கள் என்று கருதப்பட்ட குற்றவாளிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்ற இதன் சக்திவாய்ந்த நஞ்சு பயன்படுத்தப்பட்டது.

கிரேக்கத் தொன்மவியலில் உள்ள பெர்சியசின் சில கதைகளில், மெடூசாவைக் கொன்ற பிறகு, பாலிடெக்டெஸ் மன்னருக்கு அவளது தலையைக் கொண்டு செல்ல பாலிடெக்ஸ் பறக்கும் செருப்பைப் பயன்படுத்தினார். அவர் எகிப்தின் மேல் பறந்து கொண்டிருந்தபோது, அவளுடைய குருதியில் சில துளிகள் தரையில் விழுந்தன. அதிலிருந்து ஆஸ்ப்ஸ் மற்றும் ஆம்பிஸ்பேனாவை உருவாக்கியது. [4]

புளூட்டாக்கின் கூற்றுப்படி, எகிப்திய அரசி கிளியோபாற்றா, தற்கொலைக்குத் தயாராகிய காலத்தில், குற்றறவாளி என்று முடிவு செய்யப்பட்டவர்கள் மீது பல்வேறு கொடிய நச்சுக்களைச் சோதித்துபார்த்தாள். முடிவில் ஆஸ்பிசின் கடிதால் (ஆஸ்பிஸ் என்ற கிரேக்க சொல்லுக்குப் பொதுவாக டோலமிக் எகிப்தில் எகிப்திய நாகப்பாம்பு என்று பொருள்படும். ஐரோப்பிய ஆஸ்ப் அல்ல) துன்பமின்றி இறப்பதற்கான வழி என்றும்; அதன் நச்சு வலி இல்லாமல் தூக்கத்தையும் மரணத்தையும் கொண்டு வரும் என்பதை அறிந்தாள். [5] இது ஒரு கொம்பு பாம்பு என்று சிலர் நம்புகிறார்கள். [2][6] 2010 ஆம் ஆண்டில், ஜெர்மன் வரலாற்றாசிரியர் கிறிஸ்டோஃப் ஷேஃபர் மற்றும் நச்சுவியலாளர் டீட்ரிச் மெப்ஸ், இந்த நிகழ்வைப் பற்றிய விரிவான ஆய்வு செய்த பிறகு, கிளேயோபற்றா தற்கொலை செய்துகொள்ள நச்சு விலங்கிடம் கடி வாங்குவதற்குப் பதிலாக ஹெம்லாக், உல்ப்செபியம், ஓபியம் ஆகியவற்றின் கலவையை பயன்படுத்தினார் என்ற முடிவுக்கு வந்தனர்.[7]

ஆயினும்கூட, வில்லியம் சேக்சுபியரின் படைப்பினால் கிளியோபற்றாவின் தற்கொலையில் ஆஸ்பியின் பங்கு பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளது:

With thy sharp teeth this knot intrinsicate
Of life at once untie: poor venomous fool
Be angry, and dispatch.

—Cleopatra, Act V, scene II
அந்தோனியும் கிளியோபாத்ராவும்

சேக்சுபியரின் நாடகமான ஒத்தெல்லோவின் காட்சி III இல் டெஸ்டெமோனா மீதான வெறுப்பை "ஆஸ்பிக்ஸ்' நாக்குகள்" நிறைந்ததாக ஓதெல்லோ குறிப்பிடுவது பிரபலமாக ஒப்பீடு ஆகும்.

பழ மரபுக் கதை[தொகு]

ஹிப்னாலிஸ் என்பது இடைக்கால பெஸ்டியரிகளில் விவரிக்கப்பட்ட ஒரு பழங்கால கற்பனை உயிரினமாகும் . பாதிக்கபட்டவர்களை தூக்கத்தில் கொல்லும் ஒரு வகை ஆஸ்ப் என்று இது விவரிக்கப்படுகிறது. [8] "கிளியோபற்றா அதைத் தன் மீது (அவளது மார்பகங்களில்) வைத்துக்கொண்டாள், இதனால் தூக்கம் போல் மரணத்தை அடைந்தாள்." [9]

குறிப்புகள்[தொகு]

  1. Gotch AF. 1986. Reptiles – Their Latin Names Explained. Poole, UK: Blandford Press. 176 pp. ISBN 0-7137-1704-1.
  2. 2.0 2.1 Schneemann, M.; R. Cathomas; S.T. Laidlaw; A.M. El Nahas; R.D.G. Theakston; D.A. Warrell (August 2004). "Life-threatening envenoming by the Saharan horned viper (Cerastes cerastes) causing micro-angiopathic haemolysis, coagulopathy and acute renal failure: clinical cases and review". QJM: An International Journal of Medicine 97 (11): 717–27. doi:10.1093/qjmed/hch118. பப்மெட்:15496528. "Whether Cleopatra used a snake as the instrument of her suicide has been long debated. Some favour the idea that she chose C. cerastes, but its venom is insufficiently potent, rapid and reliable. A more plausible candidate is the Egyptian cobra or 'asp' (Naja haje).". 
  3. "Battle of Actium (31 B.C.)". The Greenhaven Encyclopedia of Ancient Greece. Don Nardo. Ed. Robert B. Kebric. Detroit: Greenhaven Press, 2007. 71-72. World History in Context. Web. 30 Mar. 2016.\
  4. Lucan, Pharisaical, (c.61-65), trans. Robert Graves, book IX
  5. Crawford, Amy (April 1, 2007). "Who Was Cleopatra? Mythology, propaganda, Liz Taylor and the real Queen of the Nile". Smithsonian.com. http://www.smithsonianmag.com/history-archaeology/biography/cleopatra.html. 
  6. Kinghorn, A. M. (March 1994). "'All joy o' the worm' or, death by asp or asps unknown in act v of Antony and Cleopatra". English Studies 75 (2): 104–9. doi:10.1080/00138389408598902. "The venomous reptile commonly known today as 'Cleopatra's asp' is a Cobra (Cerastes cornutus)". 
  7. Melissa Gray (2010-06-30). "Poison, not snake, killed Cleopatra, scholar says - Cleopatra died a quiet and pain free death, historian alleges.". CNN. http://articles.cnn.com/2010-06-30/world/cleopatra.suicide_1_cleopatra-snake-cobra?_s=PM:WORLD. 
  8. Grant, Robert M. (2002-01-04) (in en). Early Christians and Animals. Taylor & Francis. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-203-01747-0. https://books.google.com/books?id=Ds4cpDsVJn0C&dq=hypnalis%2520snake&pg=PA139. 
  9. Clark, Willene B. (2006). A Medieval Book of Beasts: The Second-family Bestiary : Commentary, Art, Text and Translation. Boydell Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780851156828. https://books.google.com/books?id=0olPRmCoE8MC&dq=hypnalis&pg=PA198. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆஸ்ப்_(பாம்பு)&oldid=3681149" இருந்து மீள்விக்கப்பட்டது