அந்தோணி அமல்ராசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அமல்ராஜ் அந்தோணி அற்புதராஜ்
முழுப்பெயர்அமல்ராஜ் அந்தோணி அற்புதராஜ்
தேசியம்இந்தியர்
பிறப்பு24 சனவரி 1986 (1986-01-24) (அகவை 33)
போளூர், தமிழ்நாடு, இந்தியா
உயரம்1.6 m (5 ft 3 in)
எடை64 kg (141 lb; 10.1 st)

24 சனவரி 1986ல் பிறந்த அமல்ராசு அந்தோணி, இந்திய மாநிலமான தமிழ்நாட்டைச் சார்ந்த ஒரு மேசைப்பந்தாட்ட வீரராவார். 2014ல் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இரட்டையர் பிரிவில் சரத் கமலுடன் இணைந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார் .[1] 2012 சனவரியில் இந்திய தேர்ந்த வீரரான சரத் கமலை,  தேசிய மேசைப்பந்தாட்ட போட்டியில் இறுதி சுற்றில் வென்றார்.[2] 2017ல் அர்ச்சுனா விருதினைப் பெற்றார்.[3] 2018ல் கோல்ட் கோஸ்ட், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் அணி பிரிவில் சரத் கமல், கர்மித் தேசாய், சத்தியன் ஞானசேகரன் மற்றும் சுனில் செட்டியுடன் இணைந்து தங்கப் பதக்கத்தை வென்றார்.[4]

References[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தோணி_அமல்ராசு&oldid=2758300" இருந்து மீள்விக்கப்பட்டது