சத்தியன் ஞானசேகரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சத்தியன் ஞானசேகரன்
Sathiyan Gnanasekaran
தங்கப் பதக்கத்துடன் சத்தியன் ஞானசேகரன் (2018)
தனிநபர் தகவல்
பிறந்த பெயர்சத்தியன் ஞானசேகரன்[1]
தேசியம்இஎதியன்
பிறப்பு8 சனவரி 1993 (1993-01-08) (அகவை 31)
இந்தியா, தமிழ்நாடு, சென்னை
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுமேசைப் பந்து
சாதனைகளும் விருதுகளும்
மிகவுயர் உலக தரவரிசை24
பதக்கத் தகவல்கள்

ஆடவர் மேசைப் பந்து

நாடு இந்தியா
ITTF முதன்மை- பல்கேரியா 2017
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் பல்கேரியா ஆடவர் இரட்டையர்
ITTF முதன்மை - சுவீடிசு 2017
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் சுவீடன் ஆடவர் இரட்டையர்
ITTF சாம்பியன் - பெல்சியம் 2017
தங்கப் பதக்கம் – முதலிடம் பெல்சியம் ஆடவர் ஒற்றையர்

சத்தியன் ஞானசேகரன் (Sathiyan Gnanasekaran) என்பவர் ஓர் இந்திய மேசைப் பந்து விளையாட்டு வீரர் ஆவார். 2019 ஆம் ஆண்டிற்கான மேசைப் பந்து விளையாட்டு உலக தரவரிசையின் படி இவர் 25 ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். 2011 ஆம் ஆண்டு நடந்த உலக இளையோர் மேசைப்பந்து சாம்பியன் பட்டப்போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணியில் இவரும் ஓர் உறுப்பினராக இருந்தார். அனைத்துலக மேசைப் பந்து கூட்டமைப்பின் மேசைபந்து வீர்ர்கள் தரவரிசையில் மிக உயர்ந்த இடத்தை பிடித்துள்ள இந்தியர் என்ற பெருமை சத்தியனுக்கு உரியதாகும். சில மாதங்களுக்கு முன்பு வரை அத் தரவரிசையில் முதல் 100 இடங்களுக்குள் இருந்திராத சத்தியன் தற்போது தரவரிசையில் 28 வது இடத்தில் உள்ளார். செருமனிய விளையாட்டுச் சங்கம் குருன்வெட்டர்பாச் சார்பாக நட்த்தப்படும் மிகவுயர்ந்த செர்மன் புண்டிசிலிகா முதல் பிரிவு மேசைப்பந்து போட்டிகளில் விளையாடுவதற்காக சத்தியன் சமீபத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்திய கோ விளையாட்டு அறக்கட்டளை அமைப்பு வழியாக இராகுல் திராவிட் தடகள வழிகாட்டுதல் திட்டத்தின் மூலம் சத்தியன் தற்போது ஆதரிக்கப்படுகிறார்.

வாழ்க்கை[தொகு]

சத்தியன் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையைச் சேர்ந்தவர் ஆவார். சென்னையின் அரும்பாக்கத்திலுள்ள உள்ள கோலபெருமாள் செட்டி வைசனவா மேல்நிலைச் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்புவரை படித்தார். சென்னையில் உள்ள புனித சான் பொறியியல் கல்லூரியில் பொறியியல் படிப்பை மேற்கொண்ட இவர் ஒரு பொறியாளர் பட்டம் பெற்ற பட்டதாரியும் ஆவார்.

சாதனைகளும் விருதுகளும்[தொகு]

2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பெல்சியம் நாட்டில் நடைபெற்ற மேசை பந்து ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டியில் வெற்றிபெற்றார். இது அவருடைய முதல் பட்டமாகும். பெல்சியத்தில் விளையாடிய இறுதிப் போட்டியில் உள்ளூர் பெல்சிய விளையாட்டு வீரர் நியுடிங்கு செத்ரிக்கை 4-0 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தினார் என்பது சிறப்பம்சம் ஆகும். 15-13, 11-6, 11-2, 17-15 என்ற புள்ளிகள் கணக்கில் அந்த இறுதிப் போட்டி அமைந்த்து [2] இந்த வெற்றியால் அனைத்துலக மேசைப் பந்து கூட்டமைப்பு நடத்திய மேசைப்பந்து போட்டியை வெற்றிபெற்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமை சத்தியனுக்கு கிடைத்தது. சத்தியனுக்கு 2017 ஆம் ஆண்டு ஒரு சிறந்த ஆண்டாகவும் அமைந்தது. ஏனெனில் அனைத்துலக மேசைப் பந்து கூட்டமைப்பு தாய்லாந்தில் நட்த்திய போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். மேலும் பெல்சியம் போட்டி, சுவீடியப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பல்கேரியா ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெற்றி . எசுப்பானிய ஆடவர் ஒற்றையர் பிரிவில் தங்கப்பதக்கம், என பல போட்டிகளை வென்றார். 2018 ஆம் ஆண்டு உலக சுற்றுலா பிளாட்டினம் கதார் ஒபன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டியில் உலக தரவரிசையில் 27 ஆம் இடத்திலுள்ள யுயா ஒசிமாவை தோற்கடித்தார்.[3]

விருதுகள்[தொகு]

இந்திய டைம்சு விளையாட்டு நிறுவனம் சார்பாக வழங்கப்படும் 2018 ஆம் ஆண்டின் சிறந்த மேசை பந்து விளையாட்டு வீரர் விருது சத்தியனுக்கு வழங்கப்பட்டது. இந்திய அரசு வழங்கும் 2018 ஆம் ஆண்டிற்கான அர்சுணா விருதையும் இவர் பெற்றார்,

மேற்கோள்கள்[தொகு]

  1. http://results.ittf.link/index.php?option=com_fabrik&view=details&formid=99&rowid=103126&Itemid=266
  2. "Sathiyan Gnanasekaran wins Belgium Open". ESPN. 28 September 2016. பார்க்கப்பட்ட நாள் 30 September 2016.
  3. "Sathiyan Gnanasekaran adds to title haul, wins in Almeria - International Table Tennis Federation" (in en-GB). International Table Tennis Federation. 2017-11-26. https://www.ittf.com/2017/11/26/sathiyan-gnanasekaran-adds-title-haul-wins-almeria/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்தியன்_ஞானசேகரன்&oldid=3490696" இலிருந்து மீள்விக்கப்பட்டது