அதிர்ச்சிக்குப் பிறகான மன அழுத்தப் பாதிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அதிர்ச்சிக்குப் பிறகான மன அழுத்தப் பாதிப்பு
Post-traumatic stress disorder
A mask, painted by a Marine who attends art therapy to relieve post-traumatic stress disorder symptoms, USMC-120503-M-9426J-001.jpg
கலைசார் சிகிச்சைத் திட்டமானது அமெரிக்க கடற்படைக்காக, அதிர்ச்சிக்குப் பிறகான மன அழுத்தப் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்காக உருவாக்கப்பட்டது
சிறப்புமனநோய் சிகிச்சை, உளநோய் தீர் உளவியல்
அறிகுறிகள்தொல்லையளிக்கும் எண்ணங்கள், உணர்வுகள் அல்லது கனவுகள் இந்த நிகழ்வுடன் தொடர்புடையவை; அதிர்ச்சி தொடர்பான குறிப்புகளின் மனம் அல்லது உடல்சார்ந்த அழுத்தம்; அதிர்ச்சி தொடர்பான சூழ்நிலைகளைத் தவிர்ப்பதற்கான முயற்சிகள்; அதிகமாக இருக்கும் சண்டைபோடுதல் தூண்டல்[1]
சிக்கல்கள்தற்கொலை[2]
கால அளவு> 1 மாதம்[1]
காரணங்கள்அதிர்ச்சிகரமான நிகழ்வு ஏற்படல்[1]
நோயறிதல்அறிகுறிகளின் அடிப்படையில்[2]
சிகிச்சைஆலோசனை, தியானம்[3]
மருந்துதேர்ந்தெடுக்கப்பட்ட செரோடோனின் மறு உபயோகத் தடுப்பான்[4]
Frequency8.7% (வாழ்நாள் நோய்த்தாக்கம்); 3.5% (12 மாத ஆபத்து) (அமெரிக்கா)[5]

அதிர்ச்சிக்குப் பிறகான மன அழுத்தப் பாதிப்பு (Post-traumatic stress disorder, PTSD) என்பது ஒரு மனநிலை சார்ந்த பாதிப்பு ஆகும், இது ஒருவருக்கு மன அதிர்ச்சி ஏற்பட்ட பிறகு ஏற்படலாம், அதாவது பாலியல் வன்முறை, போர் நடவடிக்கை, சாலை விபத்துகள் அல்லது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பிற நிகழ்வுகள் போன்றவை.[1] இதன் அறிகுறிகளில் தொல்லையூட்டும் எண்ணங்கள், உணர்வுகள் அல்லது நிகழ்வுகளுடன் தொடர்புடைய கனவுகள், மனம் அல்லது உடல் அழுத்தம் முதல் மன அதிர்ச்சி தொடர்பான தாக்கங்கள் வரை இருக்கலாம், மன அதிர்ச்சி சார்ந்த எண்ணங்களைத் தவிர்க்க முயலுதல், ஒருவர் எவ்வாறு நினைப்பார் மற்றும் உணர்வார் என்பதை மாற்றி யோசித்தல் மற்றும் சண்டைபோடு தூண்டல் அதிகமாக இருத்தல்.[1][3] இந்த அறிகுறிகள் நிகழ்வு ஏற்பட்டு ஒரு மாதத்திற்கு அதிகமாகவும் நீடிக்கலாம்.[1] இளம் குழந்தைகள் தங்கள் மன அழுத்தத்தைக் காட்டுவது குறைவுதான், எனினும் அதற்குப் பதிலாக விளையாடுதல் மூலம் தங்கள் நினைவுகளை வெளிப்படுத்தலாம்.[1] PTSD பாதிப்பு கொண்டவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் மற்றும் சுயமாகக் காயம் ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு மிகவும் அதிகம்.[2][6]

மன அதிர்ச்சி ஏற்பட்டுள்ள பெரும்பாலானவர்களுக்கு PTSD ஏற்படுவதில்லை.[2] நேரடி மனிதர்கள் ஈடுபட்ட மன அதிர்ச்சியால் (எடுத்துக்கட்டாக, கற்பழிப்பு அல்லது குழந்தைச் சித்திரவதை போன்றவை) பாதிக்கப்பட்டவர்களுக்கு, துன்புறுத்தல் அல்லாத பாதிப்புகளான விபத்துகள் மற்றும் இயற்கைப் பேரழிவுகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களைவிட PTSD ஏற்படும் வாய்ப்பு அதிகம்.[7] கற்பழிப்பால் பாதிக்கப்பட்ட பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு PTSD ஏற்படுகிறது.[2] குழந்தைகளின் வயது 10-க்குள் இருந்தால் அவர்களுக்கு PTSD ஏற்படும் வாய்ப்பு பெரியவர்களைவிடக் குறைவாகும்.[8] அதிர்ச்சிகரமான சம்பவத்தைத் தொடர்ந்து குறிப்பிட்ட அறிகுறிகள் ஏற்படுவதன் அடிப்படையில் நோயறிதல் இருக்கும்.[2]

சிகிச்சையை, அறிகுறிகள் ஆரம்பநிலையில் இருக்கும் போதே தொடங்குவது பயனளிக்கலாம், எனினும் அறிகுறிகள் உள்ள அல்லது இல்லாத எல்லாத் தனிநபர்களுக்கும் சிகிச்சை அளிப்பது பலனளிக்காமல் போகலாம்.[2] PTSD பாதிப்பு கொண்டவர்களுக்கான முதன்மை சிகிச்சைகளாக ஆலோசனை மற்றும் மருந்து உள்ளது.[3] பலதரப்பட்ட சிகிச்சை முறைகள் பயனளிக்கலாம்.[9] இது ஒரே ஒரு நபரின் நேரடி சிகிச்சை அல்லது குழு சார்ந்த சிகிச்சையாகவோ இருக்கலாம்.[3] மன அழுத்த மேம்பாட்டுச் சிகிச்சைகளான தேர்ந்தெடுக்கப்பட்ட செரோடோனின் மறு உபயோகத் தடுப்பான் வகை சிகிச்சை PTSD-க்கான முதல்நிலை மருத்துவமாகும், இது சுமார் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்குப் பலனளிக்கிறது.[4] இவற்றின் பலன்கள் பிற சிகிச்சையை விடக் குறைவாகும்.[2] மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகள் ஆகியவற்றை இணைத்துப் பயன்படுத்துவது மிகுந்த பயன் கொண்டதாக உள்ளதா என்பது தெளிவாக இல்லை.[2][10] பிற மருந்துகள் பலனளிக்கிறதா என்பதற்குப் போதுமான சான்றுகள் இல்லை, சில வழக்குகளில் பென்சோடயசிபைன்ஸ் விளைவுகளை மோசமாக்குகின்றன.[11][12]

கொடுக்கப்பட்டுள்ள ஆண்டில் அமெரிக்காவில் உள்ள 3.5% பெரியவர்களுக்கு PTSD ஏற்படுகிறது, இது 9% மக்களை அவர்களின் வாழ்க்கையில் ஏதாவது ஒரு காலகட்டத்தில் பாதிக்கிறது.[1] உலகின் மற்ற இடங்களில் கொடுக்கப்பட்டுள்ள ஆண்டில் பாதிப்பு 0.5% மற்றும் 1% ஆகியவற்றுக்கு இடையில் உள்ளது.[1] ஆயுத மோதல்கள் ஏற்படும் இடங்களில் இந்த விகிதம் அதிகமாக உள்ளது.[2] இந்த நோய் பொதுவாக ஆண்களைவிடப் பெண்களை அதிகம் பாதிக்கிறது.[3] பண்டைய கிரேக்கர்களில் குறைந்தபட்சம் ஒருமுறை மன அதிர்ச்சி தொடர்பான மனநிலைப் பாதிப்புகளின் அறிகுறிகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.[13] உலகப் போர்களின் போது இந்த நிலைமை "ஷெல் அதிர்ச்சி" மற்றும் "காம்பேக்ட் நியூரோசிஸ்" போன்ற சொற்களில் அறியப்பட்டது.[14] "அதிர்ச்சிக்குப் பிறகான மன அழுத்தப் பாதிப்பு" என்ற பதம் 1970களில் அமெரிக்க இராணுவ வீரர்கள் வியட்நாம் போரில் கலந்துகொண்டு திரும்பிய பிறகு அதிகமானவர்களுக்குத் தாக்கம் கண்டறியப்பட்டதால் ஏற்பட்டது.[15] இது அதிகாரப்பூர்வமாக அமெரிக்க உளவியல் சங்கத்தால் 1980 ஆம் ஆண்டில் மன நோய்களைக் கண்டறிதல் மற்றும் புள்ளிவிவர கையேடு (DSM-III)-இன் மூன்றாம் பதிப்பில் அங்கீகரிக்கப்பட்டது.[16]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 American Psychiatric Association (2013). Diagnostic and Statistical Manual of Mental Disorders (5th ). Arlington, VA: American Psychiatric Publishing. பக். 271–280. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-89042-555-8. 
 2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 2.8 2.9 "Post-traumatic stress disorder". Bmj 351: h6161. November 2015. doi:10.1136/bmj.h6161. பப்மெட்:26611143. 
 3. 3.0 3.1 3.2 3.3 3.4 "Post-Traumatic Stress Disorder" (February 2016). மூல முகவரியிலிருந்து 9 March 2016 அன்று பரணிடப்பட்டது.
 4. 4.0 4.1 "Pharmacologic alternatives to antidepressants in posttraumatic stress disorder: a systematic review". Progress in Neuro-Psychopharmacology & Biological Psychiatry 33 (2): 169–80. March 2009. doi:10.1016/j.pnpbp.2008.12.004. பப்மெட்:19141307. 
 5. Diagnostic and statistical manual of mental disorders: DSM-5.. American Psychiatric Association (5th ). Arlington, VA: American Psychiatric Association. 2013. பக். 276. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780890425558. இணையக் கணினி நூலக மையம்:830807378. https://www.worldcat.org/oclc/830807378. 
 6. "Suicidality and posttraumatic stress disorder (PTSD) in adolescents: a systematic review and meta-analysis". Social Psychiatry and Psychiatric Epidemiology 50 (4): 525–37. April 2015. doi:10.1007/s00127-014-0978-x. பப்மெட்:25398198. 
 7. "Current status on behavioral and biological markers of PTSD: a search for clarity in a conflicting literature". Neuroscience and Biobehavioral Reviews 37 (5): 860–95. June 2013. doi:10.1016/j.neubiorev.2013.03.024. பப்மெட்:23567521. 
 8. National Collaborating Centre for Mental Health (UK) (2005). "Post-Traumatic Stress Disorder: The Management of PTSD in Adults and Children in Primary and Secondary Care". NICE Clinical Guidelines, No. 26. Gaskell (Royal College of Psychiatrists). மூல முகவரியிலிருந்து 2017-09-08 அன்று பரணிடப்பட்டது. open access publication - free to read
 9. "The efficacy of recommended treatments for veterans with PTSD: A metaregression analysis". Clinical Psychology Review 40: 184–94. August 2015. doi:10.1016/j.cpr.2015.06.008. பப்மெட்:26164548. 
 10. "Combined pharmacotherapy and psychological therapies for post traumatic stress disorder (PTSD)". The Cochrane Database of Systematic Reviews (7): CD007316. July 2010. doi:10.1002/14651858.CD007316.pub2. பப்மெட்:20614457. 
 11. "Benzodiazepines for PTSD: A Systematic Review and Meta-Analysis". Journal of Psychiatric Practice 21 (4): 281–303. July 2015. doi:10.1097/pra.0000000000000091. பப்மெட்:26164054. 
 12. "Pharmacotherapy for post-traumatic stress disorder: systematic review and meta-analysis". The British Journal of Psychiatry 206 (2): 93–100. February 2015. doi:10.1192/bjp.bp.114.148551. பப்மெட்:25644881. "Some drugs have a small positive impact on PTSD symptoms". 
 13. Carlstedt, Roland (2009). Handbook of Integrative Clinical Psychology, Psychiatry, and Behavioral Medicine Perspectives, Practices, and Research.. New York: Springer Pub. Co.. பக். 353. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780826110954. https://books.google.com/books?id=4Tkdm1vRFbUC&pg=PA353. 
 14. Herman, Judith (2015). Trauma and Recovery: The Aftermath of Violence–From Domestic Abuse to Political Terror. Basic Books. பக். 9. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780465098736. https://books.google.com/books?id=ABhpCQAAQBAJ&. 
 15. Klykylo, William M. (2012). Clinical child psychiatry (3. ). Chichester, West Sussex, UK: John Wiley & Sons. பக். Chapter 15. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781119967705. https://books.google.com/books?id=EL8eMEkxzkYC&pg=PT411. 
 16. "Finalizing PTSD in DSM-5: getting here from there and where to go next". Journal of Traumatic Stress 26 (5): 548–56. October 2013. doi:10.1002/jts.21840. பப்மெட்:24151001. 

புற இணைப்புகள்[தொகு]