அட்டோமியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அட்டோமியம்
தகவல்
அமைவிடம் பிரசெல்சு, பெல்ஜியம்
நிலை Complete
கட்டப்பட்டது 1958
உயரம்
Antenna/Spire 102 மீற்றர்கள் (335 ft)
நிறுவனங்கள்
கட்டிடக்கலைஞர் ஆன்ட்ரே வாட்டர்கெயின்

அட்டோமியம் (Atomium) என்பது எக்சுப்போ 58 எனப்படும், 1958 ஆம் ஆண்டின் பிரசெல்சு உலக விழாவுக்காகக் கட்டப்பட்ட ஒரு நினைவுச்சின்னம் ஆகும். ஆன்ட்ரே வாட்டர்கெயின் (André Waterkeyn) என்பவரால் வடிவமைக்கப்பட்ட இதன் உயரம் 102 மீட்டர்கள் (335 அடிகள்). இரும்புப் படிகத்தின் அணு அமைப்பை ஒத்ததாக, ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட ஒன்பது உருக்குக் கோளங்களினால் ஆன இது ஒரு படிக மூல அமைப்பின் 165 பில்லியன் மடங்கு அளவு கொண்டது.

ஒவ்வொன்றும் 18 மீட்டர் விட்டம் கொண்ட ஒன்பது கோளங்களில் எட்டுக் கோளங்கள், ஒரு கனக் குற்றி வடிவச் சட்டக வடிவின் எட்டு உச்சிகளிலும் அமைந்துள்ளன. ஒன்பதாவது மூலைவிட்டங்களால் இணைக்கப்பட்டுக் கன வடிவத்தின் மையத்தில் உள்ளது. இக் கன வடிவ அமைப்பின் விளிம்புகள் வழியே அமைந்து கோளங்களை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் குளாய்கள் நகர்படிகளைக் கொண்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்தி ஒரு கோளத்தில் இருந்து இன்னொரு கோளத்துக்குச் செல்ல முடியும். இக் கோளங்களுக்குள் காட்சிக் கூடங்களும், பிற பொதுப் பயன்பாட்டு இடங்களும் அமைக்கப்பட்டுள்ளன. உச்சியில் உள்ள கோளத்தில் இருந்து பிரசல்சு நகரின் விரிந்த பார்வையைப் பெற முடியும். நடுவில் நிலைக்குத்தாக அமைந்த குளாய் ஒரு உயர்த்தியைக் கொண்டுள்ளது. இது ஒரு செக்கனுக்கு 5 மைல்கள் வேகத்தில் செல்லக்கூடியது.

வரலாறு[தொகு]

இந்த நினைவுச் சின்னத்தை தொடக்கத்தில் ஈபெல் கோபுரம் தலைகீழாக அமைந்தது போன்ற ஒரு வடிவத்தில் அமைக்க ஆலோசிக்கப்பட்டது. ஆனால், வாட்டர்கெயின் ஒரு அணு அமைப்பைப் போன்ற வடிவம் குறித்த காலப்பகுதிக்கு ஒரு குறியீடாக அமையும் எனக் கருதினார். முதலில் இக்கட்டிடம் ஆறு மாதத்துக்கு மட்டுமே வைத்திருப்பது என முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், விரைவிலேயே இது பிரசில்சு உலாக விழாவுக்கான நினைவுச்சின்னமாக மட்டுமன்றி, தற்காலக் கட்டிடக்கலைக்கான குறியீடாகவும் இருக்கும் என உணரப்பட்டதால் அது அகற்றப்படாமல் 50 ஆண்டு காலம் வரை அப்படியே இருந்தது.

திருத்தவேலை[தொகு]

மார்ச் 2004 ஆம் ஆண்டில் திருத்தவேலைகள் தொடங்கப்பட்டன. இதனால் இது 2006 பெப்ரவரி 18 ஆம் தேதி வரை பொதுமக்கள் பார்வைக்கு மூடப்பட்டு இருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அட்டோமியம்&oldid=2069924" இருந்து மீள்விக்கப்பட்டது