அடோபி இமேச்ரெடி
விண்டோஸ் எக்ஸ்பியில் அடோப் இமேஜ்ரெடி சி. எசு. 2 | |
உருவாக்குனர் | அடோப் சிஸ்டம்ஸ் |
---|---|
அண்மை வெளியீடு | சி. எசு. 2 (9.0) / 2005 |
இயக்கு முறைமை | விண்டோசு, மாக் ஓ. எசு. எக்சு |
உருவாக்க நிலை | கைவிடப்பட்டது |
மென்பொருள் வகைமை | துகள் வரைபட உருவ வரைகலை திருத்தி |
உரிமம் | வணிகம் |
இணையத்தளம் | இல்லை |
அடோபி இமேச்ரெடி (Adobe ImageReady) என்பது அடோப் சிஸ்டம்சினால் ஏறத்தாழப் பத்து ஆண்டுகளாக அடோப் போட்டோசாப்புடன் இணைத்து வழங்கப்பட்ட துகள் வரைபட உருவ வரைகலை திருத்தி மென்பொருள் ஆகும்.[1] இமேஜ்ரெடியானது சி++ என்ற நிகழ்ச்சிநிரலாக்க மொழியில் எழுதப்பட்டுள்ளது.[2] இம்மென்பொருள் விண்டோசு இயங்குதளத்திலும் மாக் ஓ. எசு. எக்சு இயங்குதளத்திலும் இயக்கக்கூடியதாக வெளியிடப்பட்டது.[3] பிறகு இந்த மென்பொருளைத் தயாரித்தல் அடோப் சிஸ்டம்சினால் கைவிடப்பட்டது.[4]
போட்டோசாப்பை விட இமேஜ்ரெடி குறைந்த வசதிகளையே கொண்டுள்ளது. ஆனாலும் வலை வரைகலையை விரைவாகத் தொகுப்பதற்கு இமேஜ்ரெடி உதவுகின்றது.
ஆரம்ப காலத்தில், போட்டோசாப் கருவிப் பெட்டியில் இமேஜ்ரெடிக்கான தொடுப்பு இருந்தது.[5] இத்தொடுப்பு, போட்டோசாப்பில் தொகுத்துக் கொண்டிருந்த அதே படிமத்தை இமேஜ்ரெடியிலும் தொகுப்பதற்கு உதவியது.
இமேஜ்ரெடியின் கருவிப் பெட்டியானது அடோப் போட்டோசாப்பின் கருவிப் பெட்டியை ஒத்தது.
வெளியீட்டு வரலாறு
[தொகு]அடோப் இமேஜ்ரெடி 1.0ஆனது தனிச் செயலியாகவே வெளியிடப்பட்டது. ஆனாலும் பின்னைய பதிப்புகள் போட்டோசாப்புடன் இணைத்து வழங்கப்பட்டன.
வெளியீடு | பதிப்பு இல. | திகதி | இணைக்கப்பட்டது |
---|---|---|---|
முதலாவது | பதிப்பு 1.0 | 1998 சூலை | இல்லை (தனித் தயாரிப்பாக வெளியிடப்பட்டது.) |
இரண்டாவது | பதிப்பு 2 | 1999 சூலை | போட்டோசாப் 5.5 |
மூன்றாவது | பதிப்பு 3 | 2000 அக்டோபர் | போட்டோசாப் 6.0 |
நான்காவது | பதிப்பு 7 | 2002 பெப்ரவரி | போட்டோசாப் 7.0 |
ஐந்தாவது | பதிப்பு 8 (சி. எசு.) | 2003 அக்டோபர் | போட்டோசாப் 8.0 சி. எசு. |
ஆறாவது | பதிப்பு 9 (சி. எசு. 2) | 2005 மே | போட்டோசாப் 9.0 சி. எசு. 2 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ அடோப் போட்டோசாப்/இமேஜ்ரெடியில் அசைவூட்டம் (ஆங்கில மொழியில்)
- ↑ ["சி++ செயலிகள் (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2011-05-11. பார்க்கப்பட்ட நாள் 2012-04-12. சி++ செயலிகள் (ஆங்கில மொழியில்)]
- ↑ அடோப் இமேஜ் ரெடியைப் பற்றி (ஆங்கில மொழியில்)
- ↑ அடோப் இமேஜ்ரெடி (ஆங்கில மொழியில்)
- ↑ போட்டோசாப் கருவி்ப் பெட்டி (ஆங்கில மொழியில்)