அடூர் பங்கஜம்
அடூர் பங்கஜம் | |
---|---|
பிறப்பு | 1929 அடூர், ![]() |
இறப்பு | 26 ஜூன் 2010 அடூர், கேரளா, ![]() |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1937–1996 |
பெற்றோர் | கே. இராமன் பில்லா, குன்சுகுஞ்சம்மா |
வாழ்க்கைத் துணை | தாமோதரன் பொட்டி |
பிள்ளைகள் | அஜயன் |
அடூர் பங்கஜம் (1929 - 26 ஜூன் 2010) என்பவர் இந்திய நடிகை ஆவார். இவர் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அடூரில் பிறந்தார்.[1] இவர் துணை நடிகையாகவும் நகைச்சுவை நடிகையாகவும் பல படங்களில் நடித்துள்ளார். இவரது சகோதரி அடூர் பவானியும் மலையாள திரைத்துறை நடிகை ஆவார். [2]
பங்கஜம் நடித்த மிகவும் குறிப்பிடத்தக்கப் படமாக, தேசிய விருது பெற்ற செம்மீன் உள்ளது. இத்திரைப்படத்தில் இவர் "நல்ல பெண்ணு" எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தியாவின் முதல் நியோ-ரியலிஸ்டிக் படமான நியூஸ்பேப்பர் பாய் (1955) படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். 2008ஆம் ஆண்டில், கேரள சங்கீத நாடக கழகம் பங்கஜம் மற்றும் பவானி சகோதரிகளின் நாடகம் மற்றும் திரைத்துறை பங்களிப்பிற்காகக் கவுரவித்தது.[3]
இவர் தனது 81ஆவது வயதில் 26 ஜூன் 2010 அன்று இறந்தார்.
தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]
அடூர் பங்கஜம் 1925இல் அடூர் பரப்புரத்து குஞ்சுராமன் பிள்ளை மற்றும் குஞ்சூஞ்சம்மா ஆகியோருக்குப் மகளாகப் பிறந்தார். இக்குடும்பத்தில் மொத்தம் 8 குழந்தைகள். இவர்களில் இரண்டாவது குழந்தையாகப் பங்கஜம் பிறந்தார்.[1] இவரது சகோதரி அடூர் பவானியும் நாடகங்கள் மற்றும் திரைப்படங்கள் மூலம் பிரபலமானார்.
குடும்ப வறுமை காரணமாக இவரால் 4ஆம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடிந்தது. ஆனாலும் தனது 11வது வயது வரை பந்தளம் கிருஷ்ணபிள்ளை பாகவதரிடம் இசைப் படிப்பைத் தொடர்ந்தார். இந்த நேரத்தில், இவர் தனது கிராமத்தைச் சுற்றியுள்ள பெரும்பாலான கோவில்களில் இசைக் கச்சேரி செய்தார்.
12 வயதில், இவர் தனது பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக கண்ணூர் கேரள கலாநிலைய குழுவில் நடிக்கத் தொடங்கினார். இவர் 300க்கும் மேற்பட்ட மேடைகளில் மதுமதுரையம் என்ற நாடகத்தில் நடித்தார். இவரது அடுத்த நாடகம் ரக்தபந்தம் செங்கன்னூரில் உள்ள ஒரு திரையரங்கின் சார்பில் நடந்தது. இந்த நாடகத்தில், இவர் நகைச்சுவை பாத்திரத்தை ஏற்று நடித்தார். இவரது நடிப்பு பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
கொல்லம் பரத கலாசந்திரிகாவின் உரிமையாளரான தேவராஜன் பொட்டியை இந்த குழுவில் பணிபுரிந்தபோது இவர் சந்தித்தார். பின்னர் பொட்டியினை திருமணம் செய்து கொண்டார். பொட்டி பின்னர் பார்த்தசாரதி திரையரங்கம் என்ற மற்றொரு குழுவைத் தொடங்கினார். இந்த குழுவுடன் இவர் பணியாற்றிய காலத்தில், திரைப்படங்களில் நடிக்க அழைப்பு வந்தது.
அஜயன் என்ற திரைப்படம்/தொலைக்காட்சி நடிகர் இவரது மகன் ஆவார்.
தொழில்[தொகு]
கலாநிலைய நாடக சபையின் மது மதுரையம் என்ற மேடை நாடகத்துடன் தனது நடிப்புத் தொழிலைத் தொடங்கினார். இவரது முதல் திரைப்படம் பாப்பா சோமன் தயாரித்த பிரேமலேகானம். ஆனால் வெளியான முதல் திரைப்படம் போபன் குஞ்சாக்கோ இயக்கிய விசப்பின்டே வில . இவரது கடைசியாக நடித்த திரைப்படம் திலீப் நடித்த குஞ்சிகூனன். இவர் தனது வாழ்க்கையில் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
1976 ஆம் ஆண்டில், இவரும் இவரது சகோதரி அடூர் பவானியும் அடூர் ஜெயா திரையரங்கம் என்ற நாடகக் குழுவைத் தொடங்கினர். பின்னர் இச்சகோதரிகள் பிரிந்தனர்; பவானி குழுவினை விட்டு வெளியேறினார். பங்கஜம் தனது கணவர் தேவராஜன் பொட்டியுடன் தொடர்ந்து குழுவினை நடத்தினார். மேலும் அவர் 18 ஆண்டுகளுக்கும் மேலாக இந்நாடகக் குழுவினை சிறப்பாக நடத்தி வந்தார்.
2008 ஆம் ஆண்டில், கேரள சங்கீத நாடக குழுமம் பங்கஜம் மற்றும் பவானியை நாடகத்தின் ஒட்டுமொத்த பங்களிப்புக்காக கவுரவித்தது.[3] சபரிமலை அய்யப்பன் திரைப்படத்தில் நடித்ததற்காக இரண்டாவது சிறந்த நடிகைக்கான கேரள மாநில திரைப்பட விருதையும் பெற்றார்.
திரைப்படவியல்[தொகு]
1952ஆம் ஆண்டு அச்சன் திரைப்படத்தின் மூலம் நடிக்கத் தொடங்கிய இவர் 2014ஆம் ஆண்டில் தாரங்கள் திரைப்படம் வரை செம்மீன், நீலகிரி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
வருடம் | திரைப்படம் | கதாபாத்திரம் |
---|---|---|
2014 | தாரங்கள் | காப்பக காட்சிகள் |
2006 | அம்மாத்தொட்டில் | |
2004 | சினேகபூர்வம் | |
2003 | மார்கம் | |
2002 | அதீனா | |
2002 | குஞ்சிகூனன் | |
2001 | சினேகபூர்வம் அண்ணா | |
2001 | சூத்திரதரன் | ரமேசின் பாட்டி |
1998 | குடும்ப வார்த்தகள் | மீராவின் தாய் |
1998 | தடாகம் | மீனாட்சி தல்லா |
1997 | அடுக்கால ரஹஸ்யம் அங்காடி பாட்டு | கரிமேலி |
1996 | கார்பர் | பிளமேனா அம்மாச்சி |
1996 | மயூர நிருதம் | பவானியம்மா |
1995 | திரி மென் ஆர்மி | இந்திரா தேவியின் தாய் |
1995 | அச்சன் ராஜாவு அப்பன் | மரியம்மா |
1995 | தும்போலிகடப்புரம் | காக்கம்மா |
1995 | கதபுருஷன் | |
1995 | அரபிக்கடலோரம் | அசனின் தாய் |
1995 | ஆலஞ்சேரி தம்ப்ரக்கல் | கெட்டிலம்மா |
1995 | விருத்தன்மாரே சூக்ஷிக்குக | குசுமாவல்லி |
1993 | வரம் தரும் வடிவேலன்(தமிழ்) | தேவி |
1992 | அஹம் | மாரியம்மா |
1992 | குடும்பசம்மேதம் | |
1991 | பெரும்தச்சன் | உன்னிம்யா வள்ளியம்மை |
1991 | மேதினம் | மரியா |
1991 | நீலகிரி | முதியம்மா |
1990 | ஏய் ஆட்டோ | பங்கச்சி |
1990 | லால் சலாம் | |
1989 | சுவாகதம் | திருமதி பிள்ளை |
1989 | நஜன்களுதே கொச்சு டாக்டர் | |
1989 | ஆத்தினக்காரே | |
1988 | கண்டதும் கேட்டதும் | |
1988 | ஓகக்கச்சவாடம் | |
1987 | ஆனந்தரம் | லெட்சுமி அம்மா |
1981 | அரிக்காரி அம்மு | |
1981 | வாடகை வீட்டு அதிதி | |
1980 | பாலாட்டு குஞ்சிகண்ணன் | |
1980 | அம்மையும் மகளும் | பிரஹன்னலா |
1980 | தீக்கடல் | கார்த்தியாயனி |
1979 | ராஜவீதி | |
1979 | எடவாழியிலே பூச்சா மிண்டா பூச்சா | குஞ்சிக்காளியம்மா |
1978 | சக்கராயுதம் | |
1978 | கடத்தநாட்டு மாக்கம் | |
1978 | ஆறு மணிக்கூர் | |
1978 | படகுதிரை | |
1978 | வடக்கக்கொரு கிருதயம் | கார்த்தியாயனி |
1977 | சூண்டக்காரி | |
1977 | கொடியெட்டம் | |
1977 | கண்ணப்பனுண்ணி | |
1977 | ஆச்சாரம் அம்மினி ஓஷாரம் ஓமனா | கல்யாணி |
1976 | சென்னாய் வளர்த்திய குட்டி | பத்மாட்சி |
1976 | மல்லனும் மாதேவனும் | |
1976 | யக்ஷகணம் | நானியம்மா |
1975 | நீலா பொன்மான் | அக்கம்மா |
1975 | நீல சாரி | |
1975 | நத்தூன் | |
1975 | மா நிஷதா | |
1975 | தர்ம க்ஷேத்ரா குருக்ஷேத்ரா | |
1975 | பிரியமுல்லா சோபியா | |
1975 | சுவர்ணமால்யம் | |
1975 | சீன்வாலா | கார்த்தியாயனி |
1974 | வண்டிக்காரி | |
1974 | தேவி கன்னியாகுமரி | |
1974 | யுவனம் | |
1974 | துர்கா | யசோதா |
1974 | தும்போலார்ச்சா | பொண்ணி |
1973 | ராக்குயில் | மாதவி |
1973 | சுவர்கபுத்திரி | மரியகுட்டி |
1973 | பொன்னாபுரம் கோட்டா | கொச்சுகும்மா |
1973 | தேனருவி | கொத்தா |
1973 | பவங்கல் பெண்ணுங்கல் | |
1973 | யாமினி | தக்ஷாயணி |
1973 | பனிதீராத வீடு | உரோசி |
1973 | சாயம் | |
1973 | தொட்டவாடி | கமலம்மா |
1973 | ஏணிப்படிகள் | |
1972 | அத்யதே கதா | |
1972 | அரோமாளுன்னி | நாணிப்பெண்ணு |
1972 | பிரதிகாரம் | கமலம் |
1972 | போஸ்ட்மேன் கனனிலா | |
1972 | காந்தாரவக்ஷேத்திரம் | லில்லி |
1972 | ஒரு சுந்தரியுடே கத | பச்சியக்கா |
1972 | ஸ்ரீ குருவாயூரப்பன் | |
1971 | லோரா நீ எவிடே | |
1971 | போபனும் மோலியும் | |
1971 | கரகனகடல் | தாமசின் அன்னை |
1971 | பஞ்சவன் காடு | நாகேலி |
1971 | அக்னிமிரகம் | கார்த்தியாயினி |
1970 | தத்துபுத்திரன் | அச்சம்மா |
1970 | ஒட்டெனந்தே மகன் | உப்பாட்டி |
1970 | தாரா | விடுதி காப்பாளர் |
1970 | நீங்கள் ஒரு கம்யூனிஸ்ட் | கமலம்மா |
1970 | பியல் வீவ் | இரதி மாதவ |
1969 | உறங்காத சுந்தரி | மாதவி |
1969 | சுசி | அச்சம்மா |
1969 | கூட்டுக் குடும்பம் | சங்கரி |
1969 | ஜவாலா | பங்கி |
1969 | குமார சம்பவம் | வசுமதி |
1968 | புன்னப்ர வயலர் | பிகே விலாசினியம்மா |
1968 | கொடுகலூரம்மா | கொங்கிமாமி |
1968 | ராகினி | |
1968 | திருச்சடி | அம்முகுட்டி |
1967 | மைனதருவி கொலகேசு | ஓரதா |
1967 | காவலம் சுண்டன் | |
1967 | ஒளத்துமதி | |
1966 | ஜெயில் | சங்கரி |
1966 | செம்மீன் | நல்லா பெண்ணு |
1965 | தொம்மந்தே மக்கள் | மேரிக்குட்டியின் தாய் |
1965 | முதலி | |
1965 | கடத்துக்காரன் | நாணியம்மா |
1965 | இனப்பிரவுகள் | மரியா |
1965 | தேவதா | பங்கஜாக்ஷி அம்மா |
1965 | ஓடையில் நின்னு | சாரா |
1965 | கொச்சுமோன் | மாது |
1965 | கட்டுத்துளசி | கமலம்மா |
1965 | காட்டுப்பூக்கள் | சாரதா |
1965 | சகுந்தலா | |
1964 | அதியகிரணாகல் | குஞ்சேலி |
1964 | ஆயிஷா | பீட்டு |
1964 | ஆட்டம் பாம் | கல்யாணிக்குட்டி |
1964 | ஓமனக்குட்டன் | பங்கஜாக்ஷி |
1964 | கருத்த கை | மகேஸ்வரி |
1964 | மணவட்டி | கல்யாணி |
1964 | அண்ணா | |
1964 | பர்தாவு | சீதா |
1964 | கலாஜு கிட்டியா தங்கம் | பங்கஜம் |
1963 | சிலம்பொலி | பாரிஜாதம் |
1963 | ஸ்னாபக யோகண்ணன் | ரகேல் |
1963 | சத்யபாமா | ஹரிணி |
1963 | டாக்டர் | தங்கம்மா |
1963 | கலையும் காமினியும் | பங்கி |
1963 | கடலம்மா | காளியம்மா |
1963 | நித்ய கன்னியாக | |
1963 | சுசீலா | |
1962 | சினேகதீபம் | கொச்சு நாராயணி/நானி |
1962 | பாக்யஜாதகம் | வேலைக்காரி |
1962 | கால்படுகல் | |
1962 | கண்ணும் கரலும் | பருக்குட்டியம்மா |
1962 | பாரியா | ரஹெல் |
1962 | ஸ்ரீராம பட்டாபிஷேகம் | மந்தாரா |
1961 | பக்த குசேல | காமாட்சி |
1961 | ஞானசுந்தரி | கத்ரி |
1961 | கிறிஸ்துமஸ் ராத்திரி | மரியா |
1961 | சபரிமலா அய்யப்பன் | பார்வதி |
1959 | நாடோடிகள் | ஜானூ |
1959 | சதுரங்கம் | |
1958 | ரண்டிதங்கழி (திரைப்படம்) | |
1957 | மின்னூன்னதெல்லாம் பொன்னல்ல | கல்யாணி |
1957 | பாடாத பைங்கிளி | தேயி |
1957 | தேவ சுந்தரி | |
1956 | கூடபிறப்பு | |
1956 | மந்திரவாடி | மாயாவதி |
1956 | அவர் உன்னருன்னு | நானி |
1955 | நியூஸ்பேப்பர் பாய் | லட்சுமி அம்மா |
1955 | ஹரிச்சந்திரா | கலகந்தனின் மனைவி |
1955 | கிடப்படம் | கைவண்டிகாரன் மனைவி |
1955 | சிஐடி | பங்கி |
1954 | அவன் வருன்னு | மாதவியம்மா |
1954 | அவகாசி | ஷீலாவதி |
1954 | பால்யசாகி | கெளரி |
1953 | ஷெரியோ தெட்டோ | பாரு |
1953 | பூங்கதிர் | ஜானு |
1952 | விசாப்பிண்டே விளி | மாதவி |
1952 | பிரேமலேகா | தேவகி |
1952 | அச்சன் | பங்கஜம் |
நாடகங்கள்[தொகு]
இவர், பரித்ராநயம், பம்சுலா, ஹோமம், இரங்கா பூசை, பாசுபத்திராஸ்திரம், மதுமதுரையம், இரக்தபந்தம், கல்யாண சித்தி உள்ளிட்ட பல நாடகங்களில் நடித்துள்ளார்.
தொகைக்காட்சித் தொடர்[தொகு]
இவர் பரிமாணம் எனும் தொலைக்காட்சித் தொடரிலும் நடித்துள்ளார்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "Archived copy". 19 December 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-12-19 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)
- ↑ "Archived copy". 2 December 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 26 November 2013 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)
- ↑ 3.0 3.1 Adoor Bhavani, Pankajam to be honoured