உள்ளடக்கத்துக்குச் செல்

அஜ்மீர்-மேர்வாரா

ஆள்கூறுகள்: 26°27′N 74°38′E / 26.45°N 74.64°E / 26.45; 74.64
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அஜ்மீர்-மேர்வாரா மாகாணம்
Ajmer-Merwara
பிரித்தானிய இந்தியாவின் மாகாணம்

1818–1947

Flag of Ajmer-Merwara

கொடி

Location of Ajmer-Merwara
Location of Ajmer-Merwara
இராஜபுதனம் முகமை , அஜ்மீர்-மேர்வாரா மாகாணம், 1909
வரலாறு
 •  ஆங்கிலேயர்களிடம் ஒப்படைக்கப்பட்டது 1818
 •  மத்திய மாகாணம், பிரித்தானிய இந்தியா மற்றும் பெரார் மகாணத்துடன் இணைக்கப்பட்டது 1947
பரப்பு
 •  1881 7,021 km2 (2,711 sq mi)
Population
 •  1881 4,60,722 
மக்கள்தொகை அடர்த்தி 65.6 /km2  (170 /sq mi)

அஜ்மீர்-மேர்வாரா (Ajmer-Merwara) ( அஜ்மீர் மாகாணம்,[1] மற்றும் அஜ்மீர்-மேர்வாரா-கெக்ரி என்றும் அழைக்கப்படுகிறது) வரலாற்று அஜ்மீர் பகுதியில் உள்ள பிரித்தானிய இந்தியாவின் முன்னாள் மாகாணமாகும். 1818 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி ஒப்பந்தத்தின் மூலம் தௌலத்ராவ் சிந்தியாவால் இப்பகுதி ஆங்கிலேயர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 1836 ஆம் ஆண்டு வடமேற்கு மாகாணங்களின் ஒரு பகுதியாக மாறும் வரை இது வங்காள மாகாணத்தின் கீழ் இருந்தது.[2] இறுதியாக ஏப்ரல் 1, 1871 அன்று அஜ்மீர்-மேர்வாரா-கெக்ரி என தனி மாகாணமாக மாறியது. 1947 ஆகஸ்ட் 15 அன்று ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறியபோது இது சுதந்திர இந்தியாவின் ஒரு பகுதியாக மாறியது.[3]

இந்த மாகாணம் அஜ்மீர் மற்றும் மேவார் மாவட்டங்களைக் கொண்டிருந்தது. அவை பிரித்தானிய இந்தியாவின் மற்ற பகுதிகளிலிருந்து பிரிக்கப்பட்டு இராஜபுதனத்தின் பல சமஸ்தானங்களுக்கு மத்தியில் ஒரு சிறிய பிரதேசத்தை உருவாக்கியது. பிரித்தானிய மேலாதிக்கத்தை ஒப்புக்கொண்ட உள்ளூர் பிரபுக்களால் ஆளப்பட்ட இந்த மாநிலங்களைப் போலல்லாமல், அஜ்மீர்-மேவாரா ஆங்கிலேயர்களால் நேரடியாக நிர்வகிக்கப்பட்டது.

1842 இல், இரண்டு மாவட்டங்களும் ஒரே ஆணையரின் கீழ் இருந்தன. பின்னர் அவை 1856 இல் பிரிக்கப்பட்டு கிழக்கிந்திய நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்டன. இறுதியாக, 1858க்குப் பிறகு, இராஜபுதனம் முகமைக்கான இந்திய தலைமை ஆளுநரின் முகவருக்குக் கீழ்ப்பட்ட ஒரு தலைமை ஆணையரின் கீழ் கொண்டு வரப்பட்டது.

சுதந்திரத்திற்குப் பின்

[தொகு]

1947 இல் இந்தியப் பிரிப்பு மற்றும் சுதந்திரம் பெற்ற தேதியிலிருந்து 1950 வரை, அஜ்மீர்-மேர்வாரா இந்தியாவின் ஒரு மாகாணமாக இருந்தது. 1950 ஆம் ஆண்டில் இது அஜ்மீர் மாநிலமாக மாறியது. இது நவம்பர் 1, 1956 அன்று இராசத்தான் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.

சான்றுகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜ்மீர்-மேர்வாரா&oldid=3924471" இலிருந்து மீள்விக்கப்பட்டது