தௌலத்ராவ் சிந்தியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தௌலத்ராவ் சிந்தியா
குவாலியரின் மகாராஜா)
தௌலத்ராவ் சிந்தியா
குவாலியரின் 7வது மராட்டியர் ஆட்சியாளர்
ஆட்சிக்காலம்12 பிப்ரவரி 1794— 21 மார்ச் 1827
முன்னையவர்மகாதாஜி சிந்தியா
பின்னையவர்இரண்டாம் சாங்கோஜி சிந்தியா
பிறப்பு1779
இறப்பு21 மார்ச் 1827 (வயது 48)
தந்தைஆனந்த் ராவ் சிந்தியா
மதம்இந்து சமயம்

தௌலத் ராவ் சிந்தியா (Daulat Rao Sindhia) (1779 - 21 மார்ச் 1827) மத்திய இந்தியாவில் குவாலியர் மாநிலத்தின் மன்னராக 1794 முதல் 1827 இல் தான் இறக்கும் வரை இருந்தார். இவரது ஆட்சி மராட்டிய கூட்டமைப்பினுள் மேலாதிக்கத்திற்கான போராட்டங்களுடனும், 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வடக்கு மற்றும் மத்திய இந்தியா மீது பிரித்தானியர்களின் மேலாதிக்கத்தை பலப்படுத்துவதற்கான மராட்டிய எதிர்ப்போடு ஒத்துப்போனது. இரண்டாம் மற்றும் மூன்றாவது ஆங்கிலேய-மராத்தியப் போர்களில் இவர் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தார்.

சிந்தியாக்களின் ஏற்றம்[தொகு]

மகாதாஜி சிந்தியா

இரண்டாம் தௌலத்ராவ் சிந்தியா வம்சத்தில் உறுப்பினராக இருந்தார். மகாராஜா மகாதாஜி சிந்தியாவின் மரணத்திற்குப் பின்னர் 1794 பிப்ரவரி 12 அன்று குவாலியர் சிம்மாசனத்தில் அமர்ந். தௌலத்ராவ் மூன்றாம் பானிபட் போரில் கொல்லப்பட்ட அவரது மூத்த சகோதரர் துக்கோஜி ராவ் சிந்தியாவின் பேரனாவார். 1794 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் தேதி பேஷ்வாவால் இவர் முறையாக அங்கீகரிக்கப்பட்டார். மேலும் பேரரசின் துணை ஆட்சியாளர், அமீர்களின் தலைவர் ஆகிய இரு பட்டங்களை பேரரசர் இரண்டாம் ஷா ஆலம் வழங்கினார்

குவாலியர் மாநிலம் 17 ஆம் நூற்றாண்டில் சிவாஜியால் நிறுவப்பட்ட மராட்டிய பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது. மேலும் 18 ஆம் நூற்றாண்டில் முகலாய பேரரசின் இழப்பில் பேரரசு பெரிதும் விரிவடைந்தது. பேரரசு விரிவடைந்தவுடன், மராட்டிய படைகளின் தளபதிகளுக்கு பேஷ்வா சார்பாக கைப்பற்றப்பட்ட பிரதேசங்களில் கப்பம் சேகரிக்க அதிகாரம் வழங்கப்பட்டது. தௌலத்ராவின் மூதாதையர் இரானோஜி சிந்தியா முகலாயர்களிடமிருந்து மால்வா, கிர்ட் போன்ற பிராந்தியங்களில் பிரதேசங்களை கைப்பற்றினார். இறுதியில் உஜ்ஜைனை மையமாகக் கொண்ட ஒரு மாநிலத்தை நிறுவினார். இதற்கு குவாலியர் கோட்டையின் பெயரிடப்பட்டது. இவரது மனைவி பைசா பாய் அவரது காலத்தின் ஒரு சக்திவாய்ந்த மற்றும் புத்திசாலித்தனமான பெண்மணியாகவும், குவாலியர் அரசின் விவகாரங்களில் முக்கிய பங்கும் வகித்தார்.

தௌலத்ராவின் முன்னோடி மகாதாஜி சிந்தியா பானிபட் போருக்குப் பின்னர், குவாலியர் கூட்டமைப்பின் தலைமை இராணுவ சக்தியாக மாற்றினார். நன்கு பயிற்சி பெற்ற நவீன இராணுவத்தை உருவாக்கினார்.

குறிப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Daulat Rao Scindia
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  • Hunter, William Wilson, Sir, et al. (1908). Imperial Gazetteer of India, Volume 12. 1908-1931; Clarendon Press, Oxford.
  • Markovits, Claude (ed.) (2004). A History of Modern India: 1480-1950. Anthem Press, London.


"https://ta.wikipedia.org/w/index.php?title=தௌலத்ராவ்_சிந்தியா&oldid=3087778" இலிருந்து மீள்விக்கப்பட்டது