உள்ளடக்கத்துக்குச் செல்

அசுபெர்கர் கூட்டறிகுறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசுபெர்கர் கூட்டறிகுறி
ஆஸ்பெர்ஜர் நோய்க்குறி கொண்டவர்கள் அடிக்கடி கட்டுப்படுத்தப்பட்ட அல்லது சிறப்பு நலன்களைக் காட்சிப்படுத்துகின்றனர், இது போன்ற பையன்களின் குவிப்பு கேன்களைப் போன்ற ஆர்வம்.
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புஉளநோய் மருத்துவம்
ஐ.சி.டி.-10F84.5
ஐ.சி.டி.-9299.80
ம.இ.மெ.ம608638
நோய்களின் தரவுத்தளம்31268
மெரிசின்பிளசு001549
ஈமெடிசின்ped/147
பேசியண்ட் ஐ.இaspergers-syndrome அசுபெர்கர் கூட்டறிகுறி
ம.பா.தF03.550.325.100

அசுபெர்கர் கூட்டறிகுறி (Asperger syndrome, AS), அல்லது அசுபெர்கரின் கூட்டறிகுறி (Asperger's syndrome) அல்லது அசுபெர்கர் குறைபாடு (Asperger disorder, AD), என்பது ஓர் மதியிறுக்கத் தொகுதி குறைபாடு (ASD) ஆகும். இக்குறைபாடு உள்ளோர் மற்றவர்களை புரிந்து கொள்வதிலும் மற்றவர்களுடன் பேசுவதிலும் எதிர்வினையாற்றுவதிலும் துன்பமுறுவர். கூடவே மட்டுப்படுத்தப்பட்ட அல்லது மீண்டும் மீண்டும் செய்கைகளை மேற்கொள்வர்; தங்கள் செயல்களில் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் இருப்பர். இத்தகையோருக்கு, ஒற்றுநோக்குங்கால், மொழி வளர்ச்சியும் அறிவு வளர்ச்சியும் இயல்நிலையில் உள்ளதே இதனை மற்ற மதியிறுக்கக் குறைபாடுகளிலிருந்து வேறுபடுத்துகிறது. இருப்பினும் பெரும்பாலோர் மதிப்பிழக்கும் தோற்றம் கொண்டவர்களாகவும் வழமையில்லாத மொழிப் பயன்பாட்டைக் கொண்டவர்களாகவும் காணப்படுகின்றனர்.[1][2] இது ஓர் வளர்ச்சிக் குறைபாடே அன்றி நோயல்ல. இக்குறைபாடு உள்ளவர்களால் பின்னர் நண்பர்களை ஏற்படுத்திக்கொள்ளவும், பயனுள்ள பணிகளை ஆற்றவும் வெற்றிகரமான வாழ்க்கை மேற்கொள்ளவும் இயலும். மதியிறுக்க குறைபாட்டுத் தொகுதியில் இது உயர்நிலையில் உள்ள ஓர் குறைபாடாகும். இக்குறை இருபாலருக்கும் வரக்கூடிய வாய்ப்பிருந்தாலும் ஆண்களில் இக்குறைபாடு பெரும்பான்மையாக உள்ளது.

வரலாறு

[தொகு]

1944இல் ஆன்சு அசுபெர்கர் என்ற மழலையர் மருத்துவர் தன்னிடம் வந்த சொல்லிலாத் தொடர்பாடல் திறன்கள் குறைந்த, தங்களையொத்தவர்களிடம் அனுதாபம் இல்லாத, தோற்றத்தில் அக்கறையில்லாத குழந்தைகளை ஆய்வுசெய்து இக்குறைபாட்டை விவரித்தார்.[3] அசுபெர்கர் கூட்டறிகுறி குறித்த தற்போதைய புரிதல் 1981இல் ஏற்பட்டு[4] பரவலான விழிப்புணர்ச்சி ஏற்பட்டது.[5][6] 1990களில்் இதன் அறுதியிடல் சீர்தரப்படுத்தப்பட்டது. இருப்பினும் இக்குறைபாடு குறித்து பல கேள்விகள் உள்ளன.[7] இது மதியிறுக்கத்திலிருந்து வேறானாதா எனவும் ஆராயப்பட்டு வருகிறது.[1][8]

காரணங்களும் சிகிச்சையும்

[தொகு]

இக்குறைபாட்டிற்கான சரியான காரணம் அறியப்படவில்லை. ஆய்வுகள் மரபியலை ஓர் காரணியாக பரிந்துரைத்தாலும்,[1] எந்தவொரு பரம்பரை வழித்தோற்றமும் அறியப்படவில்லை.[9][10] மூளை படிமத் தொழினுட்பங்களும் எந்தவொரு பொதுவான நோயறிகுறியையும் அடையாளம் காட்டவில்லை.[1] இதற்கென தனியான சிகிச்சைமுறை எதுவமில்லை.[1] சிகிச்சைகள் அறிகுறிகளை மேம்படுத்துவதையும் செயற்திறனைக் கூட்டுவதையும் நோக்கமாக கொண்டுள்ளன. முக்கியமாக தொடர்புத் திறன்களை வளர்த்தல், பழக்கங்களிலேயே ஆழ்ந்திருத்தலைக் குறைத்தல், மதிப்பில்லாத் தோற்றத்தில் மாற்றம் ஏற்படுத்துதல் ஆகியவற்றை அடக்கிய நடத்தை சிகிச்சை அளிக்கப்படுகிறது.[11] பெரும்பாலான சிறுவர்கள் தாங்கள் வளர வளர மேம்படுகின்றனர்; சமூக மற்றும் தொடர்பு பிரச்சினைகள் நீடிக்கலாம்.[7] சமூகவியலாளர்களும் அசுபெர்கர் குறைபாடுள்ளவர்களும் குறைபாடு என்பதைவிட வேறுபட்டவர்கள் என்ற நோக்கில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என விரும்புகின்றனர்.[12][13]

மேற்சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 McPartland J, Klin A (2006). "Asperger's syndrome". Adolesc Med Clin 17 (3): 771–88. doi:10.1016/j.admecli.2006.06.010. பப்மெட்:17030291. 
  2. Baskin JH, Sperber M, Price BH (2006). "Asperger syndrome revisited". Rev Neurol Dis 3 (1): 1–7. பப்மெட்:16596080. 
  3. Asperger H; tr. and annot. Frith U (1991) [1944]. "'Autistic psychopathy' in childhood". In Frith U (ed.). Autism and Asperger syndrome. Cambridge University Press. pp. 37–92. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-38608-X.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
  4. Klin A, Pauls D, Schultz R, Volkmar F (2005). "Three diagnostic approaches to Asperger syndrome: Implications for research". J of Autism and Dev Dis 35 (2): 221–34. doi:10.1007/s10803-004-2001-y. பப்மெட்:15909408. 
  5. Wing L (1998). "The history of Asperger syndrome". Asperger syndrome or high-functioning autism?. New York: Plenum press. pp. 11–25. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-306-45746-6. {{cite book}}: Unknown parameter |editors= ignored (help)
  6. Woodbury-Smith M, Klin A, Volkmar F (2005). "Asperger's Syndrome: A Comparison of Clinical Diagnoses and Those Made According to the ICD-10 and DSM-IV". J of Autism and Dev Disord. 35 (2): 235–240. doi:10.1007/s10803-004-2002-x. பப்மெட்:15909409. 
  7. 7.0 7.1 Woodbury-Smith MR, Volkmar FR (January 2009). "Asperger syndrome". Eur Child Adolesc Psychiatry 18 (1): 2–11. doi:10.1007/s00787-008-0701-0. பப்மெட்:18563474. 
  8. Klin A (2006). "Autism and Asperger syndrome: an overview". Rev Bras Psiquiatr 28 (suppl 1): S3–S11. doi:10.1590/S1516-44462006000500002. பப்மெட்:16791390. http://www.scielo.br/scielo.php?script=sci_arttext&pid=S1516-44462006000500002&lng=en&nrm=iso&tlng=en. 
  9. Matson JL, Minshawi NF (2006). "Etiology and prevalence". Early intervention for autism spectrum disorders: a critical analysis. Amsterdam: Elsevier Science. p. 33. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-08-044675-2.
  10. Klauck SM (2006). "Genetics of autism spectrum disorder" (PDF). Eur J of Hum Genet 14 (6): 714–720. doi:10.1038/sj.ejhg.5201610. http://www.nature.com/ejhg/journal/v14/n6/pdf/5201610a.pdf. 
  11. National Institute of Neurological Disorders and Stroke (NINDS) (2007-07-31). "Asperger syndrome fact sheet". Archived from the original on 2007-08-21. பார்க்கப்பட்ட நாள் 2007-08-24. NIH Publication No. 05-5624.
  12. Clarke J, van Amerom G (2007). "'Surplus suffering': differences between organizational understandings of Asperger's syndrome and those people who claim the 'disorder'". Disabil Soc 22 (7): 761–76. doi:10.1080/09687590701659618. 
  13. Baron-Cohen S (2002). "Is Asperger syndrome necessarily viewed as a disability?". Focus Autism Other Dev Disabl 17 (3): 186–91. doi:10.1177/10883576020170030801.  A preliminary, freely readable draft, with slightly different wording in the quoted text, is in: Baron-Cohen S (2002). "Is Asperger's syndrome necessarily a disability?" (PDF). Cambridge: Autism Research Centre. Archived from the original (PDF) on 2008-12-17. பார்க்கப்பட்ட நாள் 2008-12-02. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original on 2008-12-17. பார்க்கப்பட்ட நாள் 2013-04-11.{{cite web}}: CS1 maint: unfit URL (link)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசுபெர்கர்_கூட்டறிகுறி&oldid=4047360" இலிருந்து மீள்விக்கப்பட்டது