உள்ளடக்கத்துக்குச் செல்

நோய் முதலியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நோய் முதலியல் (etiology) என்பது ஒரு நோயின் மூல காரணத்தைப் பற்றி ஆராய்ந்தறியும் அறிவியல் துறை. மருத்துவத் துறை மட்டுமின்றி இயற்பியல், தத்துவவியல், உளவியல், நிருவாகவியல், இறையியல் போன்ற துறைகளிலும் மூல காரணத்தைக் கண்டறிதல் அவசியமாகிறது. அவ்விடங்களில் இது காரண காரியவியல் என அறியப்படுகிறது.

மருத்துவத்துறையில்

[தொகு]

இராபர்ட் காச் (Robert Koch) என்பவர் தான் முதன் முதலில் தொற்று நோய்கள் உருவாக நுண்ணுயிரிகளே காரணம் என்பதை நிறுவினார். அதற்கு முன் வரை ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு காரணம் சொல்லப்பட்டு வந்தது. மலேரியா என்ற சொல்லுக்கு கெட்ட காற்று என்று பொருள். மலேரியா கெட்ட காற்றினால் வருவதாக நம்பினர். ரொனால்டு ராஸ் என்ற இந்தியாவில் பிறந்த ஆங்கில மருத்துவர் தான் அது பெண் அனாஃபிலசு கொசுக்களால் பரவும் பிளாஸ்மோடியத் தொற்றுயிரியினால் பரவுவதை நிறுவினார்.

ஒரே நோய்க்கு பல காரணங்கள் இருக்கலாம். உதாரணமாக நீரிழிவு நோய் ஏற்பட எண்ணற்ற காரணங்கள் உண்டு.

ஒரே காரணமே பல நோய்களை உண்டாக்கலாம். புகைபிடிக்கும் பழக்கம் மற்றும் மது அருந்துதல் எனும் இரு காரணிகள் பல நோய்களை உண்டாக்குகின்றன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=நோய்_முதலியல்&oldid=2744844" இலிருந்து மீள்விக்கப்பட்டது