அக்கராகாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அக்கராகாரம்
Mount Atlas daisy
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: Asterids
வரிசை: Asterales
குடும்பம்: Asteraceae
சிற்றினம்: Anthemideae
பேரினம்: Anacyclus
இனம்: A. pyrethrum
இருசொற் பெயரீடு
Anacyclus pyrethrum
(லின்னேயஸ்)
வேறு பெயர்கள்

Anthemis pyrethrum L.
Anacyclus depressus Ball
Anacyclus freynii Willk.
Anacyclus officinarum Hayne
Sources: E+M,[1] AFPD[2]

ஸ்பெயின், அரேபியா, ஜெர்மனி, எகிப்து, கனடா போன்ற நாடுகளிலும் வங்க தேசத்திலும் பயிராகும் இந்த மூலிகைக்கு அக்கார்கரா, ஸ்பானிஷ் பெல்லிடோரி, அக்கரம் எனப் பல்வேறு பெயர்கள் உண்டு. இந்தியாவில் உத்தரப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், காஷ்மீர், மேற்கு வங்கம் போன்ற இடங்களில் இதனை முக்கிய மூலிகையாகப் பயிர் செய்கிறார்கள். அக்கராகாரம் வேர் காற்றோட்டம் உள்ள இடங்களில் பரப்பி நன்கு உலர்த்தி, பதப்படுத்தப்பட்டு, மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. உலர்ந்த நிலையில் உள்ள இந்த வேர் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

பெயர்[தொகு]

இத்தாவரமானது அக்கிராகாரம், அக்கராகாரம் என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. ‘கார்ப்புச் சுவை’ கொண்ட மூலிகை என்பதால் இது அக்கர‘காரம்’ என்று பெயர் பெற்றது.

விளக்கம்[தொகு]

இதன் மலர்கள் மஞ்சள் நிறப் புள்ளிகள் தூவப்பட்டது போலக் காட்சி தரும். இது, மிகச் சிறிய பூப்பந்தோடு உருவகப்படுத்தக்கூடியதுபோல இருக்கும். இந்த செடியானது ஒரு சிறு செடியினமானமாகும். இது காரமான வேர்களைக் கொண்டிருக்கும்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Botanic Garden and Botanical Museum Berlin-Dahlem. "Details for: Anacyclus pyrethrum". Euro+Med PlantBase (Free University of Berlin). http://ww2.bgbm.org/EuroPlusMed/PTaxonDetail.asp?NameId=117602&PTRefFk=7000000. பார்த்த நாள்: 2008-06-16. 
  2. "Anthemis pyrethrum record n° 135636". African Plants Database (Natural History Museum of Geneva and Tela Botanica) இம் மூலத்தில் இருந்து 2011-06-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110615101615/http://www.ville-ge.ch/musinfo/bd/cjb/africa/details.php?langue=an&id=135636. பார்த்த நாள்: 2008-06-16. 
  3. டாக்டர் வி.விக்ரம் குமார் (24 நவம்பர் 2018). "இனிய ஆரோக்கியத்துக்கான ‘காரம்!’". கட்டுரை (இந்து தமிழ்). https://tamil.thehindu.com/general/health/article25584383.ece. பார்த்த நாள்: 1 திசம்பர் 2018. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்கராகாரம்&oldid=3789278" இருந்து மீள்விக்கப்பட்டது