அகில பாரதிய இராம ராஜ்ய பரிசத்
தோற்றம்
| அகில பாரதிய இராம ராஜ்ய பரிசத் | |
|---|---|
| நிறுவனர் | சுவாமி கர்பத்ரி |
| தொடக்கம் | 1948 |
| கலைப்பு | 1971 |
| இணைந்தது | பாரதீய ஜனசங்கம் |
| கொள்கை | இந்துத்துவம் இந்து தேசியம் தேசிய கலாச்சாரம் |
| அரசியல் நிலைப்பாடு | Far-Right[சான்று தேவை] |
| தேர்தல் சின்னம் | |
அகில பாரதிய இராம ராஜ்ய பரிசத் (Akhil Bharatiya Ram Rajya Parishad) என்பது 1948-இல் சுவாமி கர்பத்ரியால் நிறுவப்பட்ட இந்திய இந்து தேசியவாத அரசியல் கட்சியாகும்.[1] இக்கட்சி பாராளுமன்றத்திற்கு நடைபெற்ற 1952 தேர்தல்களில் மூன்று மக்களவை இடங்களையும் 1962இல் இரண்டு இடங்களையும் வென்றது. 1952, 1957 மற்றும் 1962இல், இக்கட்சி பல மாநிலச் சட்டப்பேரவை இடங்களை வென்றது. இவை பெரும்பாலும் இராசாத்தான் போன்ற இந்தி பேசும் மாநிலங்களில் உள்ளன.[2] மற்ற இந்துத்துவா அடிப்படையிலான கட்சிகளைப் போலவே, இக்கட்சியும் இந்தியாவில் இந்துக்களுக்கான மசோதாக்களை அமல்படுத்துவதற்கு எதிராகப் போராடியது.[3] இக்கட்சி இறுதியில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னோடியான பாரதீய ஜனசங்கத்தில் இணைக்கப்பட்டது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Kumar, Sajjan (4 August 2020). "The conservative challenge to Hindutva" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/opinion/op-ed/the-conservative-challenge-to-hindutva/article32262217.ece.
- ↑ "Biographical sketches of Third Lok Sabha". National Informatics Centre, Government of India. Archived from the original on 2006-05-19. Retrieved 2006-08-14.
- 1 2 LS Herdenia. "Uniform Civil Code: How RSS and Hindu swamis fought tooth and nail the Hindu Code Bill".
குறிப்புகள்
[தொகு]- Baxter, Craig (1971). The Jana Sangha. A Biography of an Indian Political Party. Delhi, India: Oxford University Press. ISBN 978-0-8122-7583-4.