அகமது சபீக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகமது சபீக்
أحمد شفيق
எகிப்தியப் பிரதமர்
பதவியில்
31 சனவரி 2011 – 3 மார்ச்சு 2011
குடியரசுத் தலைவர்ஓசுனி முபாரக்
முகமது உசைன் தந்தவி (பொறுப்பு)
பின்னவர்எசாம் சராஃப்
குடிசார் வான் போக்குவரத்து அமைச்சர்
பதவியில்
18 செப்டம்பர் 2002 – 31 சனவரி 2011
பிரதமர்அடெஃப் எபீத்
அகமது நசீஃப்
முன்னையவர்அகமது அப்தெல் ரகுமான் நாசர்
பின்னவர்இப்ராகிம் மனா
எகிப்திய வான் படைத் தளபதி
பதவியில்
7 ஏப்ரல் 1996 – 1 மார்ச்சு 2002
குடியரசுத் தலைவர்ஓசுனி முபாரக்
முன்னையவர்அகமது அப்தெல் ரகுமான் நாசர்
பின்னவர்மாக்டி கலால் சராவி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புpredecessor அகமது நசீஃப்
நவம்பர் 1941 (அகவை 82)
கெய்ரோ, எகிப்து
இறப்புpredecessor அகமது நசீஃப்
இளைப்பாறுமிடம்predecessor அகமது நசீஃப்
அரசியல் கட்சிசுயேட்சை
பெற்றோர்
  • predecessor அகமது நசீஃப்
முன்னாள் கல்லூரிஎகிப்திய வான்படை அகாதமி
Military service
பற்றிணைப்புஎகிப்து
கிளை/சேவை எகிப்து வான்படை
சேவை ஆண்டுகள்1961–2002
தரம்ஏர் மார்ஷல்
போர்கள்/யுத்தங்கள்வடக்கு ஏமன் குடிமக்கள் போர்
ஆறு நாள் போர்
உரசல் போர்
அக்டோபர் போர்

அகமது மொகமது சஃபீக் (Ahmed Mohamed Shafik, அரபு மொழி: أحمد محمد شفيق‎; பிறப்பு: நவம்பர் 1941) ஓர் எகிப்திய அரசியல்வாதி. மூத்த எகிப்திய வான்படைத் தளபதியாக இருந்து பின்னர் வான் போக்குவரத்து அமைச்சராகவும் எகிப்திய பிரதமராகவும் பொறுப்பு வகித்தவர். சனவரி 31, 2011 முதல் மார்ச்சு 3, 2011 வரை 33 நாட்களுக்குப் பிரதமராகப் பணியாற்றினார்.

தனது பணி வாழ்வை சண்டை வானூர்தி ஓட்டுனராகத் துவங்கி அணி, பிரிவு மற்றும் தள தலைவராக முன்னேறினார். 1996 முதல் 2002 வரை எகிப்திய வான்படையின் தளபதியாக விளங்கினார்; ஏர் மார்ஷல் என்ற தரநிலையை எட்டினார். பணி ஓய்விற்குப் பின்னர் எகிப்திய அரசில் 2002 முதல் 2011 வரை வான் போக்குவரத்து அமைச்சராக பணியாற்றினார்.

2011 எகிப்திய புரட்சியை அடுத்து சனவரி 31, 2011இல் குடியரசுத் தலைவர் ஓசுனி முபாரக் சபீக்கை பிரதமராக நியமித்தார்.[1] தொலைக்காட்சி அரட்டை நிகழ்ச்சி ஒன்றில் முதன்மையான எகிப்திய எழுத்தாளர் ஒருவர் அவரை முபாரக் அரசின் எச்சமே எனக் குற்றம் சாட்டியதை அடுத்து ஒரு மாதமே அந்தப் பதவியில் இருந்த சபீக் மார்ச்சு 3, 2011இல் பதவி விலகினார்.[2]

நவம்பர் 2011இல் சபீக் எகிப்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். இவரை முந்தைய ஆட்சியின் நீட்சியாகக் கருதிய பலரால் இந்த அறிவிப்பு கண்டிக்கப்பட்டது. தேர்தல் கூட்டமொன்றில் இவர் மீது காலணி வீசப்பட்டது.[3] இசுலாமிய மதவாத அரசியல்வாதிகளுக்கு எதிராக இவருக்கு எகிப்தின் கிறித்தவ சிறுபான்மையினர் ஆதரவளித்தனர்.[4]

மே 2012இல் நடந்த முதற்கட்ட தேர்தலில் முசுலிம் சகோதரத்துவம் சார்ந்த மொகமது மோர்சியும் சபீக்கும் முன்னணியில் தேர்வாயுள்ளனர். சூன்,2012இல் நடைபெறும் இரண்டாம் கட்ட தேர்தலில் இந்த இருவருக்கும் இடையே தெரிவு நடைபெறவுள்ளது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Egypt protests | Al Jazeera Blogs". Al Jazeera Blogs. 2009-12-29. Archived from the original on 2011-01-29. பார்க்கப்பட்ட நாள் 2011-01-29..
  2. Luhnow, David (5 March 2011). "Egypt PM Undone by TV Debate". The Wall Street Journal. http://online.wsj.com/article/SB10001424052748704076804576180862540155764.html. பார்த்த நாள்: 10 April 2012. 
  3. Hanna Allam (May 19 2012). "Ahmed Shafik, Mubarak’s last prime minister, is the surprise contender in Egypt’s presidential race". McClatchy Newspaper. http://www.charlotteobserver.com/2012/05/17/3251853/ahmed-shafik-mubaraks-last-prime.html. பார்த்த நாள்: 22 May 2012. 
  4. The Associated Press (May 22 2012). "Egypt’s election fever comes to Garbage City". The Washington Post. http://www.washingtonpost.com/world/middle_east/egypts-election-fever-comes-to-garbage-city/2012/05/22/gIQAAxZUiU_story.html. பார்த்த நாள்: 22 May 2012. [தொடர்பிழந்த இணைப்பு]
  5. "Egypt's presidential election: The sins of the Muslim Brotherhood". Mohamed ElMasry. The Egyptian Gazette. மே 30, 2012. பார்க்கப்பட்ட நாள் மே 30, 2012.

External links[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அகமது_சபீக்&oldid=3791604" இலிருந்து மீள்விக்கப்பட்டது