எழுத்து (இலக்கணம்)
Appearance
தமிழ் இலக்கண நூல்களில் எழுத்து (letter) என்ற சொல் மொழியில் வழங்கும் ஒலிகளைக் குறிக்கவும், அவ்வொலிகளுக்குரிய வரிவடிவத்தைக் குறிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவ்வகையில் “அ“ என்ற எழுத்து ஒலிவடிவம், வரிவடிவம் இரண்டையும் குறித்து நிற்கின்றது.
- முதலெழுத்து, சார்பெழுத்து என்பன மொழியில் எழுத்து தனித்தன்மை, சார்புத்தன்மை குறித்த பாகுபாடுகள்.
- உயிரெழுத்து, மெய்யெழுத்து என்பன அவற்றின் இயங்கு-தன்மை குறித்த பாகுபாடு. மெய் தனித்து இயங்காது.
- குறில், நெடில் என்பன எழுத்துகள் ஒலிக்கும் கால அளவு பற்றியவை.
- வல்லினம், மெல்லினம், இடையினம் என்பன எழுத்தின் பிறப்பிடத்தால் ஒலிப்பில் தோன்றும் வன்மை, மென்மை, இடைமை பற்றியவை.
- சுட்டு, வினா என்பன மொழியிடை வரும் இடைச்சொல்லாகிப் பொருள் உணர்த்தும் எழுத்துகள். தனிநிலையில் இவை பொருள் உணர்த்துவது இல்லை.
- மயங்கும் எழுத்துகள், மயங்கா எழுத்துகள் என்பவை நாவால் ஒலிக்கமுடியும் எழுத்துகளையும், ஒலிக்கமுடியாத எழுத்துகளையும் குறிப்பன.
- மொழிமுதல் எழுத்துகள் என்பவை மொழியில் முதல் எழுத்தாக வருபவை
- மொழியிறுதி எழுத்துகள் என்பவை மொழியின் இறுதியில் வருபவை.
- புணர்ச்சியில் மயங்கும் எழுத்துகள்[1][2][3]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Harper, Douglas. "Origin and meaning of letter". Online Etymology Dictionary (in ஆங்கிலம்). Archived from the original on 2017-11-03.
- ↑ David Abercrombie (linguist) (1949). "What is a "letter?"". Lingua (journal) 2: 54–63. doi:10.1016/0024-3841(49)90006-6.
- ↑ Taylor, Isaac (1899). The history of the alphabet; an account of the origin and development of letters. New York: C. Scribner's Sons.