உள்ளடக்கத்துக்குச் செல்

முதலெழுத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழில் உள்ள உயிரெழுத்து 12, மெய்யெழுத்து 18, ஆக மொத்தம் 30 எழுத்துகளைத் தமிழ் இலக்கணம் என்னும் மொழியியல் முதலெழுத்து எனக் குறிப்பிடுகிறது. வித்துமுதலைப் போட்டு விளைச்சல் காண்பது போலவும், முதலை வைத்துத் தொழில் செய்து பொருள் ஈட்டுவது போலவும் இந்த 30 முதல் எழுத்துகளை வைத்துதான் தமிழ் இயங்குகிறது. எழுத்துகள் சொல்லாகும்போது சில எழுத்துகள் மொழியோடு தோன்றி எழுத்தின் ஒலியைக் கூட்டியும் குறைத்தும் தருவது உண்டு. இவற்றைச் சார்பெழுத்து என்கிறோம். இவை நிலம், நீர் போன்றவற்றின் தன்மையால் செழுமையும் மெலிவும் பெறுவது போன்றவை. [1]

உயிரெழுத்து பன்னிரண்டும் மெய்யெழுத்து பதினெட்டும் ஆகிய முப்பது எழுத்துகளும் தமிழ் மொழிக்கு அடிப்படையாக இருப்பதால் முதல் எழுத்துகள் என்று நன்னூலும் குறிப்பிடுகிறது.[2]

அடிக்குறிப்பு

[தொகு]
  1. எழுத்து எனப்படுப
    அகரம் முதல் னகர இறுவாய்
    முப்பஃது என்ப
    சார்ந்து வரல் மரபின் மூன்று அலங்கடையே - தொல்காப்பியம் முதல் நூற்பா

  2. உயிரும் உடம்புமாய் முப்பதும் முதலே - நன்னூல் 59
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலெழுத்து&oldid=3427579" இலிருந்து மீள்விக்கப்பட்டது