எ. தி. குண்டேவியா
எசதேசார்ட் தின்சா குண்டேவியா (Yezdezard Dinshaw Gundevia) ஜவகர்லால் நேரு மற்றும் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் கீழ் பணியாற்றிய இந்தியக் குடிமைப் பணி அதிகாரியும், இராஜதந்திரியும் மற்றும் வெளியுறவுச் செயலாளரும் ஆவார்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் தொழில்
[தொகு]குன்டேவியா சரதுச பார்சி சமூகத்தைச் சேர்ந்தவர்.[1] இவர் 1929 இல் பம்பாய் வில்சன் கல்லூரியில் பட்டம் பெற்றார். 1930 இல் இந்தியக் குடிமைப் பணியில் சேர்ந்தார். பின்னர் ஐக்கிய மாகாணங்களுக்கு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அங்கு இவர் 1945 வரை பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றினார்.[2]
இராஜதந்திர வாழ்க்கை
[தொகு]யங்கோன் பயணத்தைத் தொடர்ந்து, குன்டேவியா 1948 முதல் 1950 வரை வெளியுறவு அமைச்சகத்தின் இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் மாஸ்கோவிலுள்ள இந்தியத் தூதரகத்தில் ஆலோசகராக பணியாற்றினார். 1953 - 1954 இல், இவர் ஆஸ்திரியா மற்றும் வாடிகனுக்கான ஒரே நேரத்தில் அங்கீகாரத்துடன் சுவிட்சர்லாந்திற்கான இந்திய தூதராக பணியாற்றினார். இதைத் தொடர்ந்து இலண்டனில் துணை உயர் ஆணையராகவும் (1954-56) இலங்கையில் உயர் ஆணையராகவும் (1957-60) பணியாற்றினார்.[2] 1961 முதல் 1964 வரை, வெளிவிவகார அமைச்சில் பொதுநலவாயச் செயலாளராக இருந்த கென்டேவியா 1964 இல் வெளியுறவு செயலாளராக ஆனார். நேருவின் கடைசி வெளியுறவுச் செயலாளராக இருந்த இவர், லால் பகதூர் சாஸ்திரியின் இரண்டு ஆண்டு பதவிக்காலத்தில் அவர் தலைமையில் பணியாற்றினார்.[3] பின்னர் இவர் இந்தியக் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் செயலாளராக பணியாற்றினார்.[4] குன்டேவியா, காஷ்மீர் தொடர்பான கொள்கை வகுப்பதில் நெருக்கமாக ஈடுபட்டு, ஐக்கிய நாடுகள் சபையில் காஷ்மீர் விவகாரங்களைக் கையாளும் சிறப்புச் செயலாளராகவும், வெளியுறவுச் செயலாளராகவும் பணியாற்றினார். 1962-63 காலகட்டத்தில் காஷ்மீர் பற்றி சுவரண் சிங் - சுல்பிக்கார் அலி பூட்டோ ஆகியோருக்கிடையேயான பேச்சுக்களின் போது இந்தியக் குழுவின் ஒரு பகுதியாகவும் இருந்தார்.[5] 1965 இல் நாகாலாந்து கிளர்ச்சியாளர்களுடனான அமைதிப் பேச்சுவார்த்தையின் முதல் கட்டத்தின் போது இந்தியக் குழுவிற்கு வெளியுறவுச் செயலாளராக குன்டேவியா தலைமை தாங்கினார்.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Convince the Opposition". http://www.sunday-guardian.com/analysis/convince-the-opposition.
- ↑ 2.0 2.1 "Outside the Archives - Y D Gundevia". பார்க்கப்பட்ட நாள் 2 December 2012.
- ↑ Lavakare, Arvind. "Another summit, another surrender?". பார்க்கப்பட்ட நாள் 2 December 2012.
- ↑ "Outside the Archives". பார்க்கப்பட்ட நாள் 2 December 2012.
- ↑ Khan, Nyla Ali. "Tribute to Begum Akbar Jehan Abdullah". பார்க்கப்பட்ட நாள் 2 December 2012.
- ↑ Means, Gordon P. (October 1971). "Ceasefire Politics in Nagaland". Asian Survey 11 (10): 1005–1028. doi:10.2307/2642757. https://archive.org/details/sim_asian-survey_1971-10_11_10/page/1005.