பகுப்பு பேச்சு:கூடுதல் மேற்கோள் தேவைப்படும் கட்டுரைகள்
Appearance
எந்த அடிப்படையில் இப்பகுப்பு உள்ளது ?
[தொகு]இப்பகுப்பில் வரும் கட்டுரைகளுக்கு என்ன கூடுதல் மேற்கோள் தேவைப்படுகிறது என தெளிவாகக் கூறினால், என்னால் தாவரவியல் கட்டுரைகளுக்கு தர இயலும். அதற்கு முதலில் தாவரவியல் கட்டுரைகளை பிரிக்க உள்ளேன். பிறகு உரையாடுதல் இன்னும் பொருத்தமாக இருக்கும் என்றே எண்ணுகிறேன். த♥உழவன் (உரை) 02:21, 21 சனவரி 2024 (UTC)
- வார்ப்புரு:Fact இந்த வார்ப்புரு பயன்படுத்தும் இடத்தில் அந்த பகுப்பு வருகிறது. த♥உழவன் (உரை) 02:39, 21 சனவரி 2024 (UTC)
- Citation needed எனும் வார்ப்புருவானது கட்டுரையின் உட்பகுதிகளில் இடப்பட்டிருந்தாலும் இப்பகுப்பு வருமாறு செய்துள்ளார்கள். எனினும், இப்பகுப்பிலுள்ள கட்டுரைகள் ஒழுங்குபடுத்தப்படல் வேண்டும். எடுத்துக்காட்டாக, அம்மன்கோவில்பட்டி. இக்கட்டுரையானது ஒரு மேற்கோள்கூட இல்லாதவை எனும் வகையைச் சேர்ந்தது. -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:11, 21 சனவரி 2024 (UTC)
- இன்னொரு அறிதல்: அந்தரத்தாமரை கட்டுரையின் ஆங்கிலக் கட்டுரையிலும் ஒரு குறிப்பிட்ட தகவலுக்கு Citation needed எனும் வார்ப்புரு உள்ளது. தமிழில் கட்டுரை எழுதும்போது அந்த வார்ப்புரு இங்கும் வந்துவிட்டது. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:23, 21 சனவரி 2024 (UTC)