பகாச் சீர்மம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முழுஎண்கள் வளையச் சீர்மங்கள் சில:
*பகாச் சீர்மங்கள்: செவ்வூதா நிறம்;
*அரைப்பகாச் சீர்மங்கள்: செவ்வூதா மற்றும் பச்சை நிறம்;
*முதனிலை சீர்மங்கள்: செவ்வூதா மற்றும் ஊதா நிறம்.

இயற்கணிதத்தில் பகாச் சீர்மம் (prime ideal) என்பது ஒரு சிறப்பு வகைச் சீர்மமாகும். இவை, ஒரு முழு எண் வளையத்திலுள்ள ஒரு பகா எண்ணுக்குரிய பண்புகளைக் கொண்டமைகின்ற சீர்மங்களாகும்.[1][2]

ஒரு வளையத்தின் (R) ஏதாவது இரு உறுப்புகளின் பெருக்கற்பலனானது அவ்வளையத்தின் ஒரு தகு சீர்மம் P இன் உறுப்பாக இருந்து, அவ்விரு உறுப்புகளில் ஏதேனுமொன்று P இன் உறுப்பாகவும் அமைந்தால், அச்சீர்மம், பகாச் சீர்மம் என அழைக்கப்படுகிறது

எடுத்துக்காட்டு:

வளையத்தின் ஒரு சீர்மம்:
. இது ஒரு பகாச் சீர்மம் ஆகும். ஏனெனில்:
எனில், 2, 3 இன் பெருக்குதொகை 6 . மேலும் எடுத்துக்கொள்ளப்பட்ட இரு எண்களிலொன்றான .

முழுஎண்கள் வளையத்தின் பகாச் சீர்மங்கள், ஏதாவதொரு பகாஎண்ணின் மடங்குளையும் சுழியச் சீர்மத்தையும் உறுப்புகளாகக் கொண்டிருக்கும், பகாச் சீர்மங்கள், முதனிலைச் சீர்மங்களாகவும், அரைப்பகாச் சீர்மங்களாகவும் அமையும்.

பரிமாற்று வளையங்களின் பகாச்சீர்மங்கள்[தொகு]

வரையறை[தொகு]

R என்ற பரிமாற்று வளையத்தின் ஒரு சீர்மம் P ஆனது பகாச்சீர்மமாக இருக்கவேண்டுமெனில் அது கீழுள்ள பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும்:

  • a, b இரண்டும் R இன் இரு உறுப்புகள். மேலும் அவற்றின் பெருக்கற்பலன் ab ஆனது P இன் ஓருறுப்பு எனில், a அல்லது b, P இன் உறுப்பாக இருக்கும்.
  • P ஆனது R க்குச் சமமானதாக இருக்காது; அதாவது, P ஆனது R இன் தகு உட்கணமாக இருக்கும்.

மேலுள்ள பகாச் சீர்மத்துக்கான பண்புகள், கீழ்வரும் பகாஎண்களுக்கானப் பண்பினைப் (யூக்ளிடிய முற்கோள்) பொதுமைப்படுத்தலாக அமைவதைக் காணலாம்:

p ஒரு பகாஎண். a, b ஆகிய இரு முழுவெண்களின் பெருக்கற்பலனான ab ஐ, p வகுக்கிறது எனில், p ஆனது a அல்லது b ஐ வகுக்கும்.

எனவே இதிலிருந்து பெறப்படும் முடிவு:

இன் பகாச் சீர்மமாக 'இருந்தால், இருந்தால் மட்டுமே', n (நேர்ம முழுவெண்) ஒரு பகா எண்ணாக இருக்கும்.

அதாவது:

ஒரு பகாச்சீர்மம் ஒரு பகா எண்.

எடுத்துக்காட்டுகள்[தொகு]

  • வளையத்தில் இரட்டை எண்களின் உட்கணமானது ஒரு பகாச் சீர்மம்.
  • என்ற முழு ஆட்களத்தின் பகா உறுப்பு ஆனது, முதன்மை பகாச் சீர்மத்தைப் () பிறப்பிக்கும்.
  • சிக்கலெண் கெழுக்களுடன் இரு மாறிகளிலமைந்த பல்லுறுப்புக்கோவைகளின் வளையம் என்பதை R குறிக்குமானால், Y 2X 3X − 1 என்ற பல்லுறுப்புக்கோவையால் பிறப்பிக்கப்படும் சீர்மம், பகாச் சீர்மமாக இருக்கும்.
  • என்ற முழுஎண் கெழுக்களைக்கொண்ட பல்லுறுப்புக்கோவை வளையத்தில், 2 மற்றும் X ஆல் பிறப்பிக்கப்படும் சீர்மம், பகாச்சீர்மமாக இருக்கும். அப்பகாச்சீர்மத்திலுள்ள பல்லுறுப்புக்கோவைகள் எல்லாவற்றிலும் மாறிலிக் கெழு இரட்டையெண்ணாக இருக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Dummit, David S.; Foote, Richard M. (2004). Abstract Algebra (3rd ed.). யோன் வில்லி அன் சன்ஸ். பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-43334-9.
  2. Lang, Serge (2002). Algebra. Graduate Texts in Mathematics. Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-387-95385-X.

மேலதிக வாசிப்புக்கு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பகாச்_சீர்மம்&oldid=3913032" இலிருந்து மீள்விக்கப்பட்டது