விக்கிப்பீடியா பேச்சு:பயிலரங்குகள் 2023

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொடர்-தொகுப்பு 2023 எனும் பெயரில் முன்னெடுக்கப்பட்ட திட்டத்தை நடத்துவதற்கு மிகக் கூடுதலான உழைப்பும், தீவிர திட்டமிடலும் அவசியம் என உணரப்பட்டது. இன்றைய சூழலில், தன்னார்வலர்களுக்கு இவை சாத்தியமன்று. அவரவருக்கு தொழில்முறை பணி / சொந்த வேலைகள் என இருக்கின்றன. எனவே, சிறிய அளவில் பயிலரங்குகளை நடத்தத் தீர்மானிக்கப்பட்டு, பயிலரங்குகள் 2023 எனும் திட்டத்தை முன்னெடுத்துள்ளோம். எதிர்வரும் ஆண்டுகளில் தொடர்-தொகுப்பு நிகழ்வுகளை நடத்த முயற்சிகள் எடுப்போம்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:10, 20 ஏப்ரல் 2023 (UTC)

திட்டமிடல்[தொகு]

செயல்வடிவம்[தொகு]

  1. தமிழக ஆசிரியர்கள் எழுதிய கட்டுரைகள் (அல்லது) மேற்கோள்கள் ஒன்றுகூட இல்லாத கட்டுரைகள் - இவற்றில் பெருமளவில் அறிவியற் கட்டுரைகள் இருக்கின்றன. எனவே, அறிவியல் எனும் தலைப்பு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
  2. புதிய பயனர்களுக்கு அடிப்படைப் பயிற்சிகளைத் தந்து அவர்களின் மூலமாக மேம்பாட்டுப் பணிகளைச் செய்தல் என்பது இயலக்கூடியது. ஏற்கனவே இருக்கும் கட்டுரைகளில் மேம்பாட்டுப் பணிகளை செய்யவைப்பதன் வாயிலாக, அவர்களை தொடர்பங்களிப்பாளர்களாக தக்கவைக்க இயலும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நிகழ்வு அமைப்பு[தொகு]

  1. பயிலரங்கம் 2 நாட்கள் (சனி, ஞாயிறு) தொடர்ந்து நடக்க வேண்டும்.
  2. முதல் நாள் காலையில் விக்கிப்பீடியா அறிமுகம். பகலுணவிற்குப் பிறகு தொகுத்தலுக்கான பயிற்சி.
  3. இரண்டாம் நாள் முழுவதும் பயிற்சியாளர்களின் உறுதுணையோடு புதுப் பயனர்கள் மேம்பாட்டுப் பணிகளைச் செய்தல்.

இலக்கு / குறிக்கோள்[தொகு]

  • புதிய கட்டுரைகளை உருவாக்கும் எண்ணம் இல்லை.
  • ஒவ்வொரு பயிலரங்கிலும் 10 பயிற்சி வழங்குபவர் கலந்துகொள்ள வேண்டும்.
  • ஆசிரியர்களுக்கான பயிலரங்கு
◇ 50 புதுப் பயனர்கள்
◇ முதல் நாளில் 50 கட்டுரைகளை செம்மைப்படுத்த வேண்டும். (ஒருவருக்கு 1 கட்டுரை)
◇ இரண்டாம் நாளில் 200 கட்டுரைகளை செம்மைப்படுத்த வேண்டும். (ஒருவருக்கு 4 கட்டுரைகள்)
◇ பயிலரங்கு நிறைவின்போது 250 கட்டுரைகள் செம்மைப்படுத்தப்பட்டிருக்கும்.
  • மாணவர்களுக்கான பயிலரங்கு
◇ 50 புதுப் பயனர்கள்
◇ முதல் நாளில் 50 கட்டுரைகளை செம்மைப்படுத்த வேண்டும். (ஒருவருக்கு 1 கட்டுரை)
◇ இரண்டாம் நாளில் 200 கட்டுரைகளை செம்மைப்படுத்த வேண்டும். (ஒருவருக்கு 4 கட்டுரைகள்)
◇ பயிலரங்கு நிறைவின்போது 250 கட்டுரைகள் செம்மைப்படுத்தப்பட்டிருக்கும்.

தயார் நிலை[தொகு]

  1. ஒவ்வொரு பயிலரங்கத்திற்கும் 1,000 தலைப்புகளைக் கொண்ட ஒரு பட்டியல்

பயிற்சி பெறவிருக்கும் பயனர்கள்[தொகு]

  1. கல்லூரி ஆசிரியர்கள்
  2. கல்லூரி மாணவர்கள்

துறைகள்[தொகு]

  1. கணிதம்
  2. இயற்பியல்
  3. வேதியியல்
  4. தாவரவியல்
  5. விலங்கியல்
  6. உயிர் வேதியியல்
  7. உயிர் தொழினுட்பம்
  8. நுண் உயிரியல்
  9. கணினி அறிவியல்
  10. புவியியல்
  11. வணிகவியல்
  12. பொருளாதாரம்
  13. வரலாறு
  14. சமூகவியல்

நிகழ்விடங்கள் குறித்தான முன்வரைவுத் தொகுப்பு[தொகு]

  1. திருநெல்வேலியில் அமைந்துள்ள ஒரு கல்லூரியில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி - சூலை 2023
  2. திருநெல்வேலியில் அமைந்துள்ள அதே கல்லூரியில் மாணவர்களுக்குப் பயிற்சி - ஆகத்து 2023
  3. குமாரபாளையம் (நாமக்கல் மாவட்டம்) ஊரில் அமைந்துள்ள கல்வியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்குப் பயிற்சி - செப்டம்பர் 2023

விக்கிமீடியா அமைப்பிடமிருந்து நிதி பெறுதல்[தொகு]

கூறுகள்[தொகு]

  1. பயிற்சியாளர்களுக்குரிய பயணச் செலவுகள், தங்குமிடச் செலவுகள், உணவுச் செலவுகள்
  2. புதுப் பயனர்களுக்கான உணவு மற்றும் கவனிப்புச் செலவுகள்
  3. குறிப்பேடு, எழுதுகோல்கள் வழங்குதல்
  4. சான்றிதழ் வழங்குதல்

நிதியின் வகை[தொகு]

Rapid Funds

பெறும் வழிக்கான உதவிக் குறிப்புகள்[தொகு]

  1. 2022-2023 Fiscal year

நிகழ்வு நடைபெறும் இடத்தில் ஒருங்கிணைக்க அல்லது பயிற்சியாளராக பங்களிக்க விருப்பமுள்ளவர்கள்[தொகு]

  • திருநெல்வேலி, குமாரபாளையம் (நாமக்கல் மாவட்டம்) ஊர்களில் நிகழ்வுகளை நடத்த திட்டமிடப்படுகிறது. நிகழ்வின்போது ஒருங்கிணைக்க விருப்பமுள்ளவர்கள், பயிற்சியாளராக பங்களிக்க விரும்புபவர்கள் தங்களது பெயரினை இங்கு பதிவிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
▷ திட்டமிடுதல், விக்கிமீடியாவிலிருந்து நிதி உதவி பெறுதல், கல்வி நிறுவனங்களுடன் இணைந்து ஒருங்கிணைத்தல் ஆகியவற்றை திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கவனித்துக் கொள்வர்.
▷ அவரவரின் வசதிக்கேற்ப சொந்த ஊர், அருகிலுள்ள ஊர் அல்லது தொலைவிலுள்ள ஊர் (தமிழ்நாட்டிற்குள்) இவற்றில் நடக்கும் நிகழ்வுகளில் கலந்துகொள்ளலாம். இப்போதைக்கு, ஏற்க விருப்பமுள்ள பொறுப்பு குறித்து குறிப்பிட்டால் போதுமானது. திட்ட வரைவு ஒரு குறிப்பிட்ட நிலையை அடைந்ததும், விரிவாகத் திட்டமிடலாம்.
▷ இயன்றளவு சனி, ஞாயிறு நாட்களில் நடத்துவதற்கு திட்டமிடுகிறோம். இயலாத இடங்களில் வெள்ளி, சனி நாட்களில் நடத்தப்படும்.
  1. ஒருங்கிணைப்பாளர், பயிற்சியாளர் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:28, 20 ஏப்ரல் 2023 (UTC)
  2. ஒருங்கிணைப்பாளர் (கல்லூரி அளவில்), பயிற்சியாளர்-சத்திரத்தான்

கல்லூரி பயிற்சி தொடர்பாக[தொகு]

தற்பொழுது பருவத் தேர்வுகள், கோடை விடுமுறை காரணமாகக் கல்லூரி ஆசிரியர்கள் மாணவர்களுக்கான பயிற்சியினை மே மாதம் நடத்துவதில் போதிய ஒத்துழைப்பு கல்லூரி நிர்வாகத்திடமிருந்து கிடைப்பதில் உள்ள சிக்கல்/காலதாமதம் காரணமாக இந்நிகழ்வினை பள்ளி ஆசிரியர்களுக்கு முதலில் மேற்கொள்ளலாம். கல்லூரி பருவ விடுமுறை முடிந்து சூன் மாதம் திறக்கும்போது கல்லூரிகளில் மேற்கொள்ளலாம். --சத்திரத்தான் (பேச்சு) 16:00, 21 ஏப்ரல் 2023 (UTC)

தகவலுக்கு நன்றி; நிகழ்விடங்கள் குறித்தான முன்வரைவுத் தொகுப்பு பகுதியில் இற்றை செய்துள்ளேன். —-மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு)

நிதி உதவி கோரிக்கை குறித்தான இற்றைகள்[தொகு]

  1. 05-மே-2023: நிதிக்கான விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளோம். வேண்டப்பட்டுள்ள நிதியின் மதிப்பு = US$2906.70 (இந்தியப் பண மதிப்பின்படி, உரூபாய் 2,37,600) —-மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:50, 8 மே 2023 (UTC)[பதிலளி]
  2. 11-மே-2023: தகவலுக்காக: மேல்விக்கியில் வெளியிடப்பட்டுள்ள நமது 'நிதி கோரிக்கை'. மேல்விக்கிப் பக்கத்தில் தற்சமயம் நாம் எதுவும் செய்யவேண்டியது இல்லை. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:28, 11 மே 2023 (UTC)[பதிலளி]
  3. பார்வைக்காக: நமது கோரிக்கை போன்றதொரு கோரிக்கையை மலையாள விக்கிப்பீடியாவில் வைத்துள்ளனர்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:22, 12 மே 2023 (UTC)[பதிலளி]
  4. 11-சூன்–2023: நிதி கோரிக்கையானது திறனாய்வு செய்யப்பட்டதா என்பது குறித்தான தகவல் இன்றுவரை கிடைக்கவில்லை. 3 மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டும் பதில் எதுவும் கிடைக்கவில்லை. இந்த இணைப்பில் உள்ள அட்டவணையின்படி அனைத்துத் திறனாய்வுகளும் நிறைவுற்றிருக்க வேண்டும். ஆனால், விண்ணப்பம் தாக்கல் செய்ததோடு அப்படியே நிற்கிறது.
  5. 16-சூன்-2023: நம்மால் கடைசியாக அனுப்பப்பட்ட மின்னஞ்சலுக்கு பதில்-மின்னஞ்சலைப் பெற்றோம். நமது கோரிக்கை மீதான திறனாய்வை அடுத்து வாரத்தில் எடுத்துக்கொள்ள இருப்பதாக, தெற்காசியப் பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.
  6. 20-சூன்-2023: முதற்கட்ட திறனாய்வு முடிந்து, நமக்கு சில கேள்விகள் வைக்கப்பட்டுள்ளன. பதிலளிக்க வேண்டும்.