உள்ளடக்கத்துக்குச் செல்

ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோர்ஜ் VI
பொதுநலவாயத்தின் தலைவர்
ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ்
ஆறாம் ஜோர்ஜ்
ஐக்கிய இராச்சியத்தினதும், ஏனைய மேலாட்சிகளின் அரசர்
ஆட்சிக்காலம்11 திசம்பர் 1936 –
6 பெப்பிரவரி 1952
முடிசூடல்12 மே 1937
முன்னையவர்எட்டாம் எட்வர்டு
பின்னையவர்இரண்டாம் எலிசபெத்
இந்தியாவின் பேரரசர்
ஆட்சிக்காலம்11 திசம்பர் 1936 –
15 ஆகத்து 1947
முன்னையவர்எட்டாம் எட்வர்டு
பின்னையவர்பதவி நீக்கப்பட்டது[a]
பிறப்புயோர்க்கின் இளவரசர் ஆல்பெர்ட்
(1895-12-14)14 திசம்பர் 1895
யார்க் காட்டேஜ் , சான்ட்ரிங்காம், நோர்போக் , இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம்
இறப்பு6 பெப்ரவரி 1952(1952-02-06) (அகவை 56)
சான்ட்ரிங்காம் மாளிகை , நோர்போக், இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம்
புதைத்த இடம்15 பெப்பிரவரி 1952
ராயல் வால்ட்,புனித ஜார்ஜ் தேவாலயம், வின்ட்சர் கோட்டை;
26 மார்ச்சு 1969
கிங் ஜார்ஜ் VI மெமோரியல் சேப்பல்,புனித ஜார்ஜ் தேவாலயம்
துணைவர்
குழந்தைகளின்
பெயர்கள்
பெயர்கள்
ஆல்பெர்ட் ஃபெரடரிக் அர்துர் ஜார்ஜ்
மரபு
  • வின்சர் (1917க்கு பின்)
  • சாக்சு-கோபர்கு மற்றும் கோத்தா(1917க்கு முன்)
தந்தைஐந்தாம் சியார்ச்
தாய்மேரி
கையொப்பம்w:en:File:George VI signature 1945.svg
இராணுவப் பணி
சேவை/கிளை
சேவை காலம்1913–1919
போர்கள்/யுத்தங்கள்

ஆறாம் ஜார்ஜ் ( George VI ஆல்பெர்ட் ஃபெரடரிக் அர்துர் ஜார்ஜ்; 14 டிசம்பர் 1895- 6 பிப்ரவரி 1952) என்பவர் ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரித்தானியப் பேரரசின் நிலப்பரப்புகளின் அரசராக 11 டிசம்பர் 1936 முதல் தனது இறப்பு வரை இருந்தார். இந்தியாவின் கடைசி பேரரசராகவும் (1947 வரை), அயர்லாந்தின் கடைசி அரசராகவும் (1949 வரை), பொதுநலவாய நாடுகளின் முதல் தலைவராகவும் இருந்தார்.

ஐந்தாம் ஜார்ஜின் இரண்டாவது மகனாக இருந்ததால் அரசராக முடிசூடுவார் என்று எதிர்பார்க்கப்படவில்லை. தனது இளமைக்காலத்தை அவருடைய அண்ணனான எட்வார்டின் நிழலிலேயே கழித்தார். முதலாம் உலகப்போரின் போது கடற்படையில் பணியாற்றினார். போருக்குப் பின்னர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். 1923ம் வருடம் பெருமாட்டி எலிசபெத் போவஸ்-லயான் (Lady Elizabeth Bowes-Lyon) என்பவரை மணந்தார். அவர்களுக்கு எலிசபெத் (பின்னர் இரண்டாம் எலிசபெத்), மார்கரேத் என்று இரண்டு மகள்கள் பிறந்தனர்.

1936ம் ஆண்டு தந்தையின் மறைவுக்குப் பின்னர், ஜார்ஜின் அண்ணன் எட்வார்ட் VIII என்ற பெயரில் அரியணை ஏறினார். எனினும், ஒரு வருடத்திற்குள் வாலிஸ் சிம்ப்ஸன் என்னும் இருமுறை விவாகரத்துப் பெற்ற அமெரிக்கப் பெண்மணியை மணப்பதாக எட்வார்ட் தன் ஆசையை வெளிப்படுத்தினார். ஆனால் பிரிட்டனின் பிரதமராக இருந்த ஸ்டான்லி பால்ட்வின் அப்பெண்ணை மணந்தபின் அரசராக இருக்க முடியாது என்று எட்வார்டிடம் அறிவுறுத்தினார். அதனால் அப்பெண்ணை மணப்பதற்காக தனது தம்பியிடம் அரசாட்சியை ஒப்படைத்தார். ஆகவே, விண்ட்ஸர் குடியின் மூன்றாம் மன்னராக ஆறாம் ஜார்ஜ் அரியணை ஏறினார்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "No. 38330". இலண்டன் கசெட். 22 June 1948. p. 3647. Royal Proclamation of 22 June 1948, made in accordance with the Indian Independence Act 1947, 10 & 11 GEO. 6. CH. 30. ('Section 7')
  2. Mayall, James, ed. (2009). The Contemporary Commonwealth: An Assessment 1965-2009 (in ஆங்கிலம்). London and New York: Routledge: Taylor & Francis Group. p. 22. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-135-23830-8. On independence in 1947, George VI became 'King of India' until the adoption of republican status in 1950.
  3. Judd, p. 3; Rhodes James, p. 90; Townsend, p. 15; Wheeler-Bennett, pp. 7–8

குறிப்புகள்

[தொகு]
  1. 22 ஜூன் 1948 வரை இந்தியாவின் பெயரிடப்பட்ட பேரரசராக ஆறாம் ஜார்ஜ் தொடர்ந்தார்.