குயிலி (கதாபாத்திரம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குயிலி (Kuyili) என்பவர் பதினெட்டாம் நூற்றாண்டில் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய பெண் போராளி எனப்படும் ஒரு கற்பனை பாத்திரம் ஆகும்.[1] இவர் இருந்ததற்கான சான்றுகள் வரலாற்றில் இல்லை என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.[2][3] இவர் குறித்த கதைகள் ஜீவபாரதி எழுதிய வேலு நாச்சியார் என்ற புதினத்தை அடிப்படையாக கொண்டவை.[4]

இவர் பற்றிய கதைகள்

சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரை ஆங்கிலேய அரசாங்கம் சுட்டுக்கொன்ற பின்னர், 8 ஆண்டுகள் அவர் மனைவி வேலு நாச்சியார் தலைமறைவாக இருந்தார். அப்போது ஆங்கிலேயர்களுக்காக உளவு பார்த்த வெற்றிவேல் என்பவரை குயிலி குத்திக் கொன்றார்.[சான்று தேவை] அதனால் வேலுநாச்சியார் தனது மெய்க்காப்பாளராக குயிலியை நியமித்தார்.[சான்று தேவை]

குயிலி வேலுநாச்சியாரின் போர்படையில் பெண்கள் படைக்குத் தலைமையேற்றார்.[சான்று தேவை] வெள்ளையரை எதிர்த்துப் போரிடும் போது சிவகங்கை அரண்மனையில் வெள்ளையரின் ஆயுதக்கிடங்கில் குயிலி தன் உடலில் எண்ணை பூசி ஆயுதக்கிடங்கில் புகுந்து தன்னைத்தானே தீவைத்துக்கொண்டு ஆயுதக்கிடங்கை அழித்தார்.[சான்று தேவை] என்பது போன்ற கதைகள் உலவுகின்றன.

சர்ச்சைகள்

இவர் ஒரு கற்பனையான பாத்திரமென்று தகுந்த ஆதாரங்களுடன் நிருவப்பட்ட ஒப்பனைகளின் கூத்து எனும் குருசாமி மயில்வாகனன் எழுதியுள்ள நூல் வெளி வந்து சர்ச்சையை ஏற்படுத்தியது.[2]

இவரது சமூகம் குறித்து மாறுபட்ட கருத்துக்கள் கூறப்படுகின்றன. அதன் படி, இவர் மறவர் இனப் பெண்ணாக, அருந்ததியர் இனப் பெண்ணாக,[5][6][7] பறையர் இனப் பெண்ணாக, பலர் சொந்தம் கொண்டாடுகின்றனர்.[8]

மேற்கோள்கள்

  1. "வரலாற்றை ஏன் புனைவாக எழுத வேண்டும்?". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2023-01-19.
  2. 2.0 2.1 குருசாமி மயில்வாகனன், ed. (07 செப்டம்பர் 2018). வீரமங்கை குயிலி ஒரு கற்பனைப் பாத்திரம். குங்குமம் இதழ். {{cite book}}: Check date values in: |year= (help)
  3. "கற்பனையான குயிலிக்குச் சிவகங்கையில் சிலையா?". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2022-08-01.
  4. தினத்தந்தி (2018-11-05). "குயிலி கற்பனையா? வரலாறா?". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2022-08-01.
  5. குங்குமம் ஸ்பெஷல், ed. (16 டிசம்பர் 2016). வியூகங்களால் வென்றவள் ராணி வேலுநாச்சியார். குங்குமம் வார இதழ். குயிலி வேலுநாச்சியாரின் மெய்க்காப்பாளர் குயிலி. தாழ்த்தப்பட்ட அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்தவர். மெய்க்காப்பாளராக விளங்கிய குயிலி பெண்கள் படைக்கு தளபதியாக்கப்பட்டார். {{cite book}}: Check date values in: |year= (help); line feed character in |quote= at position 7 (help)
  6. ப. சரவணன், ed. (2014). இந்திய சுதந்தரப் போராட்ட வீரர்கள். குயிலி தாழ்த்தப்பட்ட அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்தவள். இதைக் காரணம் காட்டி ஒரு கும்பல், குயிலியின் மேல் துவேஷத்தை வளர்க்க முனைந்தது. வேலு நாச்சியாரோ குயிலிக்கு தம் ஆதரவுக் கரத்தை இரும்பு அரணாக வைத்து காத்து வந்தார்.
  7. ஆங்கிலேயரின் ஆயுதக் கிடங்கை தகர்த்த குயிலிக்கு வேலுநாச்சியார் அங்கீகாரம். தினமணி நாளிதழ்year=31 டிசம்பர் 2012.
  8. குருசாமி மயில்வாகனன், ed. (நவம்பர் 05, 2018). குயிலி கற்பனையா? வரலாறா?. தினத்தந்தி நாளிதழ். {{cite book}}: Check date values in: |year= (help); Cite has empty unknown parameter: |1= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=குயிலி_(கதாபாத்திரம்)&oldid=3641119" இலிருந்து மீள்விக்கப்பட்டது