குயிலி (கதாபாத்திரம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குயிலி (Kuyili) என்பவர் பதினெட்டாம் நூற்றாண்டில் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய பெண் போராளி எனப்படும் ஒரு கற்பனை பாத்திரம் ஆகும்.[1] இவர் இருந்ததற்கான சான்றுகள் வரலாற்றில் இல்லை என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.[2][3] இவர் குறித்த கதைகள் ஜீவபாரதி எழுதிய வேலு நாச்சியார் என்ற புதினத்தை அடிப்படையாக கொண்டவை.[4]

இவர் பற்றிய கதைகள்

சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரை ஆங்கிலேய அரசாங்கம் சுட்டுக்கொன்ற பின்னர், 8 ஆண்டுகள் அவர் மனைவி வேலு நாச்சியார் தலைமறைவாக இருந்தார். அப்போது ஆங்கிலேயர்களுக்காக உளவு பார்த்த வெற்றிவேல் என்பவரை குயிலி குத்திக் கொன்றார்.[சான்று தேவை] அதனால் வேலுநாச்சியார் தனது மெய்க்காப்பாளராக குயிலியை நியமித்தார்.[சான்று தேவை]

குயிலி வேலுநாச்சியாரின் போர்படையில் பெண்கள் படைக்குத் தலைமையேற்றார்.[சான்று தேவை] வெள்ளையரை எதிர்த்துப் போரிடும் போது சிவகங்கை அரண்மனையில் வெள்ளையரின் ஆயுதக்கிடங்கில் குயிலி தன் உடலில் எண்ணை பூசி ஆயுதக்கிடங்கில் புகுந்து தன்னைத்தானே தீவைத்துக்கொண்டு ஆயுதக்கிடங்கை அழித்தார்.[சான்று தேவை] என்பது போன்ற கதைகள் உலவுகின்றன.

சர்ச்சைகள்

இவர் ஒரு கற்பனையான பாத்திரமென்று தகுந்த ஆதாரங்களுடன் நிருவப்பட்ட ஒப்பனைகளின் கூத்து எனும் குருசாமி மயில்வாகனன் எழுதியுள்ள நூல் வெளி வந்து சர்ச்சையை ஏற்படுத்தியது.[2]

இவரது சமூகம் குறித்து மாறுபட்ட கருத்துக்கள் கூறப்படுகின்றன. அதன் படி, இவர் மறவர் இனப் பெண்ணாக, அருந்ததியர் இனப் பெண்ணாக,[5][6][7] பறையர் இனப் பெண்ணாக, பலர் சொந்தம் கொண்டாடுகின்றனர்.[8]

மேற்கோள்கள்

  1. "வரலாற்றை ஏன் புனைவாக எழுத வேண்டும்?". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2023-01-19.
  2. 2.0 2.1 குருசாமி மயில்வாகனன், தொகுப்பாசிரியர் (07 செப்டம்பர் 2018). வீரமங்கை குயிலி ஒரு கற்பனைப் பாத்திரம். குங்குமம் இதழ். http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=14174&id1=5&issue=20180907. 
  3. "கற்பனையான குயிலிக்குச் சிவகங்கையில் சிலையா?". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2022-08-01.
  4. தினத்தந்தி (2018-11-05). "குயிலி கற்பனையா? வரலாறா?". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2022-08-01.
  5. குங்குமம் ஸ்பெஷல் , தொகுப்பாசிரியர் (16 டிசம்பர் 2016). வியூகங்களால் வென்றவள் ராணி வேலுநாச்சியார். குங்குமம் வார இதழ். http://www.kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=3641&id1=118&issue=20161216. "குயிலி வேலுநாச்சியாரின் மெய்க்காப்பாளர் குயிலி. தாழ்த்தப்பட்ட அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்தவர். மெய்க்காப்பாளராக விளங்கிய குயிலி பெண்கள் படைக்கு தளபதியாக்கப்பட்டார்." 
  6. ப. சரவணன், தொகுப்பாசிரியர் (2014). இந்திய சுதந்தரப் போராட்ட வீரர்கள். https://books.google.co.in/books?id=VLFdDwAAQBAJ&pg=PT47&dq=%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D&hl=en&sa=X&ved=0ahUKEwiVpYzb_YbrAhV04XMBHcmQDFcQ6AEIKDAA#v=onepage&q=%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D&f=false. "குயிலி தாழ்த்தப்பட்ட அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்தவள். இதைக் காரணம் காட்டி ஒரு கும்பல், குயிலியின் மேல் துவேஷத்தை வளர்க்க முனைந்தது. வேலு நாச்சியாரோ குயிலிக்கு தம் ஆதரவுக் கரத்தை இரும்பு அரணாக வைத்து காத்து வந்தார்." 
  7.  , தொகுப்பாசிரியர். ஆங்கிலேயரின் ஆயுதக் கிடங்கை தகர்த்த குயிலிக்கு வேலுநாச்சியார் அங்கீகாரம். தினமணி நாளிதழ்year=31 டிசம்பர் 2012. https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2012/dec/31/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4--%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-609285.html. 
  8. குருசாமி மயில்வாகனன், தொகுப்பாசிரியர் (நவம்பர் 05, 2018). குயிலி கற்பனையா? வரலாறா?. தினத்தந்தி நாளிதழ். https://www.dailythanthi.com/News/Sirappukatturaigal/2018/11/05052647/Kuili-fantasy-History.vpf. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குயிலி_(கதாபாத்திரம்)&oldid=3641119" இலிருந்து மீள்விக்கப்பட்டது