த. இராமசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

த. இராமசாமி (T. Ramasamy) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இராமநாதபுரத்தினைச் சார்ந்த இராமசாமி சூலை 17, 1942ஆம் ஆண்டு பிறந்தார். இராமநாதபுரம் இராஜா உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்ற இவர், இராமநாதபுரம் நகராட்சி உறுப்பினராகவும் இருந்துள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த இவர் 1977, 1980 மற்றும் 1984ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற இராமநாதபுரம் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகப் பதவியிலிருந்துள்ளார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. தமிழ் நாடு சட்ட மன்றப் பேரவை ”யார் எவர்”. சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை. 01.09.1977 [1977]. p. 355. {{cite book}}: Check date values in: |date= (help); More than one of |pages= and |page= specified (help); Unknown parameter |trans_title= ignored (help); Unknown parameter |மொழி-= ignored (help)CS1 maint: date and year (link)
  2. தமிழ் நாடு சட்ட மன்றப் பேரவை ”யார் எவர்”. சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை. 30.01.1981 [1980]. p. 73. {{cite book}}: Check date values in: |date= and |year= / |date= mismatch (help); More than one of |pages= and |page= specified (help); Text "publication-date30.01.1980" ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=த._இராமசாமி&oldid=3409825" இலிருந்து மீள்விக்கப்பட்டது