அமீதா சிங்
அமீதா சிங் | |
---|---|
சட்டப் பேரவை உறுப்பினர், உத்தரப் பிரதேசம் | |
பதவியில் 2002–2012 | |
பின்னவர் | காயத்திரி பிரசாத் பிரஜாபதி |
தொகுதி | அமேதி சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | அமீத குல்கர்னி 4 அக்டோபர் 1962 மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
தேசியம் | இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | சையத் மோடி 1984 - 1988/சஞ்சய் சிங் |
வேலை | அரசியல்வாதி, முன்னாள் தேசிய இறகுப்பந்தாட்ட வாகையாளர், முன்னாள் கல்வி அமைச்சர் |
அறியப்படுவது | தலைவர், தில்லி கேபிடல் இறகுப்பந்தாட்டச் சங்கம், அகில இந்திய தொழில்முறை காங்கிரசு, சமூக பணி, அமேதியின் ஆர்ஆர்எஸ்ஜிஐ நிறுவனங்களின் குழுவின் துணைத் தலைவர், 1982 ஆசிய விளையாட்டில் வெண்கலப் பதக்கம் வென்றவர். |
அமீதா சிங் (Ameeta Singh) (பிறப்பு 4 அக்டோபர் 1962 ) அமிதா குல்கர்னியாக பிறந்த இவர் இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் முன்பு தேசிய இறகுப்பந்தாட்ட வீரராக இருந்தார். இவர் அமேதி/சுல்தான்பூர் மாவட்டத்தில் உள்ள மாவட்டப் பேரூராட்சியின் தலைவராக இருந்துள்ளார். உத்தரப்பிரதேச சட்டமன்றத்தில் அமேதி சட்டமன்றத் தொகுதிக்கு மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் உத்தரப்பிரதேச மாநில அமைச்சராக இருந்துள்ளார். தற்போது தில்லி இறகுப்பந்தாட்டச் சங்கத்தின் தலைவராக உள்ளார். மேலும், தில்லி மாநிலத்திற்கான சர்வதேச போட்டியாளர்களை உருவாக்கும் நோக்கில் பணியாற்றுகிறார்
இவர், நேரு-காந்தி குடும்பத்திற்கு நெருக்கமானவரும், அமேதியின் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதியும் அமேதியின் முன்னாள் அரச குடும்பத்தின் தத்தெடுப்புமான சஞ்சய் சிங் என்பவரை மணந்தார்.
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]அமீதா சிங் 4 அக்டோபர் 1962 இல் பிறந்தார். இவர் 1970களில் இறகுப்பந்தாட்ட விளையாட்டில் தேசிய வாகையாளானார்.[1] 1984ஆம் ஆண்டில், இவர் தனது வெற்றிகரமான விளையாட்டு வாழ்க்கையில் பங்கெடுத்த மற்றொரு தேசிய வாகையாளரான சையத் மோடியை மணந்தார். 1988 இல் சையத் மோடி சுட்டுக் கொல்லப்பட்டபோது இவர்களின் திருமணம் முடிந்தது. நடுவண் புலனாய்வுச் செயலகம் அமீதாவும் சஞ்சயும் ஒரு உறவில் இருப்பதாகக் குற்றம் சாட்டியது. ஆனாலும், இவர்கள் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும் அந்த நேரத்தில் சஞ்சய் இன்னும் திருமணம் செய்து கொண்டார். சஞ்சயின் முதல் மனைவி கரிமாவின் விவாகரத்துக்கு ஏற்பட்ட ஒரு சட்ட சவால் 1998இல் இந்திய உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. இருப்பினும் தம்பதியினர் தாங்கள் சட்டப்பூர்வமாக திருமணம் செய்ததன் மூலம் பிறந்த மூன்று குழந்தைகளைத் தவிர, சஞ்சய் அமீதாவின் மகளை சட்டப்படி தத்தெடுத்துள்ளார்.[2] சையத் மோடியின் இறப்புக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு அமீதாவுக்கு மகள் பிறந்தார். [3]
அமீதா 2003இல் பைசாபாத்தின் டாக்டர் ராம் மனோகர் லோஹியா அவத் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். அதே நிறுவனத்திலிருந்து 2011இல் சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்றார்.[4]
அரசியல் வாழ்க்கை
[தொகு]அமீத சிங் ஆகத்து 2000 மற்றும் பிப்ரவரி 2002க்கும் இடையில் அமேதி/சுல்தான்பூர் மாவட்டப் பேரூராட்சியின் தலைவராக இருந்தார்.[5] இவர் 2002ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா வேட்பாளராக அமேதி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார்.[6] மீண்டும் 2007 தேர்தலில், இந்த முறை இந்திய தேசிய காங்கிரசு கட்சி வேட்பாளராக வென்றார்.[7] 2002 தேர்தலின் போது இவரது கணவர் சஞ்சய் சிங் பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதியாக இருந்தார். சஞ்சய் சிங் காங்கிரசில் தனது வாழ்க்கையைத் தொடங்கி, ஜனதா தளம் கட்சிக்கும் பின்னர் பாரதிய ஜனதா கட்சிக்கும் சென்றார். 2003 இல் மீண்டும் காங்கிரசுக்குத் திரும்பினார்.[8] சஞ்சய் தொழில்நுட்பக் கல்வி அமைச்சராகவும் இருந்தார்.
2012 ஆம் ஆண்டில், நடந்த மாநில சட்டமன்றத் தேர்தலின் போது அமேதி தொகுதியில் காங்கிரசு வேட்பாளராக அமீதா நின்றார். இவர் சமாஜ்வாடி கட்சியின் காயத்ரி பிரஜாபதியிடம் தோற்றார். [9] பின்னர், சுல்தான்பூர் மக்களவைத் தொகுதியில் இந்திய நாடாளுமன்றத்துக்கு 2014இல் நடந்த தேர்தலில் காங்கிரசு வேட்பாளராகப் போட்டியிட்டார். ஆனால் மூன்றாவது இடத்தையே பிடித்தார். பாஜகவின் வருண் காந்தி வெற்றியாளராக இருந்தார்.[10]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Naqvi, L. H. (18 February 2002). "Political mood in Nehru-Gandhi land". The Tribune. http://www.tribuneindia.com/2002/20020220/nation.htm. பார்த்த நாள்: 2018-02-04.
- ↑ Mathur, Swati (3 August 2014). "Battle royal in Amethi". The Times of India. https://timesofindia.indiatimes.com/home/sunday-times/deep-focus/Battle-royal-in-Amethi/articleshow/39520782.cms. பார்த்த நாள்: 2018-02-04.
- ↑ Weinraub, Bernard (28 August 1988). "India Murder Scandal Mixes Sex and Politics". New York Times. https://www.nytimes.com/1988/08/28/world/india-murder-scandal-mixes-sex-and-politics.html. பார்த்த நாள்: 2018-02-07.
- ↑ myneta (April 2017). "AMEETA SINGH(Criminal & Asset Declaration)". myneta. பார்க்கப்பட்ட நாள் 17 April 2013.
- ↑ "List of Zila Panchayat Adhyaksh, Sultanpur" (PDF). sultanpur.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2018-02-06.
- ↑ Pathak (17 February 2017). "Star wars in Amethi: Amita versus Garima". The Hindu. http://www.thehindu.com/elections/uttar-pradesh-2017/Star-wars-in-Amethi-Amita-versus-Garima/article17315307.ece. பார்த்த நாள்: 2018-02-07.
- ↑ Srivastava (12 February 2017). "'Queens' & knight in Amethi battle". The Telegraph. https://www.telegraphindia.com/1170212/jsp/nation/story_135347.jsp. பார்த்த நாள்: 2018-02-07.
- ↑ "Sanjay Singh comes full circle". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 21 August 2003 இம் மூலத்தில் இருந்து 2013-11-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131109091741/http://articles.timesofindia.indiatimes.com/2003-08-21/india/27200369_1_amethi-lok-sabha-constituency-gandhi-family-rajiv-gandhi. பார்த்த நாள்: 2018-02-07.
- ↑ Agha, Eram (11 March 2017). "Riding Garima Singh's 'Sympathy Wave', BJP Storms Gandhi Bastion". News18. http://www.news18.com/news/politics/riding-on-garima-singhs-sympathy-wave-bjp-storms-gandhi-bastion-1359092.html.
- ↑ "Election Results 2014: BJP Leader Varun Gandhi Wins From Sultanpur". NDTV. 16 May 2014. https://www.ndtv.com/elections-news/election-results-2014-bjp-leader-varun-gandhi-wins-from-sultanpur-562233.