உதா தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உதா தேவி
ஆகஸ்ட் 19, 2016 அன்று லக்னோவின் சிக்கந்தர் பாக் நகரில் சுதந்திர போராட்ட வீரர் உதா தேவிக்கு மரியாதை செலுத்தும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜே. பி. நட்டா
இறப்பு1857 நவம்பர்
சிக்கந்தர் பாக், இலக்னோ, இந்தியா
அறியப்படுவதுசிப்பாய்க் கிளர்ச்சி, 1857

உதா தேவி (Uda Devi) 1857ஆம் ஆண்டு நடந்த இந்திய கிளர்ச்சியில் ஒரு வீராங்கனையாக இருந்தார். இவர் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்துக்கு எதிராக போராடினார்.

பின்னணி[தொகு]

ஜான்சி ராணி போன்ற உயர் சாதி கதாநாயகிகளின் எதிர்ப்பு பங்களிப்புகளை உயர் சாதி வரலாறுகள் எடுத்துக்காட்டுகின்றன என்றாலும், பிரிட்டிசு காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெறுவதற்கான போர்களில் தேவி போன்ற தலித் எதிர்ப்பு போராளிகளும் இடம்பெற்றிருந்தார்கள் என்பதே உண்மை. [1] தேவி மற்றும் பிற பெண் தலித் பங்கேற்பாளர்கள் 1857 இந்திய கிளர்ச்சியின் வீரர்கள் அல்லது "தலித் வீரங்கனைகள்" என்று இன்று நினைவுகூரப்படுகிறார்கள். [2] இவர், இராணி அசரத் மஹாலின் இராணுவத்தில் சிப்பாயாக இருந்த மக்கா பாசியை மணந்தார். [3]

படைப்பிரிவு[தொகு]

பிரிட்டிசு நிர்வாகத்துடன் இந்திய மக்களின் கோபம் அதிகரித்து வருவதைக் கண்ட அந்த மாவட்டத்தின் இராணியான பேகம் அசரத் மகால் 1857–58 கிளர்ச்சியின் போது தனது ஆதரவாளர்களோடு கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராகப் போரில் ஈடுபட்டபோது இவரும் அவருக்கு ஆதரவாக இருந்தார். இவரது தலைமையில் ஒரு பெண்கள் இராணுவத்தை உருவாக்க பேகம் இவருக்கு உதவினார் . [4] ஆங்கிலேயர்கள் அவத்தை தாக்கியபோது, உதா தேவியும் இவரது கணவரும் ஆயுதமேந்திய எதிர்ப்பின் ஒரு பகுதியாக இருந்தனர். தனது கணவர் போரில் இறந்துவிட்டார் என்று கேள்விப்பட்டபோது, இவர் தனது இறுதிப் போரில் முழு பலத்துடன் ஈடுபட்டார்.

சிக்கந்தர் பாக் போர்[தொகு]

உதா தேவி நவம்பர் 1857 இல் சிக்கந்தர் பாக் போரில் பங்கேற்றார். தனது படைப்பிரிவுக்கு கட்டளையிட்ட பின்னர், இவர் ஒரு மரத்தில் ஏறி பிரிட்டிசு வீரர்களை நோக்கி சுடத் தொடங்கினார். மறைந்திருந்து தாக்கும் இவரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் இவர் இறந்தார். [5]

நினைவு[தொகு]

உத்தரப்பிரதேசத்தில் உள்ள பிலிபித் மாவட்டத்தின் பாசி (பாஸி என்றும் உச்சரிக்கப்படுகிறது) தலித் சமூகம், உதா தேவியின் தியாகத்தின் ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16 அன்று ஒன்று சேர்கின்றனர். [6]

மேற்கோள்கள்[தொகு]

  1. Bates, Crispin; Carter, Marina (2017-01-02). Mutiny at the Margins: New Perspectives on the Indian Uprising of 1857: Documents of the Indian Uprising. SAGE Publications India. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789385985751. https://books.google.com/books?id=pIPlDQAAQBAJ&pg=PA356&dq=Uda+Devi#q=Uda%20Devi. 
  2. Gupta, Charu (2016-04-18). The Gender of Caste: Representing Dalits in Print. University of Washington Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780295806563. https://books.google.com/books?id=6gQgDAAAQBAJ&pg=PA109&dq=Uda+Devi#q=Uda%20Devi. 
  3. Narayan, Badri (2006). Women Heroes and Dalit Assertion in North India: Culture, Identity and Politics. SAGE Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7619-3537-7. https://books.google.com/books?id=iAQrpDW4-_YC&pg=PA139&lpg=PA139&dq=pasi+community+history+book#q=pasi%20community%20history%20book. 
  4. Gupta, Charu (2007). "Dalit 'Viranganas' and Reinvention of 1857". Economic and Political Weekly 42 (19): 1739–1745. 
  5. Safvi, Rana (2016-04-07). "The Forgotten Women of 1857". The Wire-GB. Archived from the original on 11 August 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-06-19.
  6. "Dalit group recalls its 1857 martyr Uda Devi". The Times of India-GB. 2015-11-16. Archived from the original on 24 May 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-04-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உதா_தேவி&oldid=3115726" இலிருந்து மீள்விக்கப்பட்டது