சிவாஸ் மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவாஸ் மாகாணம்
துருக்கியில் சிவாஸ் மாகாணத்தின் அமைவிடம்
துருக்கியில் சிவாஸ் மாகாணத்தின் அமைவிடம்
நாடுதுருக்கி
பகுதிநடு அனதோலியா
துணைப்பகுதிகய்சரி
அரசு
 • தேர்தல் மாவட்டம்சிவாஸ்
பரப்பளவு
 • மொத்தம்28,488 km2 (10,999 sq mi)
மக்கள்தொகை
 (2018)[1]
 • மொத்தம்6,46,608
 • அடர்த்தி23/km2 (59/sq mi)
Area code0346
வாகனப் பதிவு58

சிவாஸ் மாகாணம் (Sivas Province, துருக்கியம்: Sivas İli ) என்பது துருக்கியின் ஒரு மாகாணமாகும். இதன் பெரும்பகுதி துருக்கியின் மத்திய அனதோலியா பிராந்தியத்தின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இது துருக்கியின் இரண்டாவது பெரிய மாகாணமாகும். இதன் அண்டை மாகாணங்களாக மேற்கில் யோஸ்கட், தென்மேற்கே கெய்சேரி, தெற்கே கஹரன்மரஸ், தென்கிழக்கே மாலத்திய, கிழக்கில் எர்சின்கான், வடகிழக்கில் கீரேசன், வடக்கே ஓர்டு ஆகியவை உள்ளன. இதன் தலைநகரம் சிவாஸ் நகரம் ஆகும்.

சிவாஸ் மாகாணத்தின் பெரும்பகுதி மத்திய அனதோலியன் பிராந்திக் காலநிலையைக் கொண்டுள்ளது. இதில் கோடை காலங்கள் வெப்பமாகவும் வறண்டதாகவும் இருக்கும், அதே நேரத்தில் குளிர்காலம் குளிரும், பனிமூட்டம் கொண்டதாகவும் இருக்கும். மாகாணத்தின் வடக்கு பகுதி கருங்கடல் காலநிலையைக் கொண்டுள்ளது. கிழக்கு பகுதி கிழக்கு அனதோலியனின் பிராந்தியத்தின் உயரமான பகுதி காலநிலையைக் கொண்டுள்ளது.

இந்த மாகாணம் கொண்டுள்ள வெந்நீரூற்றுகள் குறிப்பிடத்தக்கவை.

மாவட்டங்கள்[தொகு]

சிவாஸ் மாகாணம் 17 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது (தலைநகர் மாவட்டம் தடித்து காட்டபட்டுள்ளது):

  • அகான்சலர்
  • அல்தன்யாயிலா
  • திவ்ரிசி
  • டோசனார்
  • ஜெமரெக்
  • கோலோவா
  • கோரன்
  • ஹபிக்
  • ரன்மரன்லி
  • கங்கல்
  • கோயுலிசார்
  • சர்கிஸ்லா
  • சிவாஸ்
  • சுசெஹ்ரி
  • உலா
  • விடிசெலி
  • ஜாரா

வரலாறு[தொகு]

பட்டுப் பாதை மற்றும் பாரசீக அரச சாலை போன்றவை சிவாஸ் வழியாக செல்கின்றன.

எழுதப்பட்ட வரலாற்று ஆதாரங்களின்படி, கிமு 2000 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இட்டைட்டு நாகரிக காலத்தில் சிவாஸ் மாகாணப் பகுதியானது ஒரு முக்கியமான குடியேற்றமாக மாறியது. இப்பகுதியில் ஆர்மீனியர்கள், ரோமனியர், பைசந்தியர், செல்யூகியர், உதுமானியர் ஆகிய ஆட்சியாளர்களின் நாகரிகங்களுக்கு முகம் கொடுத்தது.

நவீன துருக்கிய குடியரசுக்கான அடிக்கற்கள் 1919 செப்டம்பர் 4 அன்று முஸ்தாபா கெமால் அத்தாதுர்க்கின் தலைமையில் கூடிய சிவாஸ் காங்கிரசால் அமைக்கப்பட்டது. இதனால் சிவாஸ் மாகாணம் துருக்கிய தேசத்தின் வரலாற்றில் முக்கியமானது ஆகும்.

பொருளாதாரம்[தொகு]

வரலாற்று ரீதியாக, மாகாணத்தில் படிகாரம், தாமிரம், வெள்ளி, இரும்பு, நிலக்கரி, கல்நார், ஆர்சனிக், உப்பு உப்பு ஆகியவை உற்பத்தி செய்யப்பட்டன.[2]

குறிப்புகள்[தொகு]

  1. "Population of provinces by years - 2000-2018". பார்க்கப்பட்ட நாள் 9 மார்ச்சு 2019.
  2. Prothero, W.G. (1920). Armenia and Kurdistan. London: H.M. Stationery Office. pp. 74–75.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவாஸ்_மாகாணம்&oldid=3075422" இலிருந்து மீள்விக்கப்பட்டது