பூபூ (நாய்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூபூ
இனம்நாய்
வகைபூடில் இனம்[1]
பால்ஆண்
பிறப்புபூபூ
1997
பேங்காக், தாய்லாந்து
இறப்புபெப்ரவரி 2015 (வயது 17)
நாடுதாய்லாந்து
உரிமையாளர்மகா வச்சிரலோங்கோன்

விமானப் படைத் தளபதி பூபூ (Fufu) (அல்லது ஃபோ ஃபோ அல்லது ஃபுஃபு ; 1997–2015) தாய்லாந்தின் பட்டத்து இளவரசராக இருந்த மகா வச்சிரலோங்கோனின் செல்லப்பிராணியாகும். இது இளவரசனுக்கு மிகவும் பிடித்தமான நாயாகும். மேலும் அவருடன் அரச ஈடுபாடுகளில் அடிக்கடி உடன் சென்றது. இளவரசரின் கூற்றுப்படி, அவரது இரண்டாவது மகள் சிறிவண்ணாவரி நரிரதானா பாங்காக்கின் சதுச்சக் சந்தையில் இருந்து சில முயல்கள், வெள்ளெலிகள் மேலும் பிற நாய்களுடன் சுமார் ஒரு மாத வயதில் இந்த நாயையும் வாங்கினார். நாய் "மிகவும் அழகாக இருந்தது, ஆனால் மிகவும் பலவீனமாகத் தோன்றியது" என்றார். மேலும், அவரது மகளின் இளம் வயது காரணமாக நாய் அரண்மனை ஊழியர்களால் செல்லப்பிராணி தங்குமிடம் ஒன்றில் வைக்கப்பட்டது. [2] திசம்பர் 2006 இல் நாகோன் பாத்தோமில் நடந்த தாய்லாந்து பெரிய நாய் கண்காட்சியின் போது தோன்றியதைத் தவிர, இந்த நாய் எப்போதாவதுதான் பொது இடத்திற்கு வெளிக்கொண்டு வரப்பட்டது. கண்காட்சியின்போது இந்த நாய் "கவர்ச்சியை வெளிப்படுத்தியது. மேலும், புத்திசாலித்தனமான சண்டையிட்டது" என்று கூறப்பட்டது. [3]

2009 ஆம் ஆண்டில், இளவரசரின் மூன்றாவது மனைவி இளவரசி சிறீராஸ்மியைப் பற்றிய ஒரு காணொளிக்காட்சி வெளிப்பட்டபோது அவர் பிகினி போன்ற ஒரு ஆடையை அணிந்து கொண்டு நாய்க்கு பிறந்தநாள் கேக்கை ஊட்டியபோது இந்த நாய் பரவலான மக்கள் கவனத்திற்கு வந்தது. [4] இளவரசனின் எதிரிகளால் கசிந்ததாக கருதப்பட்ட இந்த காணொளி, தாய்லாந்தில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், நோய்வாய்ப்பட்ட தாய் மன்னர் பூமிபால் அதுல்யாதெச்சின் வெற்றிக்கான உரிமைக்கான மறைக்கப்பட்ட போராட்டத்தை அம்பலப்படுத்தியது.

சில மாதங்களுக்குப் பிறகு, அமெரிக்க தூதர் ரால்ப் எல். பாய்ஸ் இளவரசரருடன் ஒரு விருந்தில் கலந்து கொண்டார். அதில் நாய் "காலில் உறையணிந்து கொண்டு" தோன்றியது. தாய் பேரரசின் விமானப்படையில் இந்த நாய் விமானத் தலைமை தளபதி பதவிக்கு "பதவி உயர்வு" பெற்றதாக பாய்ஸ் மேலும் தெரிவித்தார். [5] வாசிங்டனுக்கான தூதரின் கூற்றைக் காடடி, பின்னர் விக்கிலீக்ஸ் இவ்வாறு செய்தி ஒன்றை வெளியிட்டது. "ஒரு கட்டத்தில் இசைக்குழுவின் வாசிப்பின்போது இந்த நாய் மேசையில் குதித்து, விருந்தினர்களின் தண்ணீரைத் தட்டிவிடத் தொடங்கியது. விமான தலைமைஏர் சீஃப் மார்ஷலின் வினோதங்கள் 600-க்கும் மேற்பட்ட பார்வையாளர்களின் முழு கவனத்தையும் ஈர்த்தது. நகரத்தின் இந்த பேச்சாகவே இருந்தது."

2015 ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஃபுஃபு மரணடைடைந்தத் தொடர்ந்து நான்கு நாட்கள் புத்தசமயத்தின்படி இறுதி சடங்குகளும், நாயின் தகனமும் நடைபெற்றது. இதைப்பற்றியப் படங்கள் தாய்லாந்தில் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டன. [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://foreignpolicy.com/2016/10/13/the-thai-kings-heir-owned-a-controversial-poodle-named-air-chief-marshal-foo-foo/
  2. "The Week That Was : Playful Palace poodle piques pet-loving Prince". The Nation (Bangkok) இம் மூலத்தில் இருந்து 6 February 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150206015219/http://www.nationmultimedia.com/home/The-Week-That-Was-Playful-Palace-poodle-piques-pet-54384.html. 
  3. "Tongdaeng progeny put through paces". The Nation (Bangkok) இம் மூலத்தில் இருந்து 4 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304045918/http://www.nationmultimedia.com/2006/12/16/headlines/headlines_30021708.php. 
  4. McDonald, Hamish (February 12, 2011). "Thai politics becomes a dog's dinner". Sydney Morning Herald. Sydney. பார்க்கப்பட்ட நாள் June 2, 2020.
  5. 5.0 5.1 Marshall, Andrew MacGregor (5 February 2015). "Thai crown prince's poodle, Air Chief Marshal Foo Foo, has been cremated". The Guardian (London). https://www.theguardian.com/world/2015/feb/05/thai-crown-prince-pet-poodle-air-chief-marshal-foo-foo-cremated. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூபூ_(நாய்)&oldid=3878082" இலிருந்து மீள்விக்கப்பட்டது