சியுரி

ஆள்கூறுகள்: 23°55′00″N 87°32′00″E / 23.9167°N 87.5333°E / 23.9167; 87.5333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சியுரி
சூரி
நகரம்
சியுரி is located in மேற்கு வங்காளம்
சியுரி
சியுரி
இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் சியுரி நகரத்தின் அமைவிடம்
சியுரி is located in இந்தியா
சியுரி
சியுரி
சியுரி (இந்தியா)
சியுரி is located in ஆசியா
சியுரி
சியுரி
சியுரி (ஆசியா)
ஆள்கூறுகள்: 23°55′00″N 87°32′00″E / 23.9167°N 87.5333°E / 23.9167; 87.5333
நாடு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்பிர்பூம்
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்சியுரி நகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்9.47 km2 (3.66 sq mi)
ஏற்றம்71 m (233 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்67,864
 • அடர்த்தி7,200/km2 (19,000/sq mi)
மொழிகள்
 • அலுவல்வங்காள மொழி
 • கூடுதல் மொழிஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்731101
தொலைபேசி குறியீடு91 3462
வாகனப் பதிவுWB-54
மக்களவைத் தொகுதிபிர்பூம்
சட்டமன்றத் தொகுதிசியுரி
இணையதளம்birbhum.nic.in
சியுரி வித்யாசாகர் கல்லூரி

சியுரி அல்லது சுவ்ரி (Suri-Siuri) (pronounced [sIʊərɪ]) இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள பிர்பூம் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். இது கொல்கத்தாவிற்கு வடமேற்கே 224.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அருகமைந்த நகரங்கள்: ஆசன்சோல் 79 கிமீ; துர்காபூர் 60 கிமீ மற்றும் ராணிகஞ்ச் 62 கிமீ.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 18 வார்டுகளும், 15,385 வீடுகளும் கொண்ட சியுரி நகரத்தின் மொத்த மக்கள்தொகை 67,864 ஆகும். அதில் 34,579 ஆண்கள் மற்றும் பெண்கள் 33,285 உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 5935 (8.75%) ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 963 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 86.95% ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 73.65%, முஸ்லீம்கள் 25.86% மற்றும் பிறர் 0.48% ஆகவுள்ளனர்.[1]

தொடருந்து நிலையம்[தொகு]

சிவ்ரி தொடருந்து நிலையம் வழியாக கொல்கத்தா, ராஞ்சி, சூரத், புரி, கவுகாத்தி, திப்ருகார் மற்றும் தாம்பரம் போன்ற நகரங்களுக்கு விரைவு வண்டிகளும், பயணியர் வண்டிகளும் செல்கிறது. [2] சியுரிலிருந்து ஆசன்சோல் செல்ல 6 தொடருந்துகள் உள்ளது. [3]

கல்வி[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சியுரி&oldid=2955616" இலிருந்து மீள்விக்கப்பட்டது