சாந்த் பிபி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாந்த் பிபி
பிஜப்பூர் மற்றும் அகமது நகர் பகுதிகளின் ஆட்சியாளர்
"சாந்த் பிபி, 18 ஆம் நூற்றாண்டின் ஓவியம்"
பிறப்பு1550 CE
இறப்பு1599 CE
துணைவர்இரண்டாம் அலி ஆதில் ஷா
தந்தைஇரண்டாம் உசைன்நிசாம் ஷா
தாய்குன்சா உமாயுன்
மதம்இசுலாம்

சாந்த் பிபி (Chand Bibi) (பொ.ச. 1550–1599), ஒரு இந்திய முஸ்லிம் ஆட்சியாளரும் மற்றும் போர்வீரருமாவார். இவர் பிஜப்பூரின் ஆட்சியாளராகவும் (1580-90) மற்றும் அகமதுநகரின் ஆட்சியாளராகவும் (தற்போதைய மகாராட்டிரா ) (1596-99) இருந்தார். [1] 1595ஆம் ஆண்டில் அக்பர் பேரரசரின் முகலாயப் படைகளுக்கு எதிராக அகமதுநகரைப் பாதுகாப்பதில் சாந்த் பிபி மிகவும் பிரபலமானவராக அறியப்படுகிறார். [2]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

சாந்த் பிபி அகமதுநகரைச் சேர்ந்த முதலாம் உசைன் நிஜாம் ஷாவின் மகளாவார். [3]  அகமதுநகரின் சுல்தானான இரண்டாம் புர்ஹான் நிஜாம் ஷாவின் சகோதரியுமாவார். அரபு, பாரசீக, துருக்கிய, மராத்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளை இவர் அறிந்திருந்தார். இவர் சித்தார் வாசிக்கத் தெரிந்த்தார். பூக்களை ஓவியமாக வரவது இவருடைய பொழுதுபோக்காக இருந்தது. [4]

பிஜப்பூர் சுல்தானகம்[தொகு]

கூட்டணிக் கொள்கையைத் தொடர்ந்து, சாந்த் பிபி பிஜப்பூர் சுல்தானத்தைச் சேர்ந்த முதலாம் அலி ஆதில் ஷா என்பவரை மணந்தார். [5] இவரது கணவர் பிஜப்பூரின் கிழக்கு எல்லைக்கு அருகே ஒரு பவோலியை (கிணறு) உருவாக்கி அதற்கு சாந்த் பாவ்டி என்று பெயரிட்டார். [6] அலி ஆதில் ஷாவின் தந்தை,முதலாம் இப்ராஹிம் ஆதில் ஷா, சுன்னி பிரபுக்கள், ஹப்ஷிகள் மற்றும் தக்காணியர்கள்இடையே அதிகாரத்தைப் பிரித்திருந்தார். இருப்பினும், அலி ஆதில் ஷா சியாவை ஆதரித்தார். [7] 1580இல் அவர் இறந்த பிறகு, சியா பிரபுக்கள் அவரது ஒன்பது வயது மருமகன் இரண்டாம் இப்ராஹிம் ஆதில் ஷாவை ஆட்சியாளராக அறிவித்தனர். [8] கமல் கான் என்ற தக்காணிய தளபதி அதிகாரத்தைக் கைப்பற்றி ஆட்சியாளர் ஆனார். சிம்மாசனத்தை கைப்பற்றுவதற்கான லட்சியங்கள் இருப்பதாக உணர்ந்த சாந்த் பீபிக்கு கமல் கான் அவமரியாதை காட்டினார். கமல் கானுக்கு எதிராக மற்றொரு தளபதி ஹாஜி கிஷ்வர் கானின் உதவியுடன் சாந்த் பிபி தாக்குதல் நடத்த சதி செய்தார். தப்பி ஓடும்போது கமல் கான் பிடிக்கப்பட்டு கோட்டையில் கொல்லப்பட்டார்.

அகமதுநகர் சுல்தானேட்[தொகு]

1591 ஆம் ஆண்டில், முகலாயப் பேரரசர் அக்பர் நான்கு தக்காண சுல்தான்களையும் தனது மேலாதிக்கத்தை ஒப்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். அனைத்து சுல்தான்களும் இந்த இணக்கத்தைத் தவிர்த்தனர். அக்பரின் தூதர்கள் 1593இல் தலைநகர் திரும்பினர். 1595 ஆம் ஆண்டில், அகமத்நகர் சுல்தானகத்தின் ஆட்சியாளரான இப்ராஹிம் நிஜாம் ஷா, அகமத்நகரில் இருந்து 40 மைல் தொலைவில் நடந்த கடுமையான போரில் கொல்லப்பட்டார். [9] அவரது மரணத்திற்குப் பிறகு, சில பிரபுக்கள் அவரது சிறு வயது மகன் பகதூர் ஷாவை சாந்த் பீபியின் (அவரது தந்தையின் அத்தை) ஆட்சியின் கீழ் மன்னராக அறிவிக்கப்பட வேண்டும் என்று நினைத்தனர். [10]   ] 1595 நவம்பரில் அகமதுநகர் முகலாயர்களால் படையெடுக்கப்பட்டது. [9] அகமதுநகரில் சாந்த் பிபி தலைமை வகித்து அகமதுநகர் கோட்டையை வெற்றிகரமாக பாதுகாத்தார். [11]   ] முற்றுகை கடுமையானது. சாந்த் பீபியின் படைகள் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டன. 1596 ஆம் ஆண்டில், பின்வாங்கிய சாந்த் பிபி தனது மருமகன்களான பிஜாப்பூரைச் சேர்ந்த இரண்டாம் இப்ராஹிம் ஆதில் ஷா மற்றும் கோல்கொண்டாவைச் சேர்ந்த முஹம்மது குலி குதுப் ஷா ஆகியோருக்கு முகலாயப் படைகளுக்கு எதிராக ஒன்றுபடுமாறு கேட்டுக்கொண்டார்.

சந்த் பிபி மீண்டும் கோட்டையை பாதுகாத்தார். இருப்பினும், அவரால் திறமையான ஒரு எதிர்ப்பைக் ஏற்படுத்த முடியவில்லை. சமாதானம் செய்து கொள்ள முடிவெடுத்து பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்தார். [10] இதனால் கோபடைந்த தனது சொந்த துருப்புக்களில் ஒரு கும்பலால் கொல்லப்பட்டார். அவரது மரணத்திற்குப் பிறகு, நான்கு மாத முற்றுகைக்குப் பின்னர், அகமதுநகர் முகலாய படைகளால் கைப்பற்றப்பட்டது. [9]

சாந்த் பிபி கா மகால்[தொகு]

இரண்டாம் சலாபத் கானின் கல்லறை உள்நாட்டில் "சாந்த் பிபி கா மகால் ( சாந்த் பீபியின் அரண்மனை)" அல்லது இதே போன்ற பெயர்களில் தவறாக அறியப்படுகிறது. :199

குறிப்புகள்[தொகு]

  1. "Women In Power: 1570-1600". Archived from the original on 2006-12-19. பார்க்கப்பட்ட நாள் 2006-12-24.
  2. Sen, Sailendra (2013). A Textbook of Medieval Indian History. Primus Books. பக். 118–119. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-9-38060-734-4. 
  3. "The Adil Shahi Dynasty of Bijapur". Archived from the original on 8 May 2006. பார்க்கப்பட்ட நாள் 2006-12-24.
  4. Jyotsna Kamat. "Education in Karnataka through the ages: Education Among Muslims". பார்க்கப்பட்ட நாள் 2006-12-24.
  5. Sewell, Robert (2006). A Forgotten Empire: Vijayanagar; A Contribution to the History of India. 
  6. "Reviving an ancient tank". தி இந்து. 2005-10-10. Archived from the original on 2006-02-17. பார்க்கப்பட்ட நாள் 2006-12-24.
  7. Dr. Richard Pankhurst. "Great Habshis in Ethiopian/Indian history: History of the Ethiopian Diaspora, in India - Part IV". பார்க்கப்பட்ட நாள் 2006-12-24.
  8. Ravi Rikhye (2005-03-07). "The Wars & Campaigns of Ibrahim Adil Shahi II of Bijapur 1576-1626". Archived from the original on 2006-10-20. பார்க்கப்பட்ட நாள் 2006-12-24.
  9. 9.0 9.1 9.2 "Medieval Period". The Gazetteers Department, Government of Maharashtra. பார்க்கப்பட்ட நாள் 2006-12-24.
  10. 10.0 10.1 "The History of Ahmednagar". Archived from the original on 9 May 2007. பார்க்கப்பட்ட நாள் 2006-12-24.
  11. "Akbar conquers Ahmednagar". Archived from the original on 2010-11-23. பார்க்கப்பட்ட நாள் 2006-12-24.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Chand Bibi
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாந்த்_பிபி&oldid=3815704" இலிருந்து மீள்விக்கப்பட்டது