நைட்ரோசைல் குளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நைட்ரோசைல் குளோரைடு
Skeletal formula of nitrosyl chloride with measurements
Spacefill model of nitrosyl chloride
பெயர்கள்
முன்னுரிமையுள்ள ஐயுபிஏசி பெயர்
நைட்ரோசைல் குளோரைடு
Identifiers
3D model (JSmol)
ChemSpider
ECHA InfoCard 100.018.430
EC Number 220-273-1
E number E919 (glazing agents, ...)
MeSH nitrosyl+chloride
PubChem <abbr title="<nowiki>Compound ID</nowiki>">CID
வேதிப்பொருள்களின் நச்சு விளைவுகளின் பதிவேடு QZ7883000
UN number 1069
பண்புகள்
NOCl
வாய்ப்பாட்டு எடை 65.459 கி மோல்−1
தோற்றம் மஞ்சள் நிற வாயு
அடர்த்தி 2.872 மிகி மிலி−1
உருகுநிலை −59.4 °செல்சியசு (−74.9 °F; 213.8 K)
கொதிநிலை −5.55 °செல்சியசு (22.01 °F; 267.60 K)
நீரில் கரைதிறன்
வினைபுரிகிறது
அமைப்பு
மூலக்கூற்று வடிவம்
இருமுகி, மூலைச்சாய்வு
ஒழுக்குக் கலப்பு sp2 at N
1.90 D
வெப்பவேதியியல்
261.68 யூல் கெல்வின்−1 மோல்−1
Std enthalpy of
formation (ΔfHo298)
51.71 கிலோயூல்மோல்−1
தீங்கிழைப்பவை
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் inchem.org
NFPA 704
தொடர்புடைய சேர்மங்கள்
தொடர்புடைய சேர்மங்கள்
  • நைட்ராக்சில்
  • நைட்ரோசில் புளோரைடு
  • நைட்ரோசில் புரோமைடு
Except where otherwise noted, data are given for materials in their standard state (at 25 °C [77 °F], 100 kPa).
☑verify (what is ☑Y☒N ?)
Infobox references

நைட்ரோசைல் குளோரைடு (Nitrosyl chloride) என்பது NOCl என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய வேதிச் சேர்மம் ஆகும். இச்சேர்மமானது ஐதரோகுளோரிக் அமிலம் மற்றும் நைட்ரிக் அமிலம் ஆகியவற்றின் கலவையால் உருவாக்கப்படும் இராச திராவகம் என்ற விளைபொருளைத் தயாரிக்கும் போது அத்திரவம் சிதைவடைந்து கிடைக்கும் பொருளாக உள்ளே அறிமுகமாகிறது. இச்சேர்மமானது ஒரு வலிமையான எதிர்மின்னி கவரும் பொருளாகவும், ஆக்சிசனேற்றியாகவும் விளங்குகிறது, சில நேரங்களில் இது டில்டெனின் விளைபொருள் எனவும் அழைக்கப்படுகிறது.

அமைப்பு மற்றும் தொகுப்பு முறை தயாரிப்பு[தொகு]

இந்த மூலக்கூறு வளைந்த அமைப்பைப் பெற்றுள்ளது. ஒரு இரட்டைப் பிணைப்பானது நைட்ரசன் மற்றும் ஆக்சிசன் ஆகியவற்றுக்கிடையேயும் (பிணைப்பு நீளம் = 1.16 Å) மற்றும் நைட்ரசன் மற்றும் குளோரின் ஆகியவற்றுக்கிடையே ஒரு பிணைப்பும் (பிணைப்பு நீளம் = 1.69 Å) அமைந்துள்ளன. O–N–Cl பிணைப்புக் கோணமானது 113° ஆக உள்ளது.[1]

தயாரிப்பு[தொகு]

நைட்ரோசைல் குளோரைடானது வேதியியல்ரீதியாக எளிமையானதும் வெப்பவியல்ரீதியாக நிலையானதுமான சேர்மமாக இருப்பதால், இச்சேர்மம் பல வழிமுறைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படலாம்.

  • நைட்ரோசல்பியூரிக் அமிலம் மற்றும் HCl இச்சேர்மத்தைத் தயாரிக்க உதவுகிறது. இந்த முறையானது தொழிலகரீதியாக பயன்படுத்தப்படுகிறது.[2]
HCl + NOHSO4H2SO4 + NOCl
  • நைட்ரசு அமிலத்தினை HCl ஐப் பயன்படுத்தி நீர்நீக்க வினைக்கு உட்படுத்துவதன் மூலம் இச்சேர்மத்தை தயாரிக்கலாம். இந்த முறை மேலும் வசதியான ஆய்வகச் செயல்முறையாகும்.[3]
HNO2 + HCl → H2O + NOCl
Pd + HNO3 + 3 HCl → PdCl2 + 2 H2O + NOCl
  • NOCl ஆனது குளோரின் மற்றும் நைட்ரிக் ஆக்சைடு ஆகியவற்றின் நேரடி சேர்க்கையின் மூலமாகவும் தயாரிக்கப்படுகிறது; இந்த வினையானது 100 ° செல்சியசு வெப்பநிலைக்கு மேலான நிலையில் பின்னோக்கி நிகழ்கிறது.
Cl2 + 2 NO → 2NOCl
  • நைட்ரோசைல் குளோரைடின் மற்றொரு தயாரிப்பு முறையானது 400 °செல்சியசு வெப்பநிலையில் தனிமங்களின் (ஆக்சிசன், நைட்ரசன், குளோரின்) நேரடிச் சேர்க்கை முறையாகும். இருப்பினும் இம்முறை கீழே தரப்பட்டுள்ளவாறு பின்னடைவையும் கொண்டுள்ளது.

இராச திராவகத்தில் நைட்ரோசைல் குளோரைடின் இருப்பு[தொகு]

நைட்ரோசைல் குளோரைடு (NOCl) ஐதரோகுளோரிக் அமிலம் மற்றும் நைட்ரிக் அமிலங்களின் கூடுகையில் இருந்து பின்வரும் வினையின்படி பெறப்படுகிறது.[4]

HNO3 + 3 HCl → Cl2 + 2 H2O + NOCl

நைட்ரிக் அமிலத்தில், நைட்ரோசைல் குளோரைடானது எளதில் நைட்ரசன் டைஆக்சைடாக ஆக்சிசனேற்றம் அடைகிறது. இராச திராவகத்தில் நைட்ரோசைல் குளோரைடின் இருப்பானது எட்மண்ட் டேவி என்பவரால் 1831 ஆம் ஆண்டில் குறிப்பிடப்பட்டது.[5]

வினைகள்[தொகு]

NOCl தனது பெரும்பாலான வினைகளில் ஒரு எதிர்மின்னி கவரியாகவும் மற்றும் ஒரு ஆச்சிசனேற்றியாகவும் செயல்படுகிறது. ஆலைடு ஏற்பிகளுடன், உதாரணமாக ஆண்டிமணி ஐங்குளோரைடுடன், இது நைட்ரோசோனியம் உப்புகளாக மாற்றமடைகிறது:

NOCl + SbCl5 → [NO]+[SbCl6]

தொடர்புடைய வினையொன்றில், கந்தக அமிலமானது நைட்ரோசல்பூரிக்அமிலம், நைட்ரசு அமிலம் மற்றும் கந்தக அமிலங்களின் அமில நீரிலிகளின் கலவை ஆகியவற்றைத் தருகிறது:

ClNO + H2SO4 → ONHSO4 + HCl

NOCl ஆனது வெள்ளி தயோசயனேட்டுடன் வினைபுரிந்து வெள்ளி குளோரைடு மற்றும் போலிஆலசன் நைட்ரோசைல் தயோசயனேட்டு ஆகியவற்றைத் தருகிறது:

ClNO + AgSCN → AgCl + ONSCN

நைட்ரோசைல் குளோரைடானது உலோக நைட்ரோசைல் அணைவுச் சேர்மங்களைத் தயாரிக்கப் பயன்படுகிறது. மாலிப்டினம் எக்சாகார்போனைலுடன், NOCl வினைபுரிந்து டைநைட்ரோசைல்டைகுளோரைடு அணைவுச் சேர்மங்களைத் தருகிறது:[6]

Mo(CO)6 + 2 NOCl → MoCl2(NO)2 + 6 CO
N2 + O2 + Cl2 → 2 NOCl is in equilibrium with 2 NO + Cl2

தொழிற்துறைப் பயன்பாடுகள்[தொகு]

NOCl மற்றும் வளையஎக்சேன் ஒளிவேதிய வினையில் ஈடுபட்டு வளையஎக்சனோன் ஆக்சைம் ஐதரோகுளோரைடைத் தருகிறது. இந்தச் செயல்முறையானது NOCl மூலக்கூறானது ஒளிவேதியச் சிதைவுக்கு உள்ளாகி NO மற்றும் Cl தனி உறுப்புக்களாக பிளவுபடும் தன்மையைப் பயன்படுத்திக் கொள்கிறது. ஆக்சைடானது நைலான்-6 இன் முன்னோடிச் சேர்மமான கேப்ரோலாக்டமாக மாற்றப்படுகிறது. [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Holleman, A. F.; Wiberg, E. (2001). Inorganic Chemistry. San Diego: Academic Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-12-352651-5. 
  2. 2.0 2.1 Ritz, Josef; Fuchs, Hugo; Kieczka, Heinz; Moran, William C. (2002). "Caprolactam". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. Weinheim: Wiley-VCH. doi:10.1002/14356007.a05_031. 
  3. Morton, J. R.; Wilcox, H. W. (1953). "Nitrosyl Chloride". Inorganic Syntheses 48: 52. doi:10.1002/9780470132357.ch16. 
  4. Beckham, L. J.; Fessler, W. A.; Kise, M. A. (1951). "Nitrosyl Chloride". Chemical Reviews 48 (3): 319–396. doi:10.1021/cr60151a001. 
  5. Edmund Davy (1830–1837). "On a New Combination of Chlorine and Nitrous Gas". Abstracts of the Papers Printed in the Philosophical Transactions of the Royal Society of London 3: 27–29. 
  6. Johnson, B. F. G.; Al-Obadi, K. H. (1970). "Dihalogenodinitrosylmolybdenum and Dihalogenodinitrosyltungsten". Inorg. Synth. 12: 264–266. doi:10.1002/9780470132432.ch47. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நைட்ரோசைல்_குளோரைடு&oldid=3881851" இலிருந்து மீள்விக்கப்பட்டது