இரவி கோமதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரவி கோமதம்
Ravi Gomatam
இரவி கோமதம், 2011 சூன்
துறைகுவாண்டம் இயங்கியல்

இரவி வீரராகவன் கோமதம் (பிறப்பு 1950, சென்னை) என்பவர் பக்திவேதாந்தா நிறுவனம் (பெர்கிலே மற்றும் மும்பை) மற்றும் புதியதாக நிறுவப்பட்ட சீமெண்ட்டிவ் தகவல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றின் இயக்குநர் ஆவார். மேலும் இவர், இராஜஸ்தான், பிலானியில் உள்ள பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கழகத்தில் துணைப் பேராசிரியராக பணிபுரிகிறார். இவர், மேற்காண் நிறுவனங்களில், பட்டபடிப்புகளுக்கு கற்பிக்கிறார். 

இந்திய அரசின், மனிதவள மேம்பாட்டுத் துறையின் கிழ் உள்ள இந்திய தத்துவ ஆராயிச்சி குழுவில் (ICPR) 2015-16ஆம் ஆண்டிற்கான வருகைதரு பேராசிரியராக இருந்தார்.

1990ஆம் ஆண்டு சனவரி மாதம், சான் பிரான்சிஸ்கோவில் ‘அறிவியலில் நினவுநிலை சார் ஆய்வு’ என்ற தலைப்பில் முதல் பன்னாட்டு மாநாட்டினை ஏற்பாடு செய்தார்.[1] இதை தொடர்ந்து 1997ஆம் ஆண்டு, கோமாட்டம், பிலானி, பிர்லா தொழில்நுட்ப மற்றும் அறிவியல் நிறுவனத்துடன் (BITS) சேர்ந்து, ’நினவுநிலை ஆய்வுகள்’[2] என்ற உலகத்தின் முதல் MS/Ph.D படிப்பினை கொண்டு வந்தார். ’நினவுநிலைஆய்வுகள்’ என்பது ஒர் வளருகின்ற பலதுறை அறிவியல் களம். கோமதம், பருப்பொருளை ஆய்வதற்கான புதிய வழியே நினவுநிலை ஆய்வு என மறுசிந்தனை செய்துள்ளார்.[3]

இந்தியாவின் மும்பை பல்கலைகழகத்துடன் இணைந்து சொல் சீமெண்ட்டிவ் தகவல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் , 2015ஆம் ஆண்டு முதல் M.A (ஆய்வு) மற்றும் Ph.D படிப்புகளை வழங்கி வருகிறது.[4]

கோமதத்தின், ஆய்வுக் களமானது, குவாண்டம் இயங்கியலை அடித்தளமாக கொண்டது. அவ்வடிதளத்தில், தற்சார்பற்ற சொல் பொருளியல் தகவல் மற்றும், ரோவளி போன்றோரிடம் இருந்து மாறுபட்ட, ‘தொடர்பியல் பண்புகள்’ போன்ற புதிய சிந்தனைகளை புகுத்தினார். சொல் பொருளியல் கணக்கீடு, அமைப்பு அறிவியல், செயற்கை அறிவுத்திறன், அறிவியலின் மெய்யியல், மொழி மெய்யியல் போன்றவற்றிலும் ஆய்வு செய்வதில் ஆர்வம் காட்டினார்.[5]

கல்வி[தொகு]

ஆரம்க நிலையில் நிறுவனங்களில் செய்த வேலை[தொகு]

70களில், கோமதம், இந்திய பன்னாட்டு விமான சேவை நிறுவனத்தின், மென்பொருள் வளர்ச்சி செயல்திட்ங்களில் செயல்பட்டார். பின்னர், அமெரிக்காவிற்கு சென்று, இயக்க முறைமை வடிவமைப்பு, தரவுத் தகவல் தொடர்பு மற்றும் மிகப் பெரிய தகவல் வடிவமைப்பு ஆகிய களங்களில், ஜெனரல் மோட்டார்ஸ், ஃபோர்டு, கிரைசுலர், பர்ரோசாண்ட், ஐபிஎம் போன்ற ஃபார்ச்சூன் 500 நிறுவனங்களின் பகுதிநேர ஆலோகசராக பணியாற்றினார்.

கல்வி பாதை[தொகு]

கோமதம், 80களில் தன்னுடைய பார்வையை, அடிப்படை அறிவியல் ஆய்வின் பக்கம் திருப்பினார். இவர், மும்பை மற்றும் பெர்கிலேவில், பக்திவேதாந்தா நிறுவனத்தின் (BI) வளர்ச்சிக்கு பங்களித்தார். அந்நிறுவனத்தில் பங்களித்துக் கொண்டே, தனது முனைவர் ஆய்வு பட்டத்தை, அடிப்படை குவாண்டம் இயக்கவியலில் பெற்றார்.

இவர், தென் ஆப்பிரிக்காவில் உள்ள பிரிட்டோரியா பல்கலைகழகம் மற்றும் அமேரிக்காவின், நியூ ஆர்லேன்ஸ், லயோலா பல்கலைகழகத்தில் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றினார்.

ஆய்வு[தொகு]

1925ல் எர்வின் சுரோடிங்கரின் அலைச் சமன்பாட்டிலிருந்து வருவித்த, சார்பியல் சாரா குவாண்ட்ம் இயக்கவியலே, கோமதத்தின் முதன்மை ஆய்வுக் களமாக இருந்தது.

கோமதம், தனது சொந்த அணுகுமுறையை, பேரியலான குவாண்டம் இயக்கவியலில் (MQM) கொண்டுவந்தார். இவ்வணுகுமுறை, 80களில் அந்தோனி ஜேம்ஸ் லேகட் என்பவரால் கொண்டுவரப்பட்ட, பேரியலான செலவுத்தொகுதி மற்றும் பேரியலான குவாண்டம் ஒரியல்பு என்னும் சிந்தனையைவிட மாறுபட்டதாக இருந்தது. லேகட்டின் முயற்சி, தற்போதைய நுண்ணிய குவாண்டம் இயற்பியலை, பேரியலான நிலையில் மேற்பொற்த்தி மறைமுகமாக உற்றுநோக்குவதே.

ஆனால், கோமாட்டம், ஸ்கோடின்ஜர் சமன்பாட்டின் பயன்பாடு சாராத MQMயை, உருவாக்க முயற்சி செய்தார். ஏனென்றால், பேரியலான நிலையில் குவாண்டம் மேற்பொருந்துதலை, நேரடியாக உற்றுநோக்கலாம். இதுசார்ந்து இரு புதிய சிந்தனைகல்ளை இயற்பியலில் உருவாக்கியுள்ளார்: ‘தற்சார்பற்ற சொல்பொருளியலின் தகவல் மற்றும் ‘தொடர்பியல் பண்புகள்’.

MQMயை விரிவாக்கம் செய்வதின் ஒரு பகுதியாக, கோமதம் சொல் பொருளியல் தகவல், குவாண்டம் கணக்கீடு மற்றும் மொழிகளின் தத்துவம் போன்றவற்றிலும் ஆர்வம் கொண்டார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள்[தொகு]

  • Niels Bohr's Interpretation and the Copenhagen Interpretation—Are the two incompatible?" [6] Here Gomatam contrasts Bohr's Interpretation with Copenhagen Interpretation (where Bohr is a co-author).[7] This paper was a required reading in a course in Quantum Mechanics at Brown University.[8]
  • Quantum Theory and the Observation Problem.[9] Michael Turvey credits Gomatam for labeling a key problem in quantum mechanics as “observation problem” which he says were only "implicit in deliberations of Bohr, Einstein, Bell and others: to identify a quantum-compatible nonclassical conception of everyday objects, one consonant with the principle of superposition."[10] Wolfgang Prinz,[11] M.W. Stuckey[12] and Panos Pardalos[13] cite this paper for its key contribution in the field of macroscopic quantum mechanics.
  • How Do Classical and Quantum Probabilities Differ?[14]
  • Macroscopic Quantum Mechanics and System of Systems Design Approach.[15]
  • Quantum Theory, the Chinese Room Argument and the Symbol Grounding Problem.[16]
  • Quantum Realism and Haecceity.[17]
  • Popper’s Propensity Interpretation and Heisenberg’s Potentia Interpretation — A comparative assessment.[18]
  • Do Hodgson's Propositions Uniquely Characterize Free Will? Invited commentary on a target paper, "A Plain Person's View of Free Will" by David Hodgson.[19]
  • Physics and Common Sense: Relearning the Connections in the Light of Quantum Theory.[20]

செயல்பாடுகள் மற்றும் சமூகங்கள்:[தொகு]

  • அமெரிக்க செயற்கை நுண்ணறிவு சங்க உறுப்பினர். 
  • அமெரிக்க தத்துவ சமூகத்தின் உறுப்பினர்.  

மேற்கோள்கள்[தொகு]

  1. "The First International Conference for the Study of Consciousness within Science". Bhaktivedanta Institute. Archived from the original on 2013-04-25. பார்க்கப்பட்ட நாள் 2013-02-28.
  2. "Bhaktivedanta Institute Graduate Studies". Bhaktivedanta Institute. Archived from the original on 2013-02-18. பார்க்கப்பட்ட நாள் 2013-02-28.
  3. Gomatam, Ravi (2010-06-12). "What is Consciousness Studies?". Bhaktivedanta Institute. Archived from the original on 2014-01-10. பார்க்கப்பட்ட நாள் 2013-02-28.
  4. "Institute of Semantic Information Sciences and Technology Center For Philosophy". Institute of Semantic Information Sciences and Technology. Archived from the original on 2015-12-24. பார்க்கப்பட்ட நாள் 2015-12-24.
  5. "Resume". InSIST. Archived from the original on 2015-12-22. பார்க்கப்பட்ட நாள் 2015-12-29.
  6. Gomatam, Ravi (2007). "Niels Bohr's Interpretation and the Copenhagen Interpretation -- Are the two incompatible?". Philosophy of Science 74 (5): 736–748. doi:10.1086/525618. http://philpapers.org/rec/GOMNBI. 
  7. "Copenhagen Interpretation of Quantum Mechanics". Stanford Encyclopedia of Philosophy. 2014-07-24. பார்க்கப்பட்ட நாள் 2015-12-28.
  8. Kutach, Douglas (2010). "Philosophy of Quantum Mechanics, Spring 2010". Assignment 2 இம் மூலத்தில் இருந்து 2016-02-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160207112645/http://sagaciousmatter.org/Phil1620.html. பார்த்த நாள்: 2015-12-28. 
  9. Gomatam, Ravi (1999). "Quantum Theory and the Observation Problem". Journal of Consciousness Studies 6 (11-12): 173–90. 
  10. Turvey, Michael T. (2015). "Quantum-Like Issues at Nature's Ecological Scale (the Scale of Organisms and Their Environments)". Mind and Matter 13 (1). http://www.mindmatter.de/journal/abstracts/mmabstracts13_1.html. பார்த்த நாள்: 2015-12-27. 
  11. Prinz, Wolfgang; Beisert, Miriam; Herwig, Arvid (2013). Action Science: Foundations of an Emerging Discipline. Cambridge, Massachusetts; London, England: MIT Press. பக். 160. https://mitpress.mit.edu/books/action-science. பார்த்த நாள்: 2015-12-28. 
  12. Stuckey, W.M.; Silberstein, Michael (2000). "Uniform Spaces in the Pregeometric Modeling of Quantum Non-Separability". International Journal of Theoretical Physics. 
  13. Pardalos, Panos M.; Yatsekno, Vitaliy A.. "Optimization And Control Of Quantum-Mechanical Processes". Optimization and Control of Bilinear Systems: Theory, Algorithms, and Applications. 11. New York: Springer. பக். 208. doi:10.1007/978-0-387-73669-3. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-387-73669-3. 
  14. Gomatam, Ravi (2011). "How Do Classical and Quantum Probabilities Differ?". in A. Khrennikov. Foundations of Probabilities and Physics - 6. 1424. American Institute of Physics Conference Proceedings. பக். 105–110. doi:10.1063/1.3688958. http://proceedings.aip.org/resource/2/apcpcs/1424/1/105_1?bypassSSO=1. [தொடர்பிழந்த இணைப்பு]
  15. Gomatam, Ravi (2010). "Macroscopic Quantum Mechanics and System of Systems Design Approach". Indo-US Workshop on Systems Engineering (India: IIT Kanpur). http://home.iitk.ac.in/~lbehera/indous2/Talks_files/Day%203/Ravi%20Gomatam.pdf. பார்த்த நாள்: 2018-02-16. 
  16. Gomatam, Ravi (2009). "Quantum Theory, the Chinese Room Argument and the Symbol Grounding Problem". in P. Bruza et al.. Quantum Interaction-2009, Lecture Notes in Artificial Intelligence. 5494. Berlin, Heidelberg: Springer-Verlag. பக். 174–183. https://link.springer.com/chapter/10.1007%2F978-3-642-00834-4_15. 
  17. Gomatam, Ravi (2010). "Quantum Realism and Haecceity". in Partha Ghose. Levels of Reality: Part 5: Materialism and Immaterialism in India and the West: Varying Vistas, HSPCIC. 12. New Delhi, India: CSC, Indian Council of Philosophical Research இம் மூலத்தில் இருந்து 2016-04-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160418225556/http://csc-india.in/PUB-V12-P5.html. பார்த்த நாள்: 2018-02-16. 
  18. Gomatam, Ravi (2010). "Popper’s Propensity Interpretation and Heisenberg’s Potentia Interpretation — A comparative assessment". in Pradip K. Sengupta. History Of Science And Philosophy Of Science: A Historical Perspective of The Evolution of Ideas In Science. 13. New Delhi, India: CSC, Indian Council of Philosophical Research. https://books.google.com/books?isbn=8131719308. 
  19. Gomatam, Ravi (2005). "Do Hodgson's Propositions Uniquely Characterize Free Will?". Journal of Consciousness Studies (Imprint Academic: UK) 12 (1): 32–40. http://philpapers.org/rec/GOMDHP. 
  20. Gomatam, Ravi (2004). "Physics and Common Sense: Relearning the Connections in the Light of Quantum Theory". in Chattopadhyaya, D.P. & Sen Gupta, A.K.. Philosophical Consciousness and Scientific Knowledge: Conceptual Linkages and Civilizational Background, HSPCIC. New Delhi: CSC, Indian Council of Philosophical Research. https://books.google.com/books?isbn=818758615X. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரவி_கோமதம்&oldid=3730727" இலிருந்து மீள்விக்கப்பட்டது