கிரைசுலர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


கிரைசுலர் குழுமம்
(Chrysler Group, LLC)
வகைLimited liability company
முந்தியதுChrysler LLC
நிறுவுகைJune 6, 1925
நிறுவனர்(கள்)வால்ட்டர் கிரைசுலர்
Walter Chrysler
தலைமையகம்Auburn Hills, Michigan, ஐக்கிய அமெரிக்க நாடுகள்
அமைவிட எண்ணிக்கைList of Chrysler factories
முதன்மை நபர்கள்C. Robert Kidder
(Chairman)[1]
Sergio Marchionne
(CEO)[2]
தொழில்துறைAutomotive
உற்பத்திகள்Automobiles
உரிமையாளர்கள்UAW VEBA (67.69%)
Fiat S.p.A. (20%)
U.S. Government (9.85%)
Government of Canada (2.46%)[3]
பணியாளர்58,000 (2008)
பிரிவுகள்Chrysler
Dodge
Jeep
Ram
Mopar
Global Electric Motorcars(GEM)[4]
துணை நிறுவனங்கள்Chrysler Australia
Chrysler Canada
GEM
இணையத்தளம்Chryslergroupllc.com

கிரைசுலர் குழுமம் அல்லது கிரைஸ்லர் குழுமம் (Chrysler Group) ஒரு அமெரிக்கத் தானுந்து படைக்கும் நிறுவனமாகும். அமெரிக்கவில் மிச்சிகன் மாநிலத்தில் ஓபர்ன் குன்றுகளில் (ஓபர்ன் ஃகில்சு, Auburn Hills) உள்ள டெட்டிராய்ட்டின் புறநகர்ப் பகுதியில் இதன் தலைமையகம் அமைந்துள்ளது. கிரைசுலர் நிறுவனம் முதலில் கிரைசுலர் கார்பரேசன் என்ற பெயரில் 1925 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.[5] 1998 ஆம் ஆண்டிலிருந்து 2007 ஆம் ஆண்டு வரை கிரைசுலரும் அதன் துணை நிறுவனங்களும் இடாய்சுலாந்தை (செர்மன் நாட்டை) அடிப்படையாகக் கொண்ட டைம்லர்கிரைசுலர் AG நிறுவனத்தின் ஒரு பகுதியாக இயங்கி வந்தன (இப்போது டைம்லர் AG என்று அந்த நிறுவனத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது).[6] 1998 ஆம் ஆண்டுக்கு முன்புவரை கிரைசுலர் கார்பரேசன் நியூயார்க் பங்குச் சந்தையில் "C" முத்திரையைக் கொண்டு வர்த்தகம் செய்துகொண்டிருந்தது. டைம்லர்கிரைசுலருக்குக் கீழ் இயங்கிவந்த இந்த நிறுவனத்திற்கு "டெய்ம்லர்கிரைசுலர் மோட்டார் நிறுவனம் LLC" என பெயரிடப்பட்டது. இந்த நிறுவனத்தின் அமெரிக்க செயல்பணிகள் "கிரைசுலர் குரூப்" எனப் பொதுவாக அழைக்கப்பட்டது. மே 14, 2007 அன்று டைம்லர்கிரைசுலர், கிரைசுலர் குழுவின் 80.1% பங்குகளை அமெரிக்க தனியாளர் பங்கு நிறுவனமான செர்பெரஸ் கேபிடல் மேனேச்மெண்ட், L.P.,க்கு விற்கப்போவதாக அறிவித்தது. இருந்தபோதும் டைம்லர் தொடர்ந்து 19.9% பங்குகளை தன்வசம் வைத்திருந்தது. கிரைசுலர் LLC என்று நிறுவனத்தின் பெயர் மாற்றப்பட்ட போது இந்த பரிமாற்றங்கள் நடந்தன.[7] ஆகஸ்ட் 3, 2007 அன்று இந்த பேரம் முடிவடைந்தது.[8] ஏப்ரல் 27, 2009 அன்று எடுக்கப்பட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகளால் டைம்லர் AG அதன் கிரைசுலர் LLCயின் மீதமுள்ள 19.9% பங்குகளை செர்பெரசு கேப்பிடல் மேனேச்மெண்டுக்கு தந்துவிடுவதாகவும் $600 மில்லியன் மதிப்புள்ள தொகையை தானுந்திபடைப்பாளர் ஓய்வூதிய நிதிக்கு தருவதாகவும் சம்மதித்தது.[9]

ஏப்ரல் 30, 2009 அன்று கிரைசுலர் LLC, அதிகாரம் 11 இன் திவால் பாதுகாப்பைப் பதிவு செய்தது. மேலும் இத்தாலிய தானுந்து உற்பத்தி நிறுவனமான ஃபியட்டுடன் கூட்டு வைத்துக்கொள்ளப் போவதாகவும் அறிவித்தது.[10] ஜூன் 1 ஆம் தேதி கிரைசுலர் LLC அவர்களுடைய சில சொத்துகளையும் வேலைகளையும் புதிதாக அமைக்கப்பட்ட கிரைசுலர் குழு LLC நிறுவனத்திற்கு விற்கப்போவதாக அறிவித்தது.[11] இந்தப் புதிய நிறுவனத்தின் 20% பங்குகளை பியட் தன்வசம் வைத்திருந்தது. 35% பங்குகளாக இதை உயர்த்துவதற்கும் இந்நிறுவனம் விருப்பம் தெரிவித்தது. மேலும் முக்கியமாக வருவாய் மற்றும் மேம்பாடுகளை 51% மாக உயர்த்துவதே இதன் இலட்சியமாக கொண்டிருந்தது.[12]

ஜூன் 10, 2009 அன்று கிரைசுலர் அதன் பெரும்பாலான சொத்துகளை கிரைசுலர் குழு LLC என்று முதலில் அழைக்கப்பட்ட "நியூ கிரைசுலர்" நிறுவனத்திற்கு முழுவதுமாக விற்றது. அமெரிக்க $6.6 பில்லியன் மதிப்புள்ள இந்த பேரத்திற்கு நடுவண் அரசு நிதியுதவி செய்தது. இந்தப் பணம் ஓல்டு கார்கோ LLC என்று முன்னர் அழைக்கப்பட்ட "ஓல்டு கிரைசுலர்" நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டது.[13] எட்டு உற்பத்தி இடங்கள் உள்ளிட்ட வீடு-மனைத்தொழிலின் பல பகுதிகள் குத்தகைக்கு விடப்பட்ட துணைக்கருவிகள் ஆகியவை மாற்றுரிமை செய்வதில் அடங்கவில்லை. 789 அமெரிக்க தானுந்து உரிமையாளர்களில் உரிமம் இழந்தவர்கள் மாற்றுரிமை செய்யப்படவில்லை.[14][15]

வரலாறு[தொகு]

மேக்ஃசுவெல் மோட்டார் நிறுவனம் (1904 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது) கிரைசுலர் கார்பரேசனுடன் மறு அமைப்பு செய்யப்பட்ட போது ஜூன் 6, 1925 அன்று வால்டர் பி. கிரைசுலர் என்பவரால் இந்நிறுவனம் தொடங்கப்பட்டது.[16][17][18]

முதலில் வால்டர் கிரைசுலர் 1920களுக்கு முன்பே நட்டத்தில் (இழப்பில்) ஓடும் மேக்ஃசுவெல்-சால்மர்சு நிறுவனத்திற்குச் சென்று அந்த நிறுனத்தின் நட்டங்களை ஈட்டித்தரும் வேலைகளின் முழுப்பொறுப்பை (வில்லிசு தானுந்து நிறுவனத்தை மீட்டதைப் போன்று) தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முயன்றார்.[19]

1923 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சால்மர்சு தானுந்தின் படைப்பு நிறுத்தப்பட்டது.[20]

பிறகு 1924 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வால்டர் கிரைசுலர் நல்ல இடவசதி கொண்ட கிரைசுலர் தானுந்தைத் தொடங்கினார். கிரைசுலர் வாடிக்கையாளர்களுக்காக மேம்பட்ட நல்ல பொறியியலின் மூலம் வடிவமைக்கப்பட்ட தானுந்துகளை கொடுப்பதற்காக 6-சிலிண்டர் தானுந்தைஉருவாக்கினார். ஆனால் வாடிக்கையாளர்கள் அதைப் போன்ற தானுந்துகளை மிகவும் மலிவு விலையில் எதிர்பார்த்தனர். (எங்கும் கிடைக்காத அந்த தானுந்துகளின் முன்மாதிரிகள் வில்லிசு நிறுவனத்தின் கீழ் உருவாகிக் கொண்டிருந்த போது வால்டர் கிரைசுலர் அங்கு இருந்தார்).[21] முதலில் வந்த 1924 கிரைசுலர், கார்புரேட்டர் காற்று வடிகட்டி, உயர் அழுத்த (அமுக்க)இஞ்சின், முழு அழுத்த உயவு (ஃபுல் பிரசர் லூப்ரிக்கேசன்), மேலும் எண்ணெய் வடிகட்டி (ஆயில் பில்டர்), போன்ற அமசங்களைக் கொண்டிருந்தது. அப்போது வந்த பிற ஊர்திகள் இந்த அம்சங்களைக் கொண்டிருக்கவில்லை.[22] இந்த புதிய கண்டுபிடிப்புகளுக்கு இடையில் அதற்கு முந்தைய ஆண்டுகளில் நடைமுறைக்கு வந்த பெரிய தயாரிப்பான நான்கு சக்கர நீர்மவியல் தடைகளை (ஹைட்ராலிக் பிரேக்குகளை) கிரைசுலரே முழுவதுமாக உருவாக்கினார் இதன் உரிமத்தை லாக்கீடு நிறுவனத்திற்கு இவர் வழங்கினார். மேலும் இதில் அதிர்வைக் குறைக்க இரப்பர் இஞ்சின் உபயோகப்படுத்தியிருந்தார். மேலும் முகடுகளைக் கொண்ட விளிம்புகளால் (ரிம்களால்_ ஆன தரைச்சக்கரத்தையும் கிரைசுலர் உருவாக்கினார். காற்றடைத்த டயரினால் சக்கரம் பறக்காமல் இருப்பதற்காக இதை வடிவமைத்தார். உலகளவில் இந்த பாதுகாப்புச் சக்கரம் முக்கியமாக மோட்டார் தொழிற்துறையில் பயன்படுத்தப்பட்டது.

கிரைசுலரின் இந்த அறிமுகங்களைத் தொடர்ந்து 1925 மாடலுக்குப் பிறகு மேக்ஃசுவெல் கைவிடப்பட்டது. இருந்தபோதும் கிரைசுலரின் 1926 மாடலாக வெளியிடப்பட்ட மலிவு விலையில் கிடைக்கும் 4-சிலிண்டர் மேக்ஃசுவெல்லின் மாடலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு நிறுவனத்தின் பெயரை மாற்றி வெளியிடப்பட்ட தயாரிப்பாகும்.[23] 1920களுக்கு முந்தைய இந்தக் காலகட்டத்தில் வால்டர் கிரைசுலர் மேக்ஃசுவெல்லின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றார். இதன் முடிவாக மேக்ஃசுவெல் நிறுவனம் கிரைசுலரின் பெயரில் ஒரே நிறுவனமாக இணைந்தது.

நிறுவனம்[தொகு]

அபர்ன் ஹில்ஸில் உள்ள க்ரிஸ்லரின் தலைமையகம்
 • மோபர் — கிரைசுலரால் உருவாக்கப்படும் வாகனங்களின் மாற்று பாகங்கள். மேலும் கிரைசுலர் உருவாக்கும் வாகனங்களின் பாகங்களுக்கு சந்தைக்குபிறகு ஒரு தனிப்பிரிவான மோப்பர் பெர்ஃபாமென்சு பொறுப்பேற்கிறது.
 • கிரைசுலர் ஃபினான்ஷியல் — கிரைசுலரின் வாடிக்கையாளர்களுக்கும் விற்பவர்களுக்கும் நிதிசேவையளிக்கிறது

வாகனங்களின் குறியீட்டுப் பெயர்[தொகு]

 • கிரைசுலர் — பயணிகள் கார்கள், சிறிய வேன்கள் மற்றும் க்ராஸ்ஓவர்கள்
 • டாட்ஜ் — பயணிகள் கார்கள், சிறிய வேன்கள் மற்றும் க்ராஸ்ஓவர்கள்
 • ஜீப் — SUVகள் மற்றும் க்ராஸ்ஓவர்கள்
 • க்ளோபல் எலெக்ட்ரிக் மோட்டார்கார்ஸ் (GEMCAR) — பேட்டரி மின்கல குறைவேக வாகனம்
 • ராம் — ட்ரக்குகள் மற்றும் வணிகரீதியான வாகனங்கள்

மொத்த அமெரிக்க விற்பனை[தொகு]

காலெண்டர் வருடம் அமெரிக்க விற்பனைகள் %வருட விற்பனை.
1999[24] 2,638,561
2000 2,522,695 4.4%
2001[25] 2,273,208 9.9%
2002[26] 2,205,446 3.0%
2003 2,127,451 3.5%
2004[27] 2,206,024 3.7%
2005[27] 2,304,833 4.5%
2006[28] 2,142,505 7.0%
2007[28] 2,076,650 3.1%
2008[29] 1,453,122 30.0%
2009 ஜனவரி-அக்டோபர்[30] 781,319 39%

வாகனங்கள்[தொகு]

டர்பைன்[தொகு]

மோட்டார் உபயோகத்திற்காக எளிதில் தீப்பற்றத்தக்க எரிபொருளில் மிகவும் விரிவான காலத்திற்கு இயங்கும் வகையில் வாயு டர்பைன் இஞ்சின்களை கிர்ஸ்லர் பல வருடங்களாக உருவாக்கிக் கொண்டிருந்தது. பொதுவாக இராணுவ வாகனங்களில் டர்பைன்கள் பயன்படுத்தப்பட்டன. மேலும் கிரைசுலர் பயணிகள் கார்களில் பயன்படுத்தும் வகையில் பல அடிப்படை முன்மாதிரிகளை உருவாக்கியது. 1960 ஆம் ஆண்டில் மிகப்பெரிய படைப்பு கிட்டத்தட்ட காட்சிக்கு தயாராக இருந்தது. 1962 ஆம் ஆண்டில் ஐம்பது க்ரிஸ்லரின் டர்பைன் கார்கள் தயாரிக்கப்பட்டன. ஜியா கட்டுப்பொருட்களைக் கொண்டு அந்த கார்கள் உருவாக்கப்பட்டிருந்தது அதன் சிறப்பம்சமாக இருந்தது. மேலும் நுகர்வோர் பயன்பாட்டிற்காக கடைசி சோதனைக்காக இவை அனுப்பப்பட்டன. 1970களில் செயல்படுத்தப்பட்ட EPA தர சட்டப்படி பல மேம்பாடு மற்றும் உமிழ்வு சோதனைக்குப் பிறகு இந்த இஞ்சின்கள் 1977 மாடல் லிபரோன் கார்களில் பொருத்துவதற்கு திட்டமிடப்பட்டது. இருந்தபோதும் 1970 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இவருடைய நிறுவனம் நிதி நெருக்கடியை சந்தித்த போது கிரைசுலர் டர்பைன் இஞ்சினைக் கைவிடும் படி நிர்பந்தப்படுத்தப்பட்டார். மேலும் இதன்படி அமெரிக்க அரசாங்கம் இவருக்கு கடன் வழங்க ஒப்புக்கொண்டது.

மின் வாகனங்கள்[தொகு]

கிரைசுலர் ENVI கருத்தைக் கொண்டு புதிய இயக்கிகளை தயாரிக்கத் திட்டமிட்டார். அதற்காக மின் இயக்கி வாகனங்கள் மற்றும் அதை ஒத்த தொழில் நுட்பத்தை மையமாகக் கொண்டு வேலை செய்ய அகவமைக்கப்பட்ட அமைப்பு நிறுவப்பட்டது. லூ ரோட்டிசினால் வழிநடத்தப்படும் க்ரிஸ்லரின் ENVI பிரிவு 2007 ஆண்டு செப்டம்பரில் உருவாக்கப்பட்டது. இது குறிப்பாக முந்தைய மாடல்களைப் போல் இல்லாமல் உருவாகும் அனைத்து புதிய மின் வாகனங்கள் மற்றும் அதை ஒத்த வாகனங்களின் மேல் கவனத்தை செலுத்தியது.[மேற்கோள் தேவை]

கிரைசுலர் LLC ஒரு பெரிய அளவில் பச்சை வாகனங்களை டெட்ராய்ட் ஆட்டோ ஷோவில் கொண்டுவந்தது. அதில் மின் இயக்கி தொழில் நுட்பத்துடன் ஒன்று சேர்த்து உருவாக்கப்பட்ட மூன்று வகை வாகனங்களை அறிமுகப்படுத்தியது. அவை பின்வருமாறு:

 1. டாட்ஜ் ZEO வகை—அனைத்து மின் ஸ்போர்ட் வேகன்களும் 64 கிலோவாட்-மணி லிதியம்-அயன் மின்கல கட்டுகளுடன் 200 கிலோவாட் (268 குதிரைத்திறன்) மின் மோட்டார்களைக் கொண்ட இது "மாசற்ற செயல்முறை (ஜீரோ எமிஷன் ஆப்பரேஷன்)" என்பதன் சுருக்கமாகும். வாகனத்தின் பின் சக்கர இயக்கி ஆறு வினாடிகளுக்கு குறைவான நேரத்தில் 60 mph (97 km/h) அளவு வேகமெடுக்கிறது. மேலும் குறைந்தது 250 மைல்கள் (400 km) வரை செல்கிறது. இது கலப்பின மின்சாரத்தில் புகுத்தப்பட்ட ஒரு பதிப்பும் ஆகும்.
 2. கிரைசுலர் எகோவயாகர் வகை ஒருமித்த மின்கல கட்டு மற்றும் ஒரு சிறிய ஹைட்ரஜன் எரிபொருளைக் கொண்ட மோட்டார்கள் ஒருங்கிணைந்த இந்த வகை 300-மைல் (480 km) அளவையும் அடைகிறது. இந்த வாகனம் 40 மைல்கள் (64 km) தூரத்திற்கு மின்கலத் திறனை மட்டும் கொண்டு பயணிக்கிறது. மேலும் 60 mph (97 km/h) வேகத்தை எட்டு வினாடிகளுக்கும் குறைவான நேரத்தில் அடைகிறது.
 3. ஜீப் ரெனிடேடு வகை, கலப்பினத்தால் தொகுக்கப்பட்டு ஓர் இரட்டை 200 kW (270 hp) உடன் கூடிய லிதியம்-யான் மின்கலக் கட்டுகள் ஒருங்கிணைத்த மின்சார மோட்டார்களை அதன் ஒவ்வொரு அச்சிலும் கொண்டுள்ளது. இந்த ஜீப் 40 மைல்கள் (64 km) தூரம் வரை மின்கல திறனை மட்டும் பயன்படுத்தி பயணிக்கமுடியும் மேலும் இதன் 1.5 லிட்டர், 3-சிலிண்டர் டீசல் இஞ்சினைப் பயன்படுத்தி 400 மைல்கள் (640 km) தூரம் வரை பயணிக்க முடியும். மிகவும் எடைகுறைந்த அலுமினிய கட்டுமானத்தைப் பயன்படுத்தியிருப்பது இந்த வாகனத்தின் சிறப்பாகும்.

கிரைசுலர் இப்போது கிரைசுலர் ஆஸ்பன் கலப்பினம், டாட்ஸ் டுரன்கோ கலப்பினம் மற்றும் டாட்ஜ் ராம் கலப்பினம் உள்ளிட்ட HEMI இஞ்சின்களை கொண்ட குறைந்தது மூன்று கலப்பின வாகனங்களையும் உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் BMW AG உடன் இணைந்து கிரைசுலர் கலப்பினத் தொழில்நுட்பத்தை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. இது இரண்டு கலப்பின SUVகளை பின்னால் கொண்ட வாகனங்களை 2008 ஆம் ஆண்டில் வெளியிடுவதாக முன்பே அறிவித்துள்ளது.[31]

மேலும் அனைத்து புதிய ராம் 1500இன் ஆற்றல் அதிகரிக்கப்பட்ட கலப்பினம் 2010 ஆம் ஆண்டில் கிடைக்கக் கூடியதாக இருக்கும். ராம் HEMI இரண்டு-வித கலப்பின அமைப்பைக்கொண்ட ஒரு 5.7-லிட்டர் HEMI V-8 இஞ்சினுடன் ஒருங்கிணைந்த ஒரு கலப்பினமாகும். 2009 ஆம் ஆண்டிற்கான ராம் 1500 க்காக, கிரைசுலர் HEMI V-8 இஞ்சினின் மேம்படுத்தப்பட்ட பதிப்பை அறிமுகப்படுத்தியது. அதன் சிறப்பாக மாறுபடு வால்வு நேரம் மற்றும் ஒரு நான்கு சிலிண்டர் அமைப்புடன் கூடிய செயல்திறனை நீட்டிக்கும் வகையிலும் இது அமைக்கப்பட்டது. அதிக திறன் மற்றும் முறுக்கு விசையுடன் கூடிய எரிபொருள் அளவை 4% அதிகரிக்கும் வகையில் இது அமைந்திருந்தது.

இராணுவ பயன்பாடுகளுக்காக கலப்பின டீசல் டிரக் பற்றிய ஆய்வுகளையும் கிரைசுலர் நடத்தியது.

கிரைசுலர் அறிமுகப்படுத்தியவை:[32][33]

 • டாட்ஜ் EV என்பது லோட்டஸ் ஐரோப்பாவை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு அனைத்து மின்சார ஸ்போர்ட்ஸ் காராகும். இது 120 mph (190 km/h) உச்ச வேகமாகவும் 150 முதல் 200 மைல்கள் (240 முதல் 320 km) அளவு வேகத்தை எட்டக் கூடிய வகையிலும் திட்டமிடப்பட்டது.
 • கூடுதல் கலப்பின வாகனங்கள் (PHEVகள்), PHEVயின் பெரிய உற்பத்தி போட்டியில் பங்கேற்றது:[34]
  • கிரைசுலர் EV, கிரைசுலர் டவுன் & கண்ட்ரியை அடிப்படையாகக் கொண்டு ஒரு தொடர் கூடுதல் கலப்பினத்துடன் 40-மைல் (64 km)க்கான அனைத்து மின்சார அளவையும் கொண்டிருந்தது.
  • மேலும் ஜீப் EVயானது ஜீப் ராங்குலரை அடிப்படையாகக் கொண்டிருந்தது. க்ரிஸ்லரின் ஆய்வுகளிலிருந்து உட்சக்கர மின்சார மோட்டார்களை இந்த வாகனங்கள் கொண்டிருந்தன.

2009 ஆம் ஆண்டில் டெட்ராய்டில் நடந்த வட அமெரிக்க சர்வதேச ஆட்டோ காட்சியில், கிரைசுலர் 200C EV காரை அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்போர்ட்ஸ் கார் 40 மைல் செல்லும் அனைத்து மின்சார அளவையும் அதிகமான அளவாக 400 மைல்கள் (640 km) கொண்டிருந்தது. மற்றொரு அளவு அதிகரிக்கும் மின்சார வாகனமான ஜீப் பேட்ரியட் EVவையும் அறிமுகப்படுத்தியது. 2010 ஆம் ஆண்குக்குள் கிரைசுலர் அனைத்து மின்சார ஸ்போர்ட்ஸ் கார்களை வெளியிட்டால் அது இரண்டு வட அமெரிக்க தொடக்க நிறுவனங்களான டெல்சா மோட்டார்ஸ் மற்றும் பிஸ்கர் ஆட்டோமோட்டிவ் நிறுவனங்களுக்கு நேரடிப் போட்டியாக அமையும்.[35]

மின்சார இயக்கி வாகனங்களைத் தயாரிப்பதற்கு நிறுவப்பட்ட க்ரிஸ்லரின் ENVI பிரிவு, கிரைசுலர் LLCயின் மின்சார வாகனங்கள் 2010 ஆம் ஆண்டுக்குள் காட்சிக்கூடங்களுக்கு கொண்டுவரப்படும் என 2008 ஆம் ஆண்டு செப்டம்பரில் அறிவித்தது. இவர்கள் மூன்று வகை "தாயாரிப்புத் திட்டத்தில் உள்ள" வாகனங்களை காட்சிக்கு வைத்தனர். மேலும் இவை மின்சார வாகனங்களுக்கான முதல் மிகப்பெரிய முத்திரையைப் பதிக்கும் எனக் கூறினர்.[36]

க்ரிஸ்லரின் தலைமை செயற்குழுவினரான பாப் நர்டெல்லி கூறுகையில் மின்சார தொழில்நுட்பத்தை சந்தைக்குக் கொண்டு வருவதற்கு அரசாங்கக் கடன்கள் உதவி புரியும் எனக் கூறியுள்ளார். ஆனால் அதற்கு அவர்கள் ஒப்புதல் அளிக்கவில்லை எனில் கிர்ஸ்லர் குறைந்த அளவு ஆக்க சக்தியையே அவர்களது புதிய தொழில்நுட்பத்திற்கு பயன்படுத்த முடியும். மேலும் அதற்காக வழக்கமான சில பணிகளையும் அதன் மேம்பாடுகளையும் நிறுத்தி வைக்க நேரிடும். "பொருளியல் சார்ந்த குழப்பங்கள் மற்றும் நிச்சயமாக தொழில் வீழ்ச்சி ஆகியவற்றின் விளைவாக எதிர்பாராத விதமாக பல குடும்பங்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டியுள்ளது" என்று கூறினார். "நாங்கள் இனியும் மேம்பட்ட தொழில்நுட்ப வேலைகளுக்கு உதவி செய்ய முடியாது என நம்பகமாக கூற முடியும்."[34]

கிர்ஸ்லரின் அனைத்து நடவடிக்கைகளிலும் பவர்டிரெய்ன்கள் மின்சார மயமாக்கப்பட்டிருக்கும் அந்த நாள் வந்து கொண்டிருக்கிறது என க்ரிஸ்லரின் நிர்வாகிகள் தெரிவித்தனர். "அடிப்படையான தொழில்நுட்பத்தை அடைவதும், பொருளியல் அளவை அடைவதும், ஆரோக்கியமான வருங்கால தலைமுறைக்கு ஏற்றவாறு தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்வதும், குறைந்த செலவில், சிறிய, நல்ல திறன்மிக்க, சிறந்த செயல்பாடுகளை உருவாக்குவதுமே எங்கள் குறிக்கோள்," என செய்தி ஊடகங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. "இறுதியாக இது எங்களது அனைத்து நடவடிக்கைகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தி அதன் சில செயல்பாடுகள் மின்சார இயக்கிகளில் பிரதிபலிக்கும்" எனவும் கூறியுள்ளனர்.[34]

PHEV ஆராய்ச்சிக் கூடம்[தொகு]

PHEV ஆராய்ச்சிக் கூடத்தின் ஆலோசனை ஒன்றியத்தில் க்ரிஸ்லரும் இருந்தது.

சந்தைப்படுத்துதல்[தொகு]

2007 ஆம் ஆண்டில் முதலில் பதிவு செய்யும் உரிமையாளர்களுக்கு அல்லது குத்தகைதாரர்களுக்கு கிர்ஸ்லர் வாகனங்களின் பவர்டிரெய்னுக்கு வாழ்நாள் உத்தரவாதம் அளிக்கத் தொடங்கியது.[38] இந்தப் பேரம் அமெரிக்காவில் உரிமையாளர்கள் அல்லது குத்தகைதாரர்களை உள்ளடக்கியிருந்தது. ப்யூர்டு ரிக்கோ மற்றும் த விர்ஜின் ஐலேண்ட்ஸ், 2009 ஆம் ஆண்டின் வாகனங்களின் மாடலாகும். மேலும் 2006, 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டு வாகன மாடல்கள் ஜூலை 26, 2007 அன்று அல்லது அதற்குப் பிறகு வாங்கப்பட்டது. SRT மாடல்கள், டீசல் வாகனங்கள், ஸ்ப்ரிண்டர் மாடல்கள், ராம் சாசிஸ் கேப், கலப்பின அமைப்பு கூறுகள் (ஒலிபரப்பு உள்ளிட்ட) மற்றும் குறிப்பிட்ட வாகனங்களின் நடவடிக்கைகளைத் தவிர்த்து மற்ற வாகனங்களுக்கு உத்தரவாதம் தரப்பட்டது. இந்த உத்தரவாதம் திரும்பப் பெறமுடியாதது ஆகும்.[39] இருந்தபோதும் க்ரிஸ்லரின் மறு மதிப்பீடுக்குப் பிறகு இந்த உத்தரவாத செயல்பாடுகள் ஐந்து வருடங்கள்/100,000 மைலாக மாற்றியமைக்கப்பட்டன. 2010 ஆம் ஆண்டுக்கான அல்லது அதற்குப் பிறகு வாகனங்களின் உத்தரவாதத்தை மாற்றத்தக்கதாகும்.[40] அக்டோபர் 5, 2009 அன்றில் இருந்து டாட்ஜஸ் கார் மற்றும் டிரக் இரண்டு வரிசைகளாகப் பிரிக்கப்பட்டன. அவற்றில் கார்கள் "டாட்ஜ்" எனவும் பிக்அப் டிரக்குகள் மற்றும் மினிவேன்களுக்கு க்ராஸ்ஓவர்கள் மற்றும் "ராம்" எனவும் பிரிக்கப்பட்டன.[41]

சர்ச்சைகள்[தொகு]

கிரைசுலர் கே ரைட்ஸ் குரூப்ஸினால் புறக்கணிக்கப்பட்ட பிறகு ABC சிட்காம் எலேன் களிலிருந்து "சர்சைகளுக்கு" வழி வகுக்கும்படி 1997 ஆம் ஆண்டில் விளம்பரங்களை நிறுத்திக் கொண்டது[42]

1987 ஆம் ஆண்டில் க்ரிஸ்லரின் வரையறுக்கப்பட்ட 32,750 கார்களில் ஓட்ட அளவிகள் துண்டிக்கபட்ட சோதனை ஓட்டங்கள் செய்யப்பட்ட பிறகு விற்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. சில கார்கள் விற்பனையாளர்களிடம் மாற்றிக்கொடுப்பதற்கு முன் 500 மைல்கள் ஓட்டியிருப்பதும் தெரியவந்தது. கிரைசுலர் நீதிமன்றத்தில் புகாருடன் கூடிய வழக்கைப் பதிவு செய்தது.[43][44] க்ரிஸ்லரின் CEOவான லீ ஐகோக்கா, நிறுவனத்தின் மேல் பொதுமக்களிடம் இருந்த மோசமான எண்ணத்தைக் குறைக்கும் வகையில் செய்தியாளர்களின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து இது "முட்டாள்தனமான" மற்றும் "மன்னிக்கமுடியாத" செயல் என கூச்சலிட்டுள்ளார்.

நாடுகள்[தொகு]

 • கிரைசுலர் ஆஸ்திரேலியா
 • கிரைசுலர் பெவ்ரி அர்ஜென்டினா

அடிக்குறிப்புகள்[தொகு]

 1. Chrysler LLC(2009-05-20). "C. Robert Kidder to Become Chairman of Chrysler Group LLC". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 2009-06-09.
 2. "UPDATE: US Ruling Paves Way For Marchionne As Chrylser [sic CEO"]. Dow Jones. Dow Jones & Company, Inc.. 2009-06-01 இம் மூலத்தில் இருந்து 2009-06-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090610231810/http://online.wsj.com/article/BT-CO-20090601-708155.html. பார்த்த நாள்: 2009-06-09. 
 3. "Fiat Said to Buy Chrysler Assets Today to Form New Automaker". www.bloomberg.com. பார்க்கப்பட்ட நாள் 2009-06-11.
 4. Chrysler Group LLC list of company brands retrieved on 18-November 2009.
 5. "Chrysler Reviews and History". JB car pages. பார்க்கப்பட்ட நாள் 2008-09-22.
 6. "Chrysler History". JB car pages. பார்க்கப்பட்ட நாள் 2008-09-22.
 7. "Cerberus Takes Majority Interest in Chrysler Group and Related Financial Services Business for EUR 5.5 Billion ($7.4 billion)". DaimlerChrysler.
 8. "Cerberus gains control of Chrysler". San Jose Mercury News.[தொடர்பிழந்த இணைப்பு]
 9. "Daimler Reaches Agreement On Separation From Chrysler". 27 April 2009. Archived from the original on 1 மே 2009. பார்க்கப்பட்ட நாள் 22 டிசம்பர் 2009. {{cite web}}: Check date values in: |access-date= (help)
 10. கிரைசுலரின் திவால் திட்டம் அறிவிக்கப்பட்டது. www.nytimes.com. 30-04-2009 அன்று பெறப்பட்டது.
 11. "Court Approves Sale of Chrysler LLC Operations to New Company Formed with Fiat". News.prnewswire.com. Archived from the original on 2012-03-22. பார்க்கப்பட்ட நாள் 2009-06-06.
 12. "Chrysler Gets OK for Fiat Sale". Edmunds.com. 2009-06-01. பார்க்கப்பட்ட நாள் 2009-06-06.
 13. ராம்சே, மைக் மற்றும் கேரி, டிப்பானி. "கிரைசுலரின் விற்கப்பட்ட சில சொத்துகள் கடன் ஈந்தோருக்கு அளிக்கப்பட்டது" Bloomberg.com , 23-06-2009, 10-07-2009 அன்று பெறப்பட்டது.
 14. de la Mercel, Michael; Micheline Maynard (June 10, 2009). "Swift Overhaul Moves Ahead as Fiat Acquires Chrysler Assets". New York Times. http://www.nytimes.com/2009/06/11/business/global/11chrysler.html. பார்த்த நாள்: June 10, 2009. 
 15. Forden, Sara Gay; Mike Ramsey (June 10, 2009). "Fiat Said to Buy Chrysler Assets Today to Form New Automaker". Bloomberg. http://www.bloomberg.com/apps/news?pid=20601103&sid=a59MFT3OCDBs. பார்த்த நாள்: June 10, 2009. 
 16. Davis, Mike; Tell, David (1995). The Technology Century: 100 years of The Engineering Society 1895-1995. Engineering Society of Detroit. பக். 53. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781563780226. https://archive.org/details/technologycentur0000unse. 
 17. "A Brief Look at Walter P. Chrysler". WPC News. Archived from the original on 2022-08-18. பார்க்கப்பட்ட நாள் 2009-12-22.
 18. Malis, Carol (1999). Michigan: celebrating a century of success. Cherbo Publishing Group. பக். 76. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781882933235. 
 19. Kimes, Beverly Rae; and Clark, Jr., Henry Austin (1989). Standard Catalog of American Cars 1805-1942 (2nd ed.). Krause Publications. பக். 292. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0873411110. 
 20. Kimes, Beverly Rae; and Clark, Jr., Henry Austin (1989). Standard Catalog of American Cars 1805-1942 (2nd ed.). Krause Publications. பக். 257. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0873411110. 
 21. Kimes, Beverly Rae; and Clark, Jr., Henry Austin (1989). Standard Catalog of American Cars 1805-1942 (2nd ed.). Krause Publications. பக். 292, 1498. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0873411110. 
 22. Zatz, David. "Chrysler Technological Innovations". பார்க்கப்பட்ட நாள் 2008-01-05.
 23. Kimes, Beverly Rae; and Clark, Jr., Henry Austin (1989). Standard Catalog of American Cars 1805-1942 (2nd ed.). Krause Publications. பக். 292-293, 901. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0873411110. 
 24. "Chrysler Group Announces Year-End and December Sales". Theautochannel.com. பார்க்கப்பட்ட நாள் 2009-04-30.
 25. "Chrysler Group Reports U.S. December Sales". Theautochannel.com. பார்க்கப்பட்ட நாள் 2009-04-30.
 26. "Chrysler Group Reports December 2003 Sales Increase of 2 Percent". Theautochannel.com. 2004-11-17. பார்க்கப்பட்ட நாள் 2009-04-30.
 27. 27.0 27.1 "Chrysler Group 2005 U.S. Sales Rise 5 Percent, Highest Since 2000; December Sales Decline In Line with Overall Industry". Prnewswire.com. பார்க்கப்பட்ட நாள் 2009-04-30.
 28. 28.0 28.1 "Total Chrysler LLC December 2007 Sales Up 1 Percent on the Strength of Retail; Demand..." Reuters. 2008-01-03. Archived from the original on 2013-07-05. பார்க்கப்பட்ட நாள் 2009-04-30.
 29. "Chrysler LLC Reports December 2008 U.S. Sales". News.prnewswire.com. Archived from the original on 2009-02-04. பார்க்கப்பட்ட நாள் 2009-04-30.
 30. "Chrysler Group LLC Reports October 2009 U.S. Sales Increase Compared with". Michigan: Prnewswire.com. பார்க்கப்பட்ட நாள் 2009-11-23.
 31. ப்ளானட் ஆர்க்: கிரைசுலர் நல்ல மைலேஜிற்காக புதிய கலப்பினங்களை உருவாக்க ஒத்துக்கொண்டது
 32. Neff, John (2008-09-23). "Chrysler LLC debuts Dodge EV, Jeep EV and Chrysler EV". Autoblog.com. பார்க்கப்பட்ட நாள் 2009-04-30.
 33. "EERE News: EERE Network News". Apps1.eere.energy.gov. Archived from the original on 2011-05-29. பார்க்கப்பட்ட நாள் 2009-04-30.
 34. 34.0 34.1 34.2 "Chrysler "Jolts" PHEV Race; PHEV Ads; V2Green Acquired". Calcars.org. பார்க்கப்பட்ட நாள் 2009-04-30.
 35. "EERE News: Chrysler, Ford, and Other Automakers Pursue Electric Vehicles". Apps1.eere.energy.gov. 2009-01-14. Archived from the original on 2009-05-04. பார்க்கப்பட்ட நாள் 2009-04-30.
 36. "Innovation – ENVI". Chrysler LLC. 2008-09-22. பார்க்கப்பட்ட நாள் 2009-04-30.
 37. "Developments on Bridge Loan to Automakers; 4 Groups Write Congress". Calcars.org. பார்க்கப்பட்ட நாள் 2009-04-30.
 38. முக்கிய செய்தி: கிரைசுலர் பவர்டெரெய்னுக்கு வாழ்நாள் உத்தரவாதத்தை அறிவித்தது!
 39. "புதிய கிரைசுலர் வாழ்நாள் பவர்ட்ரெய்ன் உத்தரவாதம் வாடிக்கையாளர்கள் -- கே&ப". Archived from the original on 2010-01-25. பார்க்கப்பட்ட நாள் 2009-12-22.
 40. அறிக்கை: கிரைசுலர் பவர்ட்ரெய்னின் ஐந்து ஆண்டு/100,000 மைல்களுக்கான வாழ்நாள் உத்தரவாதத்தை கைவிட்டது
 41. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-10-12. பார்க்கப்பட்ட நாள் 2009-10-12.
 42. Gallagher, John (1997-06-10). "The ad buck stops here - controversy on gays and advertising". The Advocate இம் மூலத்தில் இருந்து 2007-11-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071109194911/http://findarticles.com/p/articles/mi_m1589/is_n735/ai_20164880. பார்த்த நாள்: 2007-11-07. 
 43. கிரைசுலர் பாதுகாப்புச் சட்டத்தை மீறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டதுநியூயார்க் டைம்ஸ் , 12 ஜூலை 1987
 44. கிரைசுலர் சுமார் 40,000 உரிமையாளர்களுக்கு கணக்கு முடித்ததுநியூயார்க் டைம்ஸ் , ஆகஸ்ட் 24 1988

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரைசுலர்&oldid=3707467" இலிருந்து மீள்விக்கப்பட்டது