அன்பில் பொய்யாமொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அன்பில் பொய்யாமொழி (Anbil Poyyamozhi, இறப்பு: 28 ஆகத்து 1999) ஒர் இந்திய அரசியல்வாதியும் மற்றும் தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் முன்னாள் திராவிட முன்னேற்றக் கழக அமைச்சர், அன்பில் பி. தர்மலிங்கத்தின் மூத்த மகனும், அன்பில் பெரியசாமியின் அண்ணனும் ஆவார்.

அன்பில் பொய்யாமொழி, 1989 ஆம் ஆண்டு மற்றும் 1996 சட்டமன்றத் தேர்தல்களில் தி.மு.க வேட்பாளராக திருச்சிராப்பள்ளி - இரண்டாம் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] பொய்யாமொழி 28 ஆகத்து 1999 இல் இறந்தார்.[2]

பொய்யாமொழியின் மகன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆவார். இவர் 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், திருவெறும்பூர் தொகுதியில், திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

குறிப்புகள்[தொகு]

  1. "Statistical Report on General Election 1996 for the Legislative Assembly of Tamil Nadu". Election Commission of India. {{cite web}}: Unknown parameter |acdate= ignored (help)
  2. "Tamil Nadu Legislative Assembly (Eleventh Assembly): Review 1996-2001" (PDF). Legislative Assembly of Tamil Nadu. பார்க்கப்பட்ட நாள் 2017-05-07.
  3. Kolappan, B. (21 April 2016). "Descendants shine in party of rising sun". The Hindu இம் மூலத்தில் இருந்து 2016-04-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160421015034/http://www.thehindu.com/news/cities/chennai/descendants-shine-in-party-of-rising-sun/article8501998.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்பில்_பொய்யாமொழி&oldid=3939961" இலிருந்து மீள்விக்கப்பட்டது