எம். ஆர். விஜயபாஸ்கர்
Appearance
எம். ஆர். விஜயபாஸ்கர் (M. R. Vijayabhaskar) (எம்ஆர்வி என்றும் அழைக்கப்படுபவர்) ஒரு அரசியல்வாதி ஆவார். இவர் பதினைந்தாவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் கரூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பேருந்து ஓட்டுநர் தனது ஓட்டுநர் உரிமத்தை தன்னுடன் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்ற விதியை இவர் வகுத்தார்.
2016 மே மாதம் விஜயபாஸ்கரை போக்குவரத்துத் துறை அமைச்சராக ஜெ. ஜெயலலிதா நியமித்தார்.[1] இதுவே தமிழக அரசின் முதல் அமைச்சரவைப் பதவியாகும்.[2]
கரூரில், 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வே. செந்தில்பாலாஜியிடம் 12,448 வாக்குகள் வித்தியாசத்தில் விஜயபாஸ்கர் தோல்வியடைந்தார்.[3]
குடும்பம்
[தொகு]இவருடைய மனைவி பெயர் விஜயலட்சுமி. இவருக்கு அட்சயநிவேதா, அஸ்வர்தவர்ணிகா என இருமகள்கள் உள்ளனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "புதிய அமைச்சர்கள் வாழ்க்கைக் குறிப்பு". தினத்தந்தி. 29 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 29 மே 2016.
- ↑ "Jayalalithaa and her 28-member Cabinet to be sworn in on May 23". The Hindu. 21 May 2016. http://www.thehindu.com/news/national/tamil-nadu/list-of-ministers-in-jayalalithaa-cabinet/article8630370.ece. பார்த்த நாள்: 2017-05-04.
- ↑ "Three AIADMK ministers suffer defeat at the hands of their former colleagues". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2021-07-24.