எச்1பி நுழைவிசைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எச்1பி நுழைவிசைவு என்பது, ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்குள் நுழைவதற்கு, தற்காலிக வேலையாட்களுக்கு[1] வழங்கப்படும் ஒரு வகையான நுழைவிசைவு ஆகும். இவ்வகையான நுழைவிசைவு வெளி நாடுகளிலிருந்து சிறப்புப் பணிகளை செய்ய அமெரிக்க நாடுகளுக்கு வருவோருக்கு வழங்கப்படுகிறது. அறிவியல், பொறியியல், மருத்துவம், உடற்கல்வி, கணிதம், சமூக அறிவியல், கணக்கியல், கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இளங்கலை அல்லது அதற்கு இணையான பட்டம் பெற்றிருப்போருக்கு இவ்வகையான நுழைவிசைவு வழங்கப்படும்.

எச்1பி நுழைவிசைவு பெற தகுதிகள்[தொகு]

ஐந்து[2] முக்கியமான தகுதிகள் எச்1பி நுழைவிசைவு பெற தேவைப்படுகின்றது.

  1. வேலை வழங்கும் அமெரிக்க நிறுவனம், வேலை பெறும் பிறநாட்டு ஊழியருக்காக இந்நுழைவிசைவிற்காக விண்ணப்பிக்க வேண்டும்.
  2. இளங்கலைப் பட்டம் அல்லது அதற்கு நிகரான கல்வித்தகுதி அல்லது அப்பணியில் சேர்வதற்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி அல்லது சிறப்பான பணிகளை செய்ய தேவையான பயிற்சியும் அதற்கான சான்றிதழ்களுடன் கூடிய கல்வித்தகுதி.
  3. கல்வித்தகுதிக்கு ஏற்ற பணியை மட்டுமே செய்ய வேண்டும்.
  4. அப்பணிக்கான முழு ஊதியம் அல்லது குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
  5. நுழைவிசைவு எண்

காலக்கெடு[தொகு]

எச்1பி நுழைவிசைவு வழக்கமாக மூன்று ஆண்டுகள் வரையில் வழங்கப்படுகிறது. அதன்பிறகு இரண்டு ஆண்டுகளும், தேவைப்பட்டால் மூன்று ஆண்டுகள் வரையிலும் நீட்டிக்க இயலும்[3]. ஐக்கிய அமெரிக்க நாடுகளின் பாதுகாப்புத் துறையில் பணிபுரிபவர்களுக்கு அதிகபட்சமாக பத்து ஆண்டுகள் அனுமதி வழங்கப்படுகிறது.

அனுமதி எண்ணிக்கை[தொகு]

ஒரு ஆண்டுக்கு 65,000 நபர்களுக்கு எச்1பி நுழைவிசைவு வழங்கப்படுகிறது. கூடுதலாக 20,000 முதுகலை பட்டதாரிகளுக்கு, இவ்வகையான நுழைவிசைவு புதிதாக வழங்கப்படும். பிரதி ஆண்டு அக்டோபர் முதல் தேதி அமெரிக்க கணக்கு வருடம் தொடங்குகிறது, அது முதல் ஆறு மாதங்களுக்கு உள்ளாகவே இவ்வகையான நுழைவிசைவு வழங்கப்படுகிறது; ஆயினும் ஏப்ரல் 1 முதல் இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பங்கள்[தொகு]

ஏப்ரல் 1 முதல், எச்1பி நுழைவிசைவிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. 2016-ம் ஆண்டு முதல் பணிசெய்வதற்காக 2,33,000 விண்ணப்பங்கள் வந்திருந்தன[4], அவற்றில் 65,000 இளங்கலை பட்டதாரிகளும், 20,000 முதுகலை பட்டதாரிகளும் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஆவணங்கள்[தொகு]

கல்விச்சான்றிதழ்கள், வேலை வாய்ப்பு தகவல்கள், தற்குறிப்பு, ஊதிய விவரங்கள்பரணிடப்பட்டது 2012-09-16 at the வந்தவழி இயந்திரம், ஐ797, டிஎசு160, உள்ளிட்டவைகளை வேலை கொடுக்கும் நிறுவனம் ஊழியருக்காக சமர்ப்பிக்க வேண்டும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Temporary (Nonimmigrant) Workers". பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 27, 2015.
  2. Understanding H-1B Requirements
  3. "எல்1பி எச்1பி வித்யாசங்கள் (ஆங்கில மொழியில்)". பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 27, 2015.
  4. "USCIS Completes the H-1B Cap Random Selection Process for FY 2016". பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 27, 2015.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்1பி_நுழைவிசைவு&oldid=3485151" இலிருந்து மீள்விக்கப்பட்டது