உடற்கல்வி
உடற்கல்வி என்பது உடலியக்க செயல்பாடுகள் மூலம் உடல் சார்ந்த திறன்களை வெளிக்கொணர்தல் ஆகும். உடல் மற்றும் வயதிற்கு ஏற்றாற் போல் திட்டமிட்டு தொடர்ச்சியாக உடலியக்க செயல்பாடுகளில் ஈடுபட்டு உடலை ஆரோக்கியமாக வைத்தல் என்பதாகும்.
நோக்கம்[தொகு]
உடற்கல்வியின் நோக்கங்கள் உடலை ஆரோக்கியமாக வைப்பது, உள்ளத்தின் ஆற்றலை மேம்படுத்துவது, உணர்வுகளைக கட்டுப்படுத்துவது, சமுதாயத்தோடு இணைந்து வாழ வழி செய்வது ஆகியன ஆகும். இத்துடன் மனிதர்களின் ஆளுமைத் திறனையும் மேம்படுத்ததுகிறது.
குறிக்கோள்கள்[தொகு]
உடல் உறுப்புகளின் செயல்பாடு மேம்படுதல்[தொகு]
உடலியக்க செயல்பாடுகளின் மூலம் உடலுறுப்பு மண்டலங்களான சுவாச மண்டலம், இரத்தஓட்ட மண்டலம், ஜீரணமண்டலம், மற்றும் கழிவு மண்டலங்களின் செயல்பாடு மேம்படுகிறது
நரம்பு மற்றும் தசை இசைந்த செயல்பாடு மேம்படுதல்[தொகு]
உடலசைவு செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபடுவதன் மூலம் உடல் மற்றும் அறிவு ஒருங்கிணைந்த செயல்பாடுகள் மேம்படுகிறது
உணர்வு மேம்படுதல்[தொகு]
குழு விளையாட்டுகளில் ஈடுபடுதலின் மூலம் ஒற்றுமை, தலைமை பண்பு, தகவல் பரிமாற்றம், கீழ்ப்படிதல் போன்ற பண்புகள் மேம்படுகிறது. இதன் மூலம் நம் எதிர் கொள்ளும் சூழல்களில் உணர்வுகள் கையாளப்படுகிறது.
ஆளுமை மேம்படுதல்[தொகு]
உடலியக்க செயல்பாடுகளில் ஈடுபடுவதன் மூலம் மனிதர்களின் உடல், உள்ளம் மற்றும் உணர்வு சார்நத திறன்கள் மேம்படுகிறது. இதனால் அவர்களின் ஒட்டு மொத்த செயல்திறன் மேம்பட்டு ஆளுமைதிறன் வளர்கிறது. [1]
மேற்காேள்கள்[தொகு]
- ↑ உடற்கல்வி,யோகா மற்றும் உடல்நலக்கல்வி வளநூல் (ஆசிரியர்கல்வி பட்டப்பயிற்சி) தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம், சென்னை 600006