ஆய்லரின் முற்றொருமை
கணிதத்தில் ஆய்லரின் முற்றொருமை (Euler's identity) [n 1]
- எனும் சமன்பாடு ஆகும்.
இதில்:
- e என்பது ஆய்லர் மாறிலி; இயல் மடக்கையின் அடிமானம்,
- i என்பது கற்பனை அலகு; i2 = −1, and
- π என்பது ஒரு வட்டத்தின் சுற்றளவுக்கும் அதன் விட்டத்துக்குமான விகிதம்.
கணிதவியலாளர் ஆய்லரின் பெயரால் இம் முற்றொருமை ”ஆய்லரின் முற்றொருமை” என அழைக்கப்படுகிறது. இம் முற்றொருமை, ஆய்லரின் சமன்பாடு என்றும் அழைக்கப்படுகிறது.
விளக்கம்
[தொகு]சிக்கலெண் தளத்தில் வரையறுக்கப்படும் ஆய்லரின் வாய்ப்பாட்டின் சிறப்பு வகையாகவே ஆய்லரின் முற்றொருமை அமைகிறது.
- ஆய்லரின் வாய்ப்பாடு
x ஏதேனுமொரு மெய்யெண் எனில்:
இங்கு முக்கோணவியல் சார்புகளான sine , cosine இரண்டும் ரேடியனில் தரப்படுகின்றன.
x = π எனும்போது ஆய்லரின் வாய்ப்பாடு ஆய்லரின் முற்றொருமையாகிறது.
x = π என ஆய்லரின் வாய்ப்பாட்டில் பிரதியிட,
மேலும் என்பதால்,
- (ஆய்லரின் முற்றொருமை)
சிறப்புகள்
[தொகு]- அடிப்படைக் கணிதச் செயல்களான கூட்டல், பெருக்கல், அடுக்கேற்றம் ஆகிய மூன்று செயல்களும் இம் முற்றொருமையில் ஒவ்வொன்றும் ஒரேயொரு முறை காணப்படுகின்றன.
- ஐந்து அடிப்படைக் கணித மாறிலிகளை இணைக்கிறது[3]:
- கூட்டல் சமனியான எண் 0.
- பெருக்கல் சமனியான எண் 1.
- ஒரு வட்டத்தின் சுற்றளவுக்கும் விட்டத்துக்குமான விகிதமாக அமையும் π (π = 3.14159265...)
- இயற்மடக்கையின் அடிமானமான e (e = 2.718281828...).
- கற்பனை அலகு i
- கணித எழுத்தாளர் கான்ஸ்டன்ஸ் ரீட் (Constance Reid), ஆய்லரின் முற்றொருமையை “கணிதத்திலேயே மிக அதிகமாகப் புகழ்பெற்ற வாய்ப்பாடு” என்று கூறியுள்ளார்.[4]
- 1990 இல் தி மேத்தமெட்டிகல் இண்டெலிஜென்சர் (The Mathematical Intelligencer) நடத்திய வாக்கெடுப்பில் ஆய்லரின் முற்றொருமை, "கணிதத்தின் மிக அழகிய தேற்றம்" என்ற பெயர் பெற்றது.[5]
- பிசிக்கிஸ் வொர்ல்டு 2004 இல், வாசகர்களிடையே நடத்திய வாக்கெடுப்பில் மின்காந்தவியலின் மாக்சுவெல்லின் சமன்பாடுகள், ஆய்லரின் முற்றொருமை இரண்டும் சமமாக "எப்பொழுதும் மீப்பெரு சமன்பாடு" என்ற பட்டத்தைப் பெற்றன.[6]
பொதுமைப்படுத்தல்
[தொகு]எண் 1 இன் nஆம் மூலங்களின் கூடுதல் சுழி (n > 1) என்ற முற்றொருமையின் சிறப்புவகையாகவும் ஆய்லரின் முற்றொருமை உள்ளது:
இதில் n = 2 எனப் பதிலிட்டால் ஆய்லரின் முற்றொருமை கிடைக்கிறது:
n = 2 எனப் பதிலிட,
- (ஆய்லரின் முற்றொருமை)
வரலாறு
[தொகு]1748 இல் வெளியிடப்பட்ட ஆய்லரின் Introductio in analysin infinitorum என்ற அவரது புத்தகத்தில் இந்த முற்றொருமை காணப்பட்டதாகக் கூறப்பட்டது.[7] எனினும் அவர் இது குறித்து எதுவும் தெரிவிக்காததால் அம்முற்றொருமையைக் கண்டுபிடித்தது ஆய்லர்தானா என்பதும் கேள்விக்குரியதாகிறது.[8] (மேலும் ஆய்லர் தனது புத்தகத்தில் (Introductio) [9] குறிப்பிட்டது e, கொசைன் , சைன் ஆகிய மூன்றையும் சிக்கலெண் தளத்தில் தொடர்புபடுத்தும் ஆய்லரின் வாய்ப்பாடாகும். ரோஜர் கோட்சு என்ற ஆங்கிலக் கணிதவியலாளரும் இவ் வாய்ப்பாட்டினை அறிந்திருந்தார். ஆய்லர் இதனைத் தனது சக சுவிஸ் கணிதவியலாளர் ஜோகன் பெர்னௌலி வாயிலாக அறிந்திருக்கக் கூடும் என்ற கருத்தும் உள்ளது.[8])
குறிப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Dunham, 1999, p. xxiv.
- ↑ Stepanov, S.A. [originator] (7 February 2011). "Euler identity". Encyclopedia of Mathematics. அணுகப்பட்டது 18 February 2014.
- ↑ Paulos, p. 117.
- ↑ Reid, p. 155.
- ↑ Nahin, 2006, pp. 2–3 (poll published in the summer 1990 issue of the magazine).
- ↑ Crease, 2004.
- ↑ Conway and Guy, pp. 254–255.
- ↑ 8.0 8.1 Sandifer, p. 4.
- ↑ Euler, p. 147.
மூலங்கள்
[தொகு]- Conway, John Horton, and Guy, Richard (1996). The Book of Numbers (Springer, 1996). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-387-97993-9.
- Crease, Robert P., "The greatest equations ever", PhysicsWeb, October 2004 (registration required).
- Crease, Robert P. "Equations as icons," PhysicsWeb, March 2007 (registration required).
- Dunham, William (1999). Euler: The Master of Us All. Mathematical Association of America. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-88385-328-3.
- Derbyshire, J. Prime Obsession: Bernhard Riemann and the Greatest Unsolved Problem in Mathematics (New York: Penguin, 2004).
- Euler, Leonhard. Leonhardi Euleri opera omnia. 1, Opera mathematica. Volumen VIII, Leonhardi Euleri introductio in analysin infinitorum. Tomus primus (Leipzig: B. G. Teubneri, 1922).
- Kasner, E., and Newman, J., Mathematics and the Imagination (Simon & Schuster, 1940).
- Maor, Eli, e: The Story of a number (Princeton University Press, 1998). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-691-05854-7
- Nahin, Paul J., Dr. Euler's Fabulous Formula: Cures Many Mathematical Ills (Princeton University Press, 2006). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-691-11822-2
- Paulos, John Allen, Beyond Numeracy: An Uncommon Dictionary of Mathematics (Penguin Books, 1992). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-14-014574-5
- Reid, Constance, From Zero to Infinity (Thomas Crowell, 1955).
- Sandifer, C. Edward. Euler's Greatest Hits (Mathematical Association of America, 2007). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-88385-563-8