நீள் தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லோங் தீவு
Long Island
உள்ளூர் பெயர்: பௌமனோக்[1]
நீள்தீவு மற்றும் நியூயார்க் நகரத்தின் செய்மதி ஒளிப்படம்
புவியியல்
அமைவிடம்அத்திலாந்திக்கு பெருங்கடல்
ஆள்கூறுகள்40°48′N 73°18′W / 40.8°N 73.3°W / 40.8; -73.3
பரப்பளவு1,401 sq mi (3,630 km2)
நீளம்118 mi (190 km)
அகலம்23 mi (37 km)
உயர்ந்த புள்ளிஜேய்ன்சு குன்று
401 ft (122 m)
நிர்வாகம்
ஐக்கிய அமெரிக்கா
மாநிலம் New York
மக்கள்
மக்கள்தொகை7,686,912 (2012)
அடர்த்தி5,402.1 /sq mi (2,085.76 /km2)
இனக்குழுக்கள்54.7% வெள்ளையர், 20.4% கறுப்பர், 0.49% பழங்குடி அமெரிக்கர், 12.3% ஆசியர், 0.05% பசுபிக் தீவினர், 8.8% பிற இனத்தவர், 3.2% கலப்பினத்தவர்; 20.5% இசுப்பானிய அல்லது இலத்தீனிய கலப்பினர்

நீள் தீவு அல்லது லாங் தீவு (Long Island) ஐக்கிய அமெரிக்காவின் கிழக்கு மாநிலமான நியூயார்க் மாநிலத்திலுள்ள ஓர் தீவு ஆகும். நியூயார்க் துறைமுகத்திலிருந்து அத்திலாந்திக்குப் பெருங்கடலில் வடகிழக்காக நீண்டுள்ள இத்தீவில் நான்கு கவுன்ட்டிகள் அமைந்துள்ளன; இவை நியூயார்க் நகரத்தின் இரண்டு கவுன்ட்டிகளான கிங்சு,குயின்சும் (நியூ யார்க் நகரத்தின் மாவட்டங்களான புரூக்ளினும் குயின்சும்), பெரும்பாலும் புறநகர் பகுதிகளான நாசோ, சஃபோக் கவுன்ட்டிகளும் ஆகும். இந்த நான்கு கவுன்ட்டிகளுமே நியூயார்க் பெருநகரப் பகுதியின் அங்கங்களாகும்.[2] பொதுவாக "லாங் ஐலாண்டு" என்று குறிப்பிடும்போது நாசோ, சஃபோக் கவுன்ட்டிகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படுகின்றன. நீள் தீவின் வடக்கே நீள்தீவு கடற்குடா (லாங் ஐலாண்ட் சௌண்ட்) உள்ளது. இது கனெடிகட், றோட் தீவு மாநிலங்களிலிருந்து நீள்தீவை பிரிக்கிறது.

மேற்சான்றுகள்[தொகு]

  1. Richmond Hill Historic Society Tributary tribes
  2. About Long Island, LongIsland.com
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீள்_தீவு&oldid=1725957" இலிருந்து மீள்விக்கப்பட்டது