உள்ளடக்கத்துக்குச் செல்

ஆல்பா செண்டாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆல்பா செண்டாரி எ[1]/B[2]

ஆல்பா செண்டாரி எ மற்றும் ஆல்பா செண்டாரி பி
இயல்புகள்
விண்மீன் வகைG2 V[3][4]
U−B color index+0.23
B−V color index+0.69
இயல்புகள்
விண்மீன் வகைK1 V[3][4]
U−B color index+0.63
B−V color index+0.90
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)−21.6 கிமீ/செ
Proper motion (μ) RA: −3678.19 மிஆசெ/ஆண்டு
Dec.: 481.84 மிஆசெ/ஆண்டு
தனி ஒளி அளவு (MV)4.38 / 5.71
விவரங்கள்
ஆல்பா செண்டாரி எ
திணிவு1.100[5] M
ஆரம்1.227[5] R
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.30[6]
ஒளிர்வு1.519[5] L
வெப்பநிலை5790[5] கெ
Metallicity151%[5] சூரியனின் அளவு
சுழற்சி~22.5 ± 5.9 days
அகவை6 ± 1 பில்.ஆ
ஆல்பா செண்டாரி பி
திணிவு0.907[5] M
ஆரம்0.865[5] R
மேற்பரப்பு ஈர்ப்பு (மட g)4.37[6]
ஒளிர்வு0.500[5] L
வெப்பநிலை5260[5] K
Metallicity160%[5] சூரியனின் அளவு
சுழற்சி47 days

சம்லி wafan (hamdan haleem, Ayyash)


அல்பா சென்

ரோறி

(Alpha Centauri) என்பது சென்டோரஸ் விண்மீன் குழுமத்தில் உள்ள ஒரு விண்மீன் ஆகும். இது வானத்தில் 3வது பிரகாசமான விண்மீன். இது சூரியனிருந்து 4.37 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது, இதனால் இது சூரியக் குடும்பத்தின் மிக அருகில் உள்ள மற்றொரு விண்மீன் குடும்பம் ஆகும். இது வெறும் கண்களுக்கு ஒரே விண்மீன் போலத் தோன்றினாலும் உண்மையில் இது இரும விண்மீன் ஆகும். அதில் ஒன்று ஆல்பா செண்டாரி எ மற்றொன்று ஆல்பா செண்டாரி பி, இரண்டையும் சேர்த்து ஆல்பா செண்டாரி எபி என அழைப்பார்கள், ஆல்பா செண்டாரி எபி யின் தோற்ற ஒளிப்பொலிவெண் -0.27 ஆல்பா செண்டாரி எ சூரியனைப் போன்று 110% நிறையும் 151.9% ஒளிர்வு அளவையும் உடையது.

இதன் அருகிலேயே மூன்றாவது விண்மீன் புரோக்சிமா செண்ட்டாரி அல்லது ஆல்பா செண்டாரி சி. இது ஆல்பா செண்டாரி எபி யின் ஈர்ப்பு விசையால் கட்டுபடுத்தப்படுகிறது. இது சூரியனிருந்து 4.24 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது,இது ஆல்பா செண்டாரி எபி யை விட சூரியனுக்கு அருகில் இருந்தும் நம்மால் இதை வெறும் கண்களால் காண இயலாது.இது ஆல்பா செண்டாரி எபி யிருந்து 0.2 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.இது தெற்கு அடிவானத்தில் அமைத்துள்ளது


.

இயற்கை மற்றும் கூறுகள்

[தொகு]

ஆல்பா செண்டாரி என்ற பெயர், வானில் வெறும் கண்களுக்கு ஒன்றாக தெரியும் ஆல்பா செண்டாரி எபி யை குறிக்கிறது. புவியிலிருந்து பார்க்கும் போது ஆல்பா செண்டாரி எபி க்கு 2.2° கோண இடைவெளியில் புரோக்சிமா செண்ட்டாரி அமைந்துள்ளது.அமைப்பு ரீதியாக ஆல்பா செண்டாரி எ மற்றும் ஆல்பா செண்டாரி பி ஆகிய இரண்டும் இரும விண்மீன் என்ற போதிலும் புவியிலிருந்து பார்க்கும் போது புரோக்சிமா செண்ட்டாரி மற்றும் ஆல்பா செண்டாரி எபி இரட்டை விண்மீன் போல தோன்றும்.எனவே மொத்த ஆல்பா செண்டாரி குடும்பம் ஒரு மும்மடி விண்மீன் போல காணப்படுகிறது அதன் பெயர் ஆல்பா செண்டாரி எபி-சி.

ஆல்பா செண்டாரி எ, ஆல்பா செண்டாரி எபி என்ற இரட்டை விண்மீனில் முதன்மை விண்மீன் ஆகும்.இது சூரியனை விட சற்று அதிகமாக ஒளிர்வு அளவை கொண்டுள்ளது.இது மஞ்சள் நிறத்தில் காணப்படும்.இதன் விண்மீன் வகைப்பாடு G2 V.இதன் சுற்று வட்ட பாதையை வைத்து, இது 10% சூரியனை விட அதிக நிறை உடையது எனவும் 23% சூரியனை விட ஆரம் அதிகம் உடையது எனவும் கணிக்கப்பட்டுள்ளது. ஆல்பா செண்டாரி எ வின் பிரகாசத்தை மட்டும் தனியாக கணக்கில் கொண்டால், இது -0.01 ஒளிப்பொலிவெண் பெற்று வானில் நான்காவது பிரகாசமான விண்மீன் ஆகும்.

ஆல்பா செண்டாரி பி, ஆல்பா செண்டாரி எபி என்ற இரட்டை விண்மீனின் இரண்டாம் நிலை விண்மீன் ஆகும். இது சூரியனை விட சற்று சிறியதாகவும் குறைவான ஒளிர்வு அளவையும் கொண்டுள்ளது. இதன் விண்மீன் வகைப்பாடு K1 V. இதனால் இது ஆரஞ்சு நிறத்தில் காணப்படுகிறது. ஆல்பா செண்டாரி பி, சூரியனில் போல 90% நிறையும் 14% ஆரம் சிறியதாகவும் அமையும்.இது எக்சு-கதிர்களை வெளியிடுகிறது.

ஆல்பா செண்டாரி சி என்பது சூரிய மண்டலத்தின் சூரியனுக்கு மிக அருகாமையில் இருக்கும் விண்மீன். இது ஒரு சிறு நட்சத்திரம் ஆகும். இது பூமியிலிருந்து 4.2 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது. புரோக்சிமா செண்ட்டாரி செங்குறளி (red dwarf) விண்மீன் வகையைச் சேர்ந்தது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "LHS 50 – High proper-motion Star". Centre de Données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 2008-06-06.
  2. "LHS 51 – High proper-motion Star". Centre de Données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 2008-06-06.
  3. 3.0 3.1 Hoffleit+ (1991). "The Stars of Centaurus". Yale University Observatory. பார்க்கப்பட்ட நாள் 2009-03-10.
  4. 4.0 4.1 Datin, Kellie; Dewarf, LE.; Guinan, EF.; Carton, JM. (January 2009). "FUSE Observations of alpha Centauri B". American Astronomical Society (American Astronomical Society) 213: 200. Bibcode: 2009AAS...21340609D. 
  5. 5.00 5.01 5.02 5.03 5.04 5.05 5.06 5.07 5.08 5.09 Kervella, Pierre; Thevenin, Frederic (March 15, 2003). "A Family Portrait of the Alpha Centauri System". ESO. Archived from the original on 2008-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-06-06.
  6. 6.0 6.1 Gilli G.; Israelian G.; Ecuvillon A.; Santos NC.; Mayor M. (2006). "Abundances of Refractory Elements in the Atmospheres of Stars with Extrasolar Planets". Astronomy and Astrophysics 449 (2): 723–36. doi:10.1051/0004-6361:20053850. libcode 2005astro.ph.12219G. Bibcode: 2006A&A...449..723G. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆல்பா_செண்டாரி&oldid=3664267" இலிருந்து மீள்விக்கப்பட்டது