கலீல் அவ்ன் மௌலானா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலீல் அவ்ன் மெளலானா
பிறப்புகலீல் அவ்ன் மெளலானா
கல்பொக்கை,வெலிகம, இலங்கை
இருப்பிடம்இலங்கை
சமயம்இஸ்லாம்

கவிஞர் கலீல் அவ்ன் மெளலானா தென் மாகாணம் மாத்தறை வெலிகமை கல்பொக்கையைச் சேர்ந்தவர். பன்மொழிப் பாண்டித்தியம் பெற்றவர். பாரம்பரிய இலக்கிய மரபான மரபுக் கவிதையிலேயே தனது செய்யுள்களை யாப்பமைதி பிறழாமல் எழுதிவருபவர். 1964 இல் இவரது முதற் படைப்பு (இறைவழி செய்யித் முகம்மது மெளலானா)வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை இலக்கியப் பரப்பினர் 1967 இல் நடத்திய கவியரங்கில் இவரது கவிதை சிலாகித்துப் பேசப்பட்டிருந்தது. அதன் பின்னர் அவரது கவிதை நூலுருவில் வெளியிடப்பட்டுள்ளது. பல உரைநடை நூல்களை இலங்கை, இந்தியா நாடுகளில் வெளியிட்டுள்ளார். அவரது தந்தை யாசின் மெளலானாவின் 'காமூஸ்' எனும் அரபு - தமிழ் அகராதியை இவர் தொகுத்து வெளியிட்டுள்ளார்.

வெளியிட்ட கவிதை மற்றும் பிற நூல்கள்[தொகு]

  • குறிஞ்சிச் சுவை (தமிழ் இலக்கிய நூல் )
  • காமூஸ் அரபு-தமிழ் அகராதி
  • மகானந்தாலங்கார மாலை (சித்திரக்கவி)
  • அருள்மொழிக் கோவை (தமிழ் ஆங்கிலம்)
  • பரமார்த்தத் தெளிவு
  • நாயகர் பன்னிரு பாடல் (கவிதை)
  • ஈழ வள நாட்டில் பயிர் பெருக்க வாரீர்!
  • தாகிபிரபம்
  • மனிதா (அமுத மொழிகள் தொகுப்பு)
  • பதுருசஹாபாக்கள் மவுலிது (தமிழாக்கம்)
  • பர்ஜன்ஸி மவுலிது (தமிழாக்கம்)
  • யாசீன் நாயகம் (ரலி) வரலாறு
  • குத்புகள் திலகம் யாசீன் மௌலானா (ரலி)-கவிதை
  • பேரின்பப்பாதை (ஞான அறிமுக நூல்)
  • துஹ்பத்துல் முர்ஸலா (அரபுமூலம் தமிழ்மொழிபெயர்ப்பு)
  • ரிஸாலத்துல் கௌதிய்யா (அரபுமூலம் தமிழ்மொழிபெயர்ப்பு)
  • கஸீதத்துல் அஹ்மதிய்யா (அரபு - தமிழ் வாரிதாத்)
  • இறையருட்பா (கவிதை)
  • அற்புத அகிலநாதர் (கவிதை)
  • மருள்நீக்கிய மாநபி
  • ஒளியை மறைக்கத் துணியும் தூசி
  • இறைவலிய் செய்யிது முஹம்மது மௌலானா (கவிதை)
  • உண்மை விளக்கம்

வெளிவரவிருக்கும் நூல்கள்

திருக்குர்ஆன் விரிவுரை, செய்யிதுனா உமர் (ரலி) புராணம் (காவியம்)

"https://ta.wikipedia.org/w/index.php?title=கலீல்_அவ்ன்_மௌலானா&oldid=3399798" இலிருந்து மீள்விக்கப்பட்டது