பேச்சு:இராச நாகம்
கார்த்திக், அரசநாகத்தின் தோலில் உள்ள செதிள்களின் அமைப்பு; செதிள்கள் வகைப்பாட்டியல் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும் என்கிறீர்கள், ஆனால் என்ன சிறப்பு, எப்படி முக்கியத்துவம் வாய்ந்தவை என்று சற்று விளக்கிக் கூற முடியுமா? பயனுடையதாக இருக்குமல்லவா? நன்றி.--செல்வா 12:55, 7 ஏப்ரல் 2009 (UTC)
- சரி செல்வா--கார்த்திக் 14:58, 7 ஏப்ரல் 2009 (UTC)
இராச நாகமும் கருநாகமும் ஒன்றுதானா? தலைப்பு மாற்றப்பட்டுள்ளதே.. --அராபத்* عرفات 14:56, 18 ஏப்ரல் 2011 (UTC)
- ஆம். timesofindia கட்டுரையை ஆதாரமாகக் கொண்டு அவ்வாறு செய்துதேன். (காண்க: What would you call global warming in Tami? (ஆங்கிலம்) காண்க: பத்தி:3, வரி:4-6.) waterfalls "நீர்வீழ்ச்சி" ஆனது போல, kingcobra "இராச நாகம்" ஆனது. தகுந்த தமிழ் சொல் இருக்கும் போது, ஏன் ஆங்கிலத்திலிருந்து வர்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்க்கப்பட்டதை (literal translation) பயண்படுத்த வேண்டும்? (பி.கு: waterfalls - அருவி). --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 20:12, 22 மே 2011 (UTC)
நாகம் என்ற பொதுவான சொல்லை இங்கு வழிமாற்றி கருநாகம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நாகப் பாம்பு என்று வேறொரு கட்டுரையும் உள்ளது. இந்நிலையில் நாகம் என்று பொதுவாகக் கூறப்படின், அது நாகப் பாம்பு என்பதைத்தான் குறிக்க வேண்டுமேயன்றி கருநாகம் என்பதையன்று எனக் கருதுகிறேன். என் கருத்து உடன்பாடாயிருப்பின் மேற்படி வழிமாற்றை மாற்றி நாகப் பாம்பு எனும் கட்டுரைக்கு வழிமாறும் படி செய்ய வேண்டுகிறேன்.--பாஹிம் 13:25, 12 சூன் 2011 (UTC)
- பாம்பு படமெடுக்கும் போது, அதன் பெயர் நாகம் என்கிறது செந்தமிழ். நாகப்பாம்பு அதிகம் சீறுவதால்/படமெடுப்பதால் அதற்கு நாகப்பாம்பு(Naja naja) இங்கு, இராஜ நாகம்/அரசநாகம் / Ophiophagus hannahஎனப்படுவது, கரும்பாம்பு. இப்பாம்பு, பாம்பையே உண்ணும் அளவு சீற்றம் உடையதாலும், மற்ற பாம்புகளை விட அதிக உயரம் படமெடுப்பதாலும் கருநாகம் என்பதே மிகச்சரி என்பது எனது எண்ணம். --≈ த♥உழவன் ( கூறுக ) 09:55, 27 சூலை 2013 (UTC)
கருநாகம் என்று அழைக்கப்படுவது Naja melanoleuca என்ற நாக இனம். எனவே இக்கட்டுரைக்கு அரச நாகம் என்ற தலைப்பே சரியாக இருக்கும் என்பதால் நகர்த்துகிறேன். நன்றி. Varunkumar19 (பேச்சு) 11:29, 27 பெப்ரவரி 2019 (UTC)
பயனர்:Gowtham Sampath, நாக குடும்பத்தில் பல இனங்கள் கருமை நிறமுடையவை. (எ-டு) Hemachatus haemachatus எனவே கருநாகம் என்பது அவை அனைத்தையும் குறிக்கும் பொதுப்பெயர் போல் ஆகிவிடும். Varunkumar19 (பேச்சு) 11:50, 27 பெப்ரவரி 2019 (UTC)
@பயனர்:Gowtham Sampath, அரசன் என்ற தூய தமிழ்ச்சொல் இருக்கும் போது வடமொழிச் சொல்லான இராசா என்று பெயரிடுவது முறையன்று. எனவே 'அரச நாகம் என்ற தலைப்பிற்கு இக்கட்டுரையை நகர்த்துமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. Varunkumar19 (பேச்சு) 14:19, 28 பெப்ரவரி 2019 (UTC)