பேச்சு:விமலாதித்த மாமல்லன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Untitled[தொகு]

விமலாதித்த மாமல்லனின் வலைத்தளம் http://www.maamallan.com/

இரவி, விமலாதித்த மாமல்லன் தமிழின் மிக முக்கியமான சிறுகதை ஆசிரியர்களில் ஒருவர். மொழியை வாள் வீச்சின் நுட்பத்துடன் பயன்படுத்த வேண்டும் என்பர். அதற்கு எடுத்துக்காட்டாக இவரது மொழியாளுமையைக் குறிப்பிடலாம். இவரது குறிப்பிடத்தக்க சிறுகதைகளாக முடவன் வளர்த்த வெள்ளைப் புறா மற்றும் சிறுமி கொண்டுவந்த மலர் ஆகியனவற்றைக் கூறலாம். மேலும் தமிழின் மிக முக்கிய சிறுகதைகள் பற்றிய விமர்சன நூல் புனைவு எனும் புதிர் எனும் பெயரில் தொடராக தமிழ் இந்து திசை நாளிதழில் வெளியானது.[1] எனவே குறிப்பிடத்தக்கமை எனும் வார்ப்புருவினை நீக்கப் பரிந்துரைக்கிறேன். --இரா. பாலாபேச்சு 13:59, 6 சூன் 2022 (UTC)[பதிலளி]

பாலா, புனைவு எனும் புதிர் தொடர் தமிழ் இந்து திசை நாளிதழில் வெளியானது போல் அவரது குறிப்பிடத்தக்கமையைத் தெளிவாகச் சுட்டும் பிற தரவுகளைச் சேர்த்து கட்டுரையை மேம்படுத்த வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 18:23, 6 சூன் 2022 (UTC)[பதிலளி]
தன்னைப் பற்றிய கட்டுரையில் ஒரு வார்ப்புருவை இணைத்ததற்கு இப்படி bullying செய்கிறவர் தான் தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளரா? --இரவி (பேச்சு) 19:40, 6 சூன் 2022 (UTC)[பதிலளி]
இது தவறான போக்கு , தனி மனிதத் தாக்குதலை யார் செய்தாலும் தவறே . உங்களுக்கும் அவருக்கும் ஏதும் முன் பகை உண்டெனில் உங்களின் கருத்துக்களை ஏற்பதில் சிக்கல் வரும் . அதே நேரம், விமர்சன இடத்தில் இந்த விஷயத்தையும் நீங்கள் பதிவிடலாமே ? Tamilwriters (பேச்சு) 14:48, 19 சூன் 2022 (UTC)[பதிலளி]
இரவி, விகடன் தடம் இதழில் உலக சினிமா தொடர்பாக எழுதியதை மேற்கோளில் இணைத்துள்ளேன். கட்டுரை தன்னளவில் முழுமையாகவே உள்ளது. இதில் மேலதிகத் தரவுகளை இணைப்பது வணிக நோக்கில் இணைப்பதாகிவிடும். 40 வருடங்களாக தமிழிலக்கியத்தில் பங்காற்றி வருகிறார். கசடதபற, மீட்சி, கவனம் ஆகிய பழைய இதழ்களை மின்னூலாக்கி பரவலாக்கியிருக்கிறார். கிட்டத்தட்ட 100 நூல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே கொடுத்துள்ள தரவுகள் எழுத்தாளரின் குறிபிடத்தக்கமையை உறுதிபடுத்த போதுமானவை என எண்ணுகிறேன். நன்றி. --இரா. பாலாபேச்சு 00:26, 7 சூன் 2022 (UTC)[பதிலளி]
எத்தனை நூல்கள் என்பதை வைத்து ஒருவர் குறிப்பிட்டத்தக்கமையை அளக்க முடியுமா? கட்டுரையில் பட்டியல் இடப்பட்டுள்ள சில நூல்களின் தலைப்புகள் அவை இலக்கிய விமர்சன நூல்கள் தானா இல்லை தனிமனிதத் தாக்குதல் வாந்திகளா என்று எண்ண வைக்கின்றன. எடுத்துக்காட்டுக்கு,
  1. ஜெயமோகனின் மாடன் மோட்சம் சிகரமா தகரமா
  2. ஜெயமோகனின் படுகை
  3. ஜெயமோகன் குழுமத்தில் விட்ட குமிழிகள்
  4. ஜெயமோகன் என்கிற பிறவி மொக்கை
  5. ஜெயமோகனின் கோத்திரம் என்ன?
  6. அயோக்கியத்தனமே ஜெயமோகனின் அறம்
  7. பின்தொடரும் நிழலின் குரலின் முன்னால் சென்ற உருவம்

ஆகிய நூல்களைப் பாருங்கள்.

இதே போல, ஆண்டு வாரியாக டுவிட்டர் பதிவுத் தொகுப்புகள் மட்டும் சில நூல்கள் என்று இடம்பெற்றுள்ளன.

  1. என் குரல்: 2010 ட்விட்டுகள்
  2. என் குரல்: 2011 ட்விட்டுகள்
  3. என் குரல்: 2012 ட்விட்டுகள்
  4. என் குரல்: 2013 ட்விட்டுகள்
  5. என் குரல்: 2014 ட்விட்டுகள்
  6. என் குரல்: 2015 ட்விட்டுகள்
  7. என் குரல்: 2016 ட்விட்டுகள்
  8. என் குரல்: 2017 ட்விட்டுகள்
  9. என் குரல்: 2018 ட்விட்டுகள்
  10. என் குரல்: 2019 ட்விட்டுகள்

ஆகவே, நூல்கள் எண்ணிக்கை அடிப்படையில் ஒருவர் குறிப்பிடத்தக்கமையை அளக்க முடியுமா என்பது விவாதத்திற்கு உரியது. --இரவி (பேச்சு) 04:10, 7 சூன் 2022 (UTC)[பதிலளி]

எழுத்தாளர் எழுதிய மொத்த நூல்களைக் குறிப்பிடுவதில் தவறேதும் இருப்பதாகத் தெரியவில்லை. ஜெயமோகன் மீதான தனிநபர் தாக்குதலோ அல்லது அவரது புனைவின் மீதான விமர்சனமா என்பது நமக்குக் கவலையில்லை. நூல்களின் எண்ணிக்கை என்பது எழுத்தாளரின் செயல்பாட்டுத் தீவிரத்தினை உணர்த்துவது. மேலும் ஓர் எழுத்தாளர் உங்களை bullying செய்வதால் நாம் என்ன செய்ய இயலும்? அவரது எழுத்துலக இலக்கியச் செயல்பாட்டினைக் கருத்தில் கொண்டே இக்கட்டுரை தொகுக்கப்பட்டுள்ளது. --இரா. பாலாபேச்சு 13:11, 8 சூன் 2022 (UTC)[பதிலளி]
எத்தனைப் புத்தகங்கள் எழுதி இருக்கிறார் என்பதைக் குறிப்பிடலாம். ஆனால், அதை வைத்து மட்டும் ஒருவரது குறிப்பிடத்தக்கமையை நிறுவ முடியாது என்பது தான் நான் சொல்ல வருவது. ஒரு எழுத்தாளரின் இலக்கியப் பெறுமதி கருதி தான் அவரது குறிப்பிடத்தக்கமையை அளவிட முடியுமே தவிர, அவர் கண்டவர்களை எல்லாம் விழுந்து புரண்டி வாந்தி எடுத்து வைப்பதை எல்லாம் நூல் என்று மதிப்பிட்டு அதனைக் குறிப்பிடத்தக்க இலக்கியப் பங்களிப்பாகக் கருத முடியாது. விக்கிப்பீடியாவுக்கு வெளியே நடைபெறும் bullyingஐ என்னால் எதிர்கொள்ள முடியும். அது குறித்து யாருடைய உதவியையும் கோரவில்லை. ஆனால், தன்னைப் பற்றிய விக்கிப்பீடியா கட்டுரையில் நிகழும் மாற்றங்களை உன்னிப்பாகக் கவனித்து bullying செய்வதால், அவருக்கு இந்தக் கட்டுரையின் வடிவத்தில் conflict of interest இருக்கிறது என்றே கருத வேண்டியுள்ளது. இந்தப் பக்கத்தில் நிகழ்ந்துள்ள ஏராளமான அடையாளம் காட்டாத தொகுப்புகளில் நல முரண் உள்ளதா என்பதும் ஆய்வுக்குரியது. எனவே, இக்கட்டுரையை அனைத்து விக்கிக் கொள்கைகளையும் கவனத்தில் கொண்டு சீர் செய்ய வேண்டியுள்ளது. நன்றி. --இரவி (பேச்சு) 05:07, 15 சூன் 2022 (UTC)[பதிலளி]
குறிப்பிடத்தக்கமையை நிறுவும் பொருட்டு தமிழ்த்திசை, கீற்று, காலச்சுவடு, எஸ். ராமகிருஷ்ணன் ஆகிய பக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளது. மேலதிகத் தகவல்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் பொருட்டு அவற்றில் தேவையெனில் சான்று தேவை என்பதை இணைக்கக்கோருகிறேன். அதன் அடிப்படையில் குறிப்பிடத்தக்கமை எனும் வார்ப்புருவை மீளமை செய்கிறேன். --இரா. பாலாபேச்சு 07:50, 15 செப்டம்பர் 2022 (UTC)
ஒரே  ஒரு புத்தகத்தால் உலகத்தை மாற்றி குறிப்பிடத்தக்க  எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அதேநேரம் , குறிப்பிடத்தக்கமைக்கான அளவுகோலை நிருவாமல் , இது தவறு என்று சொல்வதில் நியாயம் இருப்பதாகத்  தெரியவில்லை. 2603:6080:3600:8900:8517:D36:4E7E:E5AE 14:46, 19 சூன் 2022 (UTC)[பதிலளி]

விமர்சனம்[தொகு]

ஒரு எழுத்தாளரைப் பற்றிய பார்வை என்பது நிறை, குறை இரண்டும் சேர்ந்ததாக நடுநிலையாக முன்வைக்க வேண்டும். இப்போது ஒரு தலைபட்சமான பாராட்டுரைகள் மட்டுமே தொகுக்கப்பட்டுள்ளன.--இரவி (பேச்சு) 17:56, 7 சூன் 2022 (UTC)[பதிலளி]

எழுத்தாளரைப் பற்றிய குறைகள் எதுவும் பொதுவெளியில் இல்லாததால் அவற்றைக் கட்டுரையில் சேர்க்க இயலவில்லை. வரும்காலத்தில் இக்கட்டுரையை மேம்படுத்தும் நோக்கில் யாரேனும் சேர்க்கக்கூடும். அதுவரை உங்களின் கருத்தினைக் கவனத்தில் கொண்டு விமரிசனம் என்பதை பாராட்டுகள் என மாற்றியுள்ளேன்.--இரா. பாலாபேச்சு 07:46, 15 செப்டம்பர் 2022 (UTC)
விமலாதித்த மாமல்லன் என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


குறிப்பிடத்தக்கமை[தொகு]

விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை, விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கவர் ~AntanO4task (பேச்சு) 08:04, 15 செப்டம்பர் 2022 (UTC)

@AntanO: மேலே உள்ள உரையாடலின்படி குறிப்பிடத்தக்கமைக்கான செய்திகள் சேர்க்கப்பட்டதாக நினைத்தேன். ஆனால் இப்பக்கம் நீக்கப்பட்டதை காண்கிறேன். எந்த வகைத் தகவல்கள் வேண்டும் என்றால் சேகரிக்க முயல்கிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 08:09, 26 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]