உள்ளடக்கத்துக்குச் செல்

இயேசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பக்கத்தை 'HistoryHistoryபடிமம்:Jesus' கொண்டு பிரதியீடு செய்தல்
சி Dilaittan (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 627954 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Person
History[[History]][[படிமம்:Jesus]]
|name=நாசரேத்தின் இயேசு<br />Jesus of Nazareth
|image=Christus Ravenna Mosaic.jpg
|alt=
|caption=[[இத்தாலி]]யில் ராவென்னா என்ற இடத்தில் உள்ள பசிலிக்கா தேவாலயத்தில் உள்ள இயேசு கிறித்துவின் 6-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வரைபடம்.
|birth_date=[[கிமு]] 4<ref name="Sanders"/>
|birth_place=[[பெத்தலகேம்]], [[ரோமப் பேரரசு]]; [[நாசரேத்து]], கலீலி<ref>"Our conclusion must be that Jesus came from Nazareth." Theissen, Gerd; and Merz, Annette. ''The historical Jesus: A comprehensive guide''. Minneapolis: Fortress Press. 1998. Tr from German (1996 edition). p. 165. ISBN 978-0-8006-3123-9</ref>
|death_place=கால்வரி, ஜுடேயா, ரோமப் பேரரசு
|death_date=[[கிபி]] 30<ref name="Sanders"/>
|death_cause=சிலுவையில் அறையப்பட்டார்
|resting_place=
|ethnicity=[[யூதர்]]
}}
'''இயேசு''' (ஏசு, ''Jesus'', [[கிமு]] 4 – [[கிபி]] 30<ref name="Sanders">Sanders (1993).p.11, p 249.</ref>) [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவ]] மதத்தின் காரணரும், மைய நபரும் ஆவார். இவர் ''இயேசு கிறிஸ்து'', ''கிறிஸ்து இயேசு'', ''நாசரேத்தூர் இயேசு'' மற்றும் ''நசரேயனாகிய இயேசு'' என்ற பெயர்களிலெல்லாம் அழைக்கப்படுகிறார். [[இஸ்லாம்]] மற்றும் [[பஹாய்]] போன்ற சமயங்களிலும் இவர் ஒரு முக்கியமான [[இறைத்தூதர்|இறைத்தூதராகக்]] கருதப்படுகிறார். இயேசு பற்றிய தகவல்கள் புனித விவிலியத்தின் நான்கு [[நற்செய்திகள்|நற்செய்திகளில்]] குறிப்பிடப்பட்டுள்ளது. கிறிஸ்தவர்கள் இயேசுவை கடவுளின் மகன் என்றும், [[விவிலியம்|விவிலியத்தின்]] பழைய ஏற்பாட்டில் முன்னுரைக்கப்பட்ட மெசியா (இரட்சகர்) என்றும் விசுவாசிக்கின்றனர். மேலும், [[சிலுவை|சிலுவையில்]] மரித்த இயேசு, மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததாகவும், அவர் மூலமாக தாங்கள் பாவத்திலிருந்து இரட்சிக்கப்பட முடியும் என்றும் நம்புகின்றனர்.

இஸ்லாமிய மதத்தவரும் இவரை கடவுள் அனுப்பிய முக்கியமான [[இறைத்தூதர்|இறைத்தூதர்களில்]] ஒருவர் என்றும் இறையடியார் என்றும் நம்புகின்றனர். ஆனால் இயேசு "கடவுளின் மகன்" என்ற கிறிஸ்தவர்களின் கருத்திலிருந்து இது மாறுபட்டதாகும்.


வரலாற்று ஆய்வாளரின் கருத்துப்படி இயேசு [[கிமு 1வது ஆயிரவாண்டு|கி.மு. 8–2]] தொடக்கம் [[கிபி 1வது ஆயிரவாண்டு|கி.பி. 29–36]] வரை பூமியில் வாழ்ந்ததாகக் கருதுகின்றனர். [[அரமேய மொழி]], இயேசுவின் தாய்மொழியாகக் காருதப்படுகிறது.

== வாழ்க்கை வரலாறு ==
இயேசுவின் வாழ்க்கை வரலாற்று [[பரிசுத்த வேதாகமம்|பரிசுத்த வேதாகமத்தின்]] நான்கு நற்செய்தி நூல்களில் எழுதப்பட்டுள்ளது. இப்பகுதி விவிலியத்தின் படியான இயேசுவின் வாழ்க்கையை விளக்கும்.

=== வாழ்கை சுருக்கம் ===
# இயேசுவின் பிறப்பு முன்னறிவிக்கப்படுகிறது.
# இயேசு கன்னியிடமிருந்து, ஒரு மாட்டுத்தொழுவத்தில் பிறந்தார். பிறப்பில் இயேசு யூதாராயிருந்தார்.
# சிறுவயதிலேயே ஞானம் மிகுந்தவராக காணப்பட்டார். அவர் பெற்றோருக்கு பணிந்திருந்தார்.
# வயது வந்தவுடன் யோர்தான் ஆற்றில் அருளப்பரிடம் (யோவான்) ஞானஸ்நானம் பெற்றார்.பின் பாலைவனம் சென்று 40 நாள் விரதமிருந்தார். இதன் போது அலகை (சாத்தான்) அவரை சோதித்தது. இதில் இயேசு வென்றார்.
# பின்னர் இயேசு மக்களுக்குப் போதிக்க தொடங்கினார். இயேசு உவமைகள் மூலம் பேசினார். பல புதுமைகளைச் செய்தார்.
# யூதமதத் தலைவர்கள் இயேசுமீது பொறாமை கொண்டு அவரைக் கொலை செய்ய வகை தேடினர். பல சூழ்ச்சிகளைச் செய்து தோல்விகண்டனர். மக்கள் இயேசுவோடு இருந்தபடியால் கைது செய்யப் பயந்தனர்.
# இயேசுவின் 12 சீடரில் (அப்போஸ்தலர்) ஒருவரான யூதாஸ் இஸ்காரியோத்து யூதமத தலைவரின் சூழ்ச்சிப் பிடியில் சிக்கி இயேசுவை 30 வெள்ளி காசுகளுக்குக் காட்டிக் கொடுக்க முன்வருகின்றான்.
# இயேசு கடைசி இராபோசனத்தை 12 சீடருடன் (யூதாஸ் உட்பட) உண்கிறார். தமது சீடரின் கால்களை கழுவி "தாழ்மையாக இருக்க வேண்டும்" என்பதை எடுத்து காட்டுகிறார்.
# பின்னிரவில் கொத்சமனி தோட்டத்தில் செபம் செய்து கொண்டிருக்கும் போது யூதாஸ் யூதமத தலைவருடனும் படைத்தலைவருடனும் வந்து இயேசுவை முத்தமிட்டுக் காட்டிக் கொடுக்கிறான்.
# யூதர் அப்போது யூதாவின் ஆளுனரான உரோமனாகிய பொந்தியு பிலாத்து முன்னால் கொண்டு சென்றார்கள். அவன், இயேசு குற்றமற்றவர் என கண்டு விடுவிக்க முயன்றும் யூதருக்கும், அரசுக்கும் பயந்து இயேசுவை சிலுவையில் அறையக் கட்டளையிட்டான்.
# இயேசு சிலுவையில் அறையப்பட்டார். மூன்று மணித்தியாலம் சிலுவையில் தொங்கி உயிர்விட்டார். மூன்று நாட்கள் கழித்து மரணத்திலிருந்து எழுந்தார். சீடர்களுக்கு தோன்றினார்.
# நற்செய்தியை உலகெங்கும் பரப்பும் படி தம் சீடருக்கு கூறிவிட்டு விண்ணகம் சென்றார்.

=== வம்சமும் உறவுகளும் ===
[[படிமம்:Christ pantocrator daphne1090-1100.jpg|thumb|200px|left|<center>இயேசு உருவப்படம் கலாச்சாரங்களுக்கு ஏற்றபடி மாற்றி வரையப்படுகிறது</center>]]
இயேசுவின் தாயாரான மரியாளின் கணவர் யோசேப்பு என்பவர் இயேசுவின் வளர்ப்புத் தந்தை ஆவார். விவிலியத்தில், (மத்தேயு 1:2-16; லூக்கா 3:23-38). இவை இரண்டின் படியும் இயேசு ஆபிரகாம் மற்றும் தாவிது அரசன் வழி வருபராவார். இயேசுவின் வளர்ப்பு தந்தையான யொசேப்பு பற்றி இயேசுவின் குழந்தை பருவத்துக்கு பின்னர் குறிப்புகள் எதுவும் காணப்படவில்லை. இவர் இயேசு பகிரங்க வாழ்க்கையை ஆரம்பிக்க முன்னதாக இறந்திருக்க கூடும் என ஊகிக்கப்படுகிறது. இது இயேசு சிலுவையில் தொங்கும் போது தனது தாயைக் கவனித்துக்கொள்ளுமாறு அவரது விருப்பத்துக்குரிய சீடருக்குப் பணித்ததிலிருந்து தெளிவாகிறது (யோவான் 19:25-27).

விவிலியத்தில், (மத்தேயு 13:55–56 & மாற்கு 6:3) யாக்கோபு, யோசே, சீமோன், யூதா என்பவர்கள் இயேசுவின் சகோதரர் என குறிப்பிடப்பட்டிருந்தபோதும் அவர்கள் யோசேப்புக்கும் மரியாளுக்கும் பிறந்தவர்களா அல்லது சகோதரர்கள் முறை கொண்டவர்களா என்பது குறிப்பிடப்படவில்லை. மேலும் முதலாம் நூற்றாண்டின் யூத வரலாற்று ஆசிரியரான யோசேபஸ் ([http://en.wikipedia.org/wiki/Josephus Josephus]) என்பவரும் யுதாவை இயேசு கிறிஸ்துவின் சகோதரர் என குறிப்பிடுகிறார் [[#உசாத்துணை|<sup>1</sup>]]. மேலும் புனித பவுல் கலாத்தியருக்கு எழுதிய நிருபத்தில் கர்த்தருடைய சகோதரனாகிய யாக்கோபு (காலத்தியர் 1:19) என குறிப்பிடுகிறார். மறுபுறம் ''adelphos'' என்ற பதமே விவிலியத்தில் சகோதரன் என பெயர்க்கப்பட்டுள்ளது. இது ஒரு தாய் வழிவராச் சகோதரரையும் குறிக்கலாம். மேலும், அக்காலத்தில் ஒரே நம்பிக்கைக்குள் ஒன்றுபட்டு இருந்தவர்களையும் "சகோதரர்கள்" என்று அழைப்பது வழமையாயிருந்தது. ஆகவே விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் மரியாளுக்கு பிறந்தவர்கள் இல்லை; மரியாள் கன்னியாகவே வாழ்ந்தார் எனவும் கொள்ளக்கூடியதாயுள்ளது. இதுவே [[கத்தோலிக்கம்|கத்தோலிக்க]] மற்றும் சில திருச்சபைகளின் வாதமும் போதனையுமாகும்.

புதிய ஏற்பாட்டில் யோவானின் தாயாகிய எலிசபேத் மரியாளின் உறவினர் எனக் கூறப்பட்டுள்ளது. எனினும் உறவு முறை குறிப்பிடப்படவில்லை.

=== இயேசுவின் பிறப்பு ===
[[படிமம்:Gerard_van_Honthorst_002.jpg|thumbnail|250px|left|<center>இயேசுவின் பிறப்பு</center>]]
[[மத்தேயு நற்செய்தி|மத்தேயு]] [[லூக்கா நற்செய்தி|லூக்கா]] நற்செய்திகளில் கூறியுள்ளபடி இயேசு யூதேயாவிலுள்ள பெதலகேமில் கன்னிமரியிடமிருந்து பரிசுத்த ஆவியினால் பிறந்தார். லூக்கா நற்செய்தியின்படி [[கபிரியேல் தேவதூதர்]] மரியாளுக்கு இயேசுவைப் [[மரியாள் (இயேசுவின் தாய்)|மரியாள்]] பெறுவாள் என்ற நற்செதியை அறிவித்தார். (லூக்கா1:26–38) கத்தோலிக்கரால் இந்நிகழ்வு மங்கள வார்த்தையுரைப்பு என நினைவு கூறப்படுகிறது. யோசேப்பும் மரியாளும் அப்போது யூதேயாவை ஆண்ட அகோஸ்த்து இராயரின் கட்டளையிடப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் தங்களைப் பதிவு செய்யும் நோக்கில் யோசேப்பின் சொந்த உரான பெத்லகேமுக்கு சென்றபோது மரியாள் பிரசவ வலி கொண்டு இயேசுவை ஒரு மாட்டுகொட்டிலில் பெற்றார்.

இயேசுவின் பிறப்பு முதலாவதாக இடையர்களுக்கு தேவதூதரால் அறிவிக்கப்பட்டு அவர்கள் வந்து இயேசுவைப் பணிந்தார்கள். மேலும் இயேசுவின் பிறப்பின் போது ஒரு அதிசய விண்மீன் தோன்றியது. இதனை பார்த்த ஞானிகள் யூதரின் அரசன் பிறந்துள்ளார் என்று அறிந்து பெத்லகேம் வந்து இயேசுவை கண்டு பணிந்தார்கள். பல பரிசுபொருட்களையும் இயேசுவுக்கு கொடுத்தனர். மேலும் அப்போது யூதாவின் ஆளுனரான ஏரோது மன்னன் யூதரின் அரசன் பிறந்துள்ளார் என அறிந்து அப்பிரதேசதிலிருந்த 2 வயதுக்கு குறைவான சகல குழந்தைகளையும் கொலை செய்வித்தான். எனினும் முன்னரே தேவதூதரால் எச்சரிக்கப்பட்ட யோச்சேப்பு மரியாளையும் இயேசுவையும் கூட்டிக்கொண்டு [[எகிப்து]]க்கு தப்பிச் சென்றார். ஏரோது மரித்த பின்னர் யூதா நாட்டுக்கு திரும்பி [[நாசரேத்து]] என்னுன் ஊரில் வசித்தனர்.

இயேசுவின் குழந்தைப் பருவத்துக்கும் இளமை பருவத்துக்குமிடையே இயேசு 12 வயதில் ஆலயத்துக்கு சென்ற நிகழ்வுமட்டுமே விவிலியதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இடைப்பட்ட காலதில் இயேசு என்ன செய்தார் என்பதனை விவிலியத்தில் சேர்க்கப்படாத நற்செய்தி நூல்கள் மூலமே அறியலாம்.

=== திருமுழுக்கும் சோதனையும் ===
[[படிமம்:Ary_Scheffer_-_The_Temptation_of_Christ_%281854%29.jpg |thumbnail|250px|right|<center>இயேசு அலகையால் சோதிக்கப்படுதல்</center>]]
மாற்கு நற்செய்தியின் படி, இயேசு யோர்தான நதிக்கரைக்கு வந்து அங்கே திருமுழுக்கு கொடுத்துக் கொண்டிருந்த யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார். இயேசு கரையேறியபோது பரிசுத்த ஆவி அவர்மீது புறா வடிவில் வந்திறங்கினார். மேலும் நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று. (மாற்கு 1:10–11). லூக்கா நற்செய்தியில் யோவான் போதிக்க தொடங்கியது டைபீரியஸ் சீசரின் 15வது ஆண்டில் என குறிப்பிட்டுள்ளார் (லூக்கா 3:1). இது [[கி.பி.]] 28 ஆகும் எனவே திருமுழுக்கின் போது இயேசுவின் வயது சுமார் 30 ஆகும். மேலும் மத்தேயுவின் படி யோவன் இயேசு திருமுழுக்கு பெற வருவதை கண்டபோது இயேசுவைத் தடுத்து நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா என்றார். ஆனால் இயேசுவோ இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது எனக்கு பிரியமாக இருக்கிறது என்றார் (மத்தேயு 3:15).

திருமுழுக்கின் பின்னர் இயேசு பாலைவனத்துக்குச் சென்று 40 நாள் நோன்பிருந்தார். அப்போது அலகை அவரி மூன்று முறை சோதித்தது. மூன்று முறையும் இயேசு வென்றார். பின்னர் பாலைவனத்தை விட்டகன்று தமது முதல் சீடர்களைத் தெரிந்துகொண்டார் (மத்தேயு 4:12–22).

இயேசுவின் திருமுழுக்குடன் தொடர்புடைய இந்நிகழ்வுகள் [[மத்தேயு நற்செய்தி|மத்தேயு]] [[மாற்கு நற்செய்தி|மாற்கு]] [[லூக்கா நற்செய்தி|லூக்கா]] நற்செய்திகளில் மட்டுமே காணப்படுகிறது. [[யோவான் நற்செய்தி]]யில் இது பற்றிய குறிப்பேதும் கிடையாது.

=== பகிரங்க வாழ்க்கை ===

விவிலிய நற்செய்திகளில் கூறப்பட்டுள்ளதன்படி இயேசு, மெசியா, மனித குமாரன், கர்ததர், "மனிதரது பாவங்களை தீர்க்க பலியானாவர்", விண்ணரசின் நற்செய்தியை அறிவிக்கவந்தவர் ஆவார் (மாற்கு 10:45, லூக்கா 4:43, யோவான் 20:31). மேலும் விவிலியத்தில் இயேசு தனது போதனைகளின் போது பல புதுமைகளை செய்த்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இவை நோய்களை குணமாக்குதல், நீரின் மேல் நடத்தல், நீரை திராட்சை இரசமாக்குதல், சிலரை மரணத்திலிருந்து எழுப்புதல் (யோவான் 11:1–44). போன்றவையாகும்.

இயேசுவின் பகிரங்க வாழ்விபோது மூன்று [[பாஸ்கா பண்டிகை]]களை [[யோவான் நற்செய்தி]] குறிப்பிடுகிறது. இதிலிருந்து இயேசுவின் பகிரங்க வாழ்கை மூன்று ஆண்டுகள் நீடித்ததாகக் கருதப்படுகிறது. இயேசு பொதுமக்களுக்கு போதித்தார் எனினும் தனது பிரதான போதனைகளை அப்போஸ்தலர் என அழைக்கப்பட்ட தனது நெருங்கிய பன்னிரு சீடருக்கு மட்டுப்படுத்தினார். இயேசுவின் போதனைகளின் உச்சக்கட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்களைக் கவர்ந்தார். இயேசு கூடுதலாகப் போதனை செய்த இடங்கள் கலிலேயா (இன்றைய வட [[இசுரேல்]]) மற்றும் பெறாயா (இன்றைய மேற்கு [[ஜோர்தான்]]) என்பனவாகும்.

[[மலைப் பிரசங்கம்]] (மத்தேயு 5-7) இயேசுவின் போதனைகளில் முக்கியமானதாகும். இதில் பல ஆசீர்வாதங்களும் [[கிறிஸ்து கற்பித்த செபம்|கிறிஸ்து கற்பித்த செபம்மும்]] காணப்படுகிறது. மலைப்பிரசங்கத்தில் இயேசு கோபம், பெருமை, [[விவாகரத்து]], சத்தியங்கள், பழிவாங்குதல் என்பவை குறித்து போதித்தார். இயேசுவின் போதனைகளில் சில மரபு வழியானவையாகும். மேலும் சில மரபுகளைப் புறக்கணித்தவையாகும். இயேசு [[மோசே]]யின் சட்டங்களை பின்பற்றும்படி கூறினார். அதேவேளை ஒருகன்னத்தில் அடித்தவனுக்கு மறுகன்னத்தையுன் காட்டு போன்ற மோசேயின் சட்ட்டத்துக்கு புறம்பான விடயங்களையும் போதித்தார்.
[[படிமம்:Bloch-SermonOnTheMount.jpg|left|thumb|250px|''மலைப்பிரசங்கம்'']]
இயேசு மக்களுக்கு போதிக்கும் போது, [[ஊதாரி மைந்தன் உவமை]] (லூக்கா 15:11-32), [[விதைப்பவனும் விதையும் உவமை|விதைப்பவன் உவமை]] (மத்தேயு 13:1-9) போன்ற [[இயேசுவின் உவமைகள்|உவமைகளைப்]] பரவலாகப் பயன்படுத்தினார். அவரது போதனைகள் விண்ணரசு, மனிதநேயம் மற்றும் உலக முடிவு பற்றியதாக இருந்தது. அவர் தாழ்மை, சாந்தம், பாவ மன்னிப்பு, கடவுள் நம்பிக்கை, முடிவில்லா விண்ணரசு போன்றவற்றையும் போதித்தார்.

இயேசு தனது போதனைகளின் போது யூத சமயத்தலைவர்களுடன் (பரிசேயர், சதுசேயர்) தர்க்கத்தில் ஈடுபட்டார். சதுசேயர் மரணத்திலிருந்து மீண்டும் உயிர்த்தெழல் இல்லை என நம்பினர். இயேசு இவ்விடயதில் அவர்களோடு இணங்கவில்லை (மத்தேயு 22:23-32). பரிசேயருடனான் இயேசுவின் தொடர்பு சிக்கலானதாகும். இயேசு பரிசேயரை அவர்களது வெளிவேடத்துக்காகக் கடிந்து கொண்ட (மத்தேயு 23:13–28) அதேவேளை அவர்களில் சிலரோடு ஒன்றாக உணவு அருந்தினார். (லூக்கா 7:36–50). இயேசு பரிசேயரின் ஆலயங்களில் போதித்தார் (மாற்கு 23:1-3) மேலும் இயேசு பரிசேயரது போதனைகளை தன்னை பின்பற்றியவர்களுக்கு போதித்தார் (மத்தேயு 23:1-3). நிக்கோதேமு போன்ற பரிசேயர் இயேசுவின் சீடர் எனக் கொள்ளப்பட்டனர் (யோவான் 7:50-51).


[[படிமம்:First_century_palestine.gif|thumbnail|250px|left|<center>இயேசுவின் நாற்களில் யூதேயா மற்றும் கலிலேயா</center>]]
கூடுதலான நேரங்களில் இயேசு அன்றைய சமுதாயத்தில் ஒதுக்கப்பட்ட, வரிவசூலிப்பவர் (உரோமை அரசுக்கு வரி வசூலிப்பவர்கள்) போன்றவர்களுடன் தனது நேரத்தை செலவளித்தார். பிரிசேயர் இதை பற்றி முறையிட்டபோது இயேசு மருத்துவன் நோயாளிக்கே அதிகம் தேவை என்று பதிலளிக்கிறார் (மத்தேயு 9:9-13). இயேசு தனது போதனைகளை சமாரியாவுக்கும் விரிவுபடுத்தியிருந்தார் (யோவான் 4:1-42).


இயேசுவின் பகிரங்க வாழ்வின் இறுதியில், எருசலேமுக்கு கோலாகலமாக நுழைந்தார். இது யூத மாதப்படி நிசான் 15 ஆம் திகதியாகும். யோவான் நற்செய்தியின் (யோவான் 12:12–19) படி இயேசு எருசலேமுக்கு வருகிறாரென்று பாஸ்கா பண்டிகைக்கு வந்த திரளான மக்கள் கேள்விப்பட்டு, குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு, அவரை எதிர்கொண்டுபோய் ஓசன்னா, கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா ஆசீர்வதிக்கப்பட்டவர் என்று ஆர்ப்பரித்தார்கள். பலர் தங்களது மேலாடைகளை அவர் வந்த வழியில் விரித்தனர். இயேசு கழுதை மேல் ஏறி எருசலேமுக்குள் ஓர் அரசர்போல நுழைந்தார்.

==== இயேசுவின் வாய்மொழிகள் ====
* வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே ! நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் ([[மத்தேயு நற்செய்தி|மத்தேயு]] 11:28)
* நல்ல ஆயன் நானே ([[யோவான் நற்செய்தி|யோவான்]] 10.14)
* நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் என்னாலன்றி ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். ([[யோவான் நற்செய்தி|யோவான்]]14:6)
* நீங்கள் உலகமெங்கும் போய், எல்லோருக்கும் நற்செய்தியை அறிவியுங்கள் ([[மாற்கு நற்செய்தி|மாற்கு]] 16:15)

=== பாடுகள் மரணம் ===
[[படிமம்:Eccehomo2.jpg|thumb|right|175px|போன்சியோ பிலாத்து, "இதோ இம்மனிதரை உங்களுக்கு கொடுக்கிறேன் இவர் இரத்த பாவம் என் மிது இல்லை"]]
புனித விவிலியத்தின் படி, இயேசு விழாக்கோலத்தில் எருசலேமுக்க்குள் நுழைந்த பிறகு ஏரோதில் ஆலயத்தில் வியாபாரிகளை இது செப வீடு கள்வர் குகையாய் மாற்றாதீர் எனக்கூறி அவர்களை விரட்டி விட்டார் (யோவான் 12:13-17). அதே [[கிழமை]]யில் தனது [[கடைசி இராப்போசனம்|கடைசி இராப்போசனத்தை]] தனது சீடருடன் உட்கொண்ட பிறகு செபம் செய்வதற்காக் கெத்சமணி தோட்டதுக்குப் போனார்.

தோட்டத்திலிருந்தபோது, ஆசாரியர்களதும் தலைமை குரு கைப்பாசினதும் (பிறகு கூறப்பட்டுள்ளப்படி, மத்தேயு 26:65-67) கட்டளைப்படி இயேசு உரோமை போர்வீரர்களால் கைது செய்யப்பட்டார். இயேசுவின் புகழ் மக்களிடம் ஓங்கியிருந்தபடியால் இயேசுவின் கைது திட்டமிட்டு இரவில் மேற்கொள்ளப்பட்டது (மாற்கு 14:2). இயேசுவை கைதுசெய்யவந்த கூட்டத்தோடு பன்னிரு சீடரில் ஒருவரான யூதாசும் வந்தான். யோவான் நற்செய்தியின்படி, யூதாஸ் முன்வந்து முத்தம் செய்து இயேசுவை அடையாளம் காட்டினான். இயேசுவை போர்வீரர் கைதுசெய்ய முயன்றபோது பன்னிரு சீடரின் இன்னொருவரான பேதுரு தனது பட்டயத்தை உருவி பிரதான குருவின் பணியாளது கதை வெட்டினார். [[படிமம்:William-Adolphe Bouguereau (1825-1905) - The Flagellation of Our Lord Jesus Christ (1880).jpg|thumbnail|250px|left|<center>இயேசுவின் பாடுகள்</center>]]அப்போது இயேசு கத்தியெடுத்தவன் அதிலே அழிவான் எனச்சொல்லி பேதுருவை பட்டயத்தை உறையிலே போடுமாறு கூறினார். பின்பு லூக்கா நற்செய்தியின்படி (லூக்கா 22:51), இயேசு அப்பணியாளது காதைத் தொட்டுச் சுகமாக்கினார். பின்பு இயேசுவை அவர்கள் கைது செய்தனர். இயேசுவின் சீடர் தலைமறைவாகினார்கள். இயேசுவை ஆசரியர்களும் மூப்பர்களும் உள்ள சபைக்கு விசாரணக்காக அன்றிரவே கொண்டுசென்றனர். இயேசுவை பிரதான ஆசரியரும் மூப்பர்களும் இயேசுவை விசாரித்து அவர் கடவுளின் மகனா? என வினவினார்கள். அதற்கு இயேசு நீரே அவ்வாறு கூறினீர் என்றார் (லூக்கா 22:70-71). இதை கேட்ட அச்சபையினர் இயேசு கடவுளை பழித்தார் என தீர்ப்பிட்டனர். பின்பு இயேசு யூதரின் கடவுள் என தம்மை கூறிக்கொண்டார் எனக்கூறி உரோமை ஆளுனரான போன்சியோ பிலாத்துவிடம் இயேசுவை கொண்டுச் சென்றனர் (மத்தேயு 27:11;மாற்கு 15:12).

பிலாத்து தனது விசாரணைகளின் போது இயேசு குற்றமற்றவர் எனக்கண்டு பாஸ்கா பண்டிகையின் போது குற்றவளி ஒருவரை விடுவிக்கும் வழக்கப்படி இயேசுவை விடுவிக்க முயன்றார். ஆனால் மக்கள் கூட்டம் பரப்பாஸ் என்ற வேறு ஒரு கைதியை விடுதலை செய்யுமாறும் இயேசுவை சிலுவையில் அறையுமாறும் கூச்சலிட்டனர். மக்களுக்கு பயந்த பிலாத்து, இதோ இம்மனிதரை உங்களுக்கு கொடுக்கிறேன் இவர் இரத்த பாவம் என் மீது இல்லை எனக்கூறி இயேசுவைச் சிலுவையில் அறைவதற்கான கட்டளையை கொடுத்தார். மேலும் ஒரு பாத்திரத்தில் நீர் கொண்டு தனது கையை கழுவி தனது பாவத்தை கழுவிக்கொண்டார்.


[[படிமம்:Cristo_crucificado.jpg|thumb|right|200px| சிலுவையில் இயேசு]]
பின்பு போர்வீரர் இயேசுவை கூட்டிச்சென்று வாரினால் அடித்து பின்னர் அவரைச் சிலுவையில் அறையுமுகமாக கொல்கத்தா என அழைக்கப்பட்ட மலைக்கு கூட்டிச்சென்றனர். இயேசு தனது சிலுவையை சுமந்து சென்றார். அங்கே இயேசுவை சிலுவையில் அறைந்து பிலாத்துவின் கட்டளைப்படி "நாசரேனாகிய இயேசு, யூதர்களின் அரசர்" என எழுதப்பட்ட பெயர் பலகையை அவர் தலைக்கு மேல் தொங்கவிட்டனர். மூன்று மணிநேரம் சிலுவையில் தொங்கிய இயேசு, "ஏலோய், ஏலோய் லாமா சபக்த்தானி" (என் ஆண்டவரே என் ஆண்டவரே ஏன் என்னை கைவிட்டீர்) எல்லாம் நிறைவேறிற்று எனக்கூறி உயிர்விட்டார். லூக்கா 23:48 இன் படி இதை பார்த்த மக்கள் கூட்டம் சோகமாக காணப்பட்டது.

நான்கு நற்செய்திகளின் படியும், இயேசு மாலையாவதற்கு முன்பே மரித்துவிட்டார். செல்வந்தனான அரிமத்தியாவைச் சேர்ந்த யோசேப்பு (மாற்கு 15:42-46;லூக்கா 23:50-56) பிலாத்துவிடம் இயேசுவின் உடலை சிலுவையிலிருந்து இறக்குவதற்கு அனுமதி பெற்று இயேசுவை ஒரு புதிய கல்லறை ஒன்றில் அடக்கம் செய்தனர்.

=== உயிர்ப்பும் விண்ணேற்றமும் ===
[[படிமம்:Grunewald - christ.jpg|thumb|left|200px|<center>''இயேசுவின் உயிர்ப்பு'' <br />16வது நூற்றாண்டு ஓவியம்</center>]]

விவிலியத்தின் படி, இயேசு [[சிலுவை]]யில் அறையுண்ட மூன்றாவது நாள் மரணத்தில் இருந்து உயிர்த்தார்<ref>{{விவிலிய வசனம்|Matthew|[[மத்தேயு நற்செய்தி]]|28|5-10}}; {{விவிலிய வசனம்|Mark|[[மாற்கு நற்செய்தி]]|16|9}};{{விவிலிய வசனம்|Luke|[[லூக்கா நற்செய்தி]]|24|12-16}};{{விவிலிய வசனம்|John|[[யோவான் நற்செய்தி]]|20|10-17}}; {{விவிலிய வசனம்|Acts|[[அப்போஸ்தலர் பணி]]|2|24}} ;{{விவிலிய வசனம்|I+Corinthians|[[கொரிந்தியருக்கு எழுதிய முதலாவது நிருபம்]]|6|14}} </ref>. மத்தேயு நற்செய்தியின் படி, இறை தூதர் ஒருவர் இயேசுவின் கல்லறை அருகே தோன்றி இயேசுவின் உயிர்ப்பை அவரது உடலுக்கு வாசனை பொருட்கள் பூச வந்த பெண்களுக்கு அறிவித்தார். லூக்காவின் படி இரண்டு இறைதூதராகும் மாற்குவின் படி அது வெண்ணிர ஆடை அணிந்த வாலிபனாகும். மாற்கு இயேசு முதலாவதாக [[மர்தலேன் மரியாள்|மர்தலேன் மரியாளுக்கு]] தோன்றினார் <ref>{{விவிலிய வசனம்|Mark|[[மாற்கு நற்செய்தி]]|16|9}}</ref>. யோவான் நற்செய்தியில் மரியாள் கல்லைறயுள் பார்க்கும் போது இரண்டு இறைத்தூதர் உயிருடன் உள்ளவரை இங்கு ஏன் தேடுகிறீர்கள் என கேட்டார். அவர் திரும்பியபோது இயேசுவைக் கண்டார், எனினும் இயேசு பெயர் சொல்லி அழைக்கும் வரை அடையாளம் காணமுடியாதிருந்தார் <ref>{{விவிலிய வசனம்|John|[[யோவான் நற்செய்தி]]|20|11-18}}</ref>.

[[அப்போஸ்தலர் பணி]] நூல் இயேசு அதற்கு பிறகு, நாற்பது நாட்களுக்கு பல இடங்களில் சீடருக்கு தோன்றியதாகக் குறிப்பிடுகிறது. இயேசுவின் உயிர்ப்பின் சில மணிகளுக்குப் பிறகு எம்மாவுஸ் நகருக்கு திரும்பிக்கொண்டிருந்த இரண்டு சீடருக்குத் தோன்றினார். அன்று மாலை ஒன்றாக கூடியிருந்த சீடருக்கு தோன்றினார். இயேசுவின் பணி யூதரை முதன்மை படுத்தி நடந்தாலும் இயேசு இவ்வேளையில் சீடருக்கும் உலகெங்கும் சென்று சகலருக்கும் நற்செய்தியை அறிவியுங்கள் என்றார். இதை கூறிய பின்பு இயேசு ஒலிவ மலையில் இயேசு விண்ணேறினார். அவரை ஒரு முகில் மறைத்து விண்ணுக்கு எடுத்துக் கொண்டது. இயேசு தான் திரும்பவும் வருவதாக வாக்களித்தார் இது இரண்டாம் வருகை என் அழைக்கப்படுகிறது <ref>{{விவிலிய வசனம்|Matthew|[[மத்தேயு நற்செய்தி]]|15|24}}; {{விவிலிய வசனம்|Mark|[[மாற்கு நற்செய்தி]]|16|19}};{{விவிலிய வசனம்|Luke|[[லூக்கா நற்செய்தி]]|24|51}}; {{விவிலிய வசனம்|Acts|[[அப்போஸ்தலர் பணி]]|1|6-11}} ;{{விவிலிய வசனம்|I+Corinthians|[[கொரிந்தியருக்கு எழுதிய முதலாவது நிருபம்]]|6|14}} இரண்டாம் வருகை {{விவிலிய வசனம்|Matthew|[[மத்தேயு நற்செய்தி]]|24|36-44}} </ref>

=== தீர்க்கதரிசனம் நிறைவேறல் ===
நற்செய்திகளுக்கிணங்க இயேசுவின் பிறப்பு,வாழ்க்கை,மரணம்,உயிர்ப்பு என்பன பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ள தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றமாகும். உதாரணமாக இயேசு கன்னியிடமிருந்து பிறப்பதையும் அவர் எகிப்துக்கு தப்பியோடுவதையும் ஏசாயா 7:14 இல் காணலாம்.
== உசாத்துணை ==
* விவிலியம் (ஜேம்ஸ் மன்னனின் பதிப்பு, கத்தோலிக்க புதிய மொழிபெயர்ப்பு)
* [http://www.religiousstudies.uncc.edu/jdtabor/james.html யூதா]
<references/>

== வெளி இணைப்புகள் ==
* [http://boss.streamos.com/real/url/calibermedia.ninesystems.com/ccc/jf/public/05871_jf_cl.smil இயேசு பற்றிய தமிழ் திரைப்படம்]
=== கிறிஸ்தவ நோக்கு ===
{{commons|Jesus}}
{{wikiquote|Jesus Christ}}
* [http://dmoz.org/Society/Religion_and_Spirituality/Christianity/Jesus_Christ/ இயேசுவைப் பற்றிய இணையக் கோவை ]
* [http://www.rejesus.co.uk/ ஐ.இ.இயேசுவை பற்றிய தளம்]
* [http://www.godonthe.net/evidence/said_god.htm இயேசு தன்னைக் கடவுள் என்கிறார்]
* [http://www.leaderu.com/orgs/probe/docs/unique.html இயேசு கடவுளா?]
* [http://www.insecula.com/contact/A004143.html/ 864 படிமங்கள்]
* [http://www.jesuschristonly.com/ இயேசு மட்டுமே — கட்டுரைகள், பிரசங்கங்கள்]
* [http://www.allaboutjesuschrist.org/ இயேசுவை பற்றி — கட்டுரைகளும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும்]
* [http://www.alamoministries.com/ பல மொழி இலக்கியங்கள்]
* [http://st-takla.org/Gallery/Gallery-Jesus-01.html படக்கோவை] முழுவடிவம் http://St-Takla.org
* [http://www.plymouthbrethren.org/topic.asp?topic_id=6 கிறிஸ்தவவியல்]
* ISBN 0-310-22655-4 Lee Strobel எழுதிய ''The Case for Christ''

=== கிறிஸ்தவரல்லாதோரின் நோக்கு ===
* [http://www.monergism.com/thethreshold/articles/topic/christ.html இயேசு கிறிஸ்த்து] பலநோக்கு கட்டுரைகள்
* [http://www.christnotes.org/ கிறிஸ்து குறிப்புகள்]
* [http://www.newadvent.org/cathen/08374c.htm இயேசு கிறிஸ்த்து-கத்தோலிக்க கலைக்களஞ்சியம்]
* [http://www.ewtn.com/faith/teachings/JESUMENU.HTM EWTN'இன் இயேசு பற்றிய வளைத்தளம்]
* [http://www.thewords.com/ வசனங்கள்] – "இயேசு கூறியவை" ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது
* [http://www.watchtower.org/library/w/2001/11/15/article_02.htm யேகோவாவின் சாட்சிகள்]
* [http://www.mormon.org/learn/0,8672,810-1,00.html "Latter-day Saint (Mormon)" இன் இயேசுமீதான் நம்பிக்கைகள்]
* [http://mama.indstate.edu/users/nizrael/jesusrefutation.html கிறிஸ்தவ மறைபோதகருக்கு யூதனின் பதில்]
* [http://aaiil.org/text/books/others/khwajanazirahmad/jesusinheavenonearth/jesusinheavenonearth.shtml இயேசு-இந்தியா: லாகூர் அகமதியாவின் கருத்து]
* [http://www.islamfrominside.com/Pages/Articles/Jesus%20-%20An%20Islamic%20Perspective.html இயேசுவை பற்றிய ஒரு இஸ்லாமிய நோக்கு]
* [http://www.islamfrominside.com/Pages/Tafsir/Tafsir%285-116%20to%20120%29.html புனித குரானில் இயேசு]
* [http://www.islam.tc/prophecies/jesus.html இஸ்லாமில் இயேசுவின் இரண்டாம் வருகை]
* [http://www.allaboutjesuschrist.org இயேசு கிறிஸ்த்து] – ஒரு மிதவாத கிறிஸ்தவ நோக்கு
* [http://www.AllAboutGOD.com/is-Jesus-God.htm இயேசு கடவுளா?] – ஒரு அடிப்ப்டைவாதியின் நோக்கு
* [http://library.lds.org/nxt/gateway.dll/Magazines/Ensign/1988.htm/ensign%20november%201988.htm/what%20think%20ye%20of%20christ.htm இயேசுவை ப்ற்றி என்ன நினைக்கிறீர்?]
* [http://christians.port5.com/jesus.html இயேசு-கடவுள்]
* [http://www.uua.org/pamphlet/3040.html இயேசு பற்றீய பரந்துபட்ட நோக்குகள்]: தீர்க்கதரிசி; புறக்கனிப்பு; பல கிறிஸ்துக்களில் ஒருவர்

=== ஏனய நோக்குகள் ===
* [http://pages.ca.inter.net/~oblio/jhcjp.htm இயேசு ஒரு புதிர்]
* [http://www.geocities.com/paulntobin/jesus.html இயேசுவை சந்தேகிப்போரின் வழிகாட்டி]
* [http://www.jesusneverexisted.com/ இயேசு என்பவர் வாழவேயில்லை]
* [http://www.users.bigpond.com/pontificate/bindex.htm இயேசுவின் தயாரிப்பு] இயேசு-ஜூலியஸ் சீசரை கொண்டு புணையப்பட்ட கதை.
* [http://www.religioustolerance.org/chr_jckr.htm இயேசு-கிறிஸ்னனின் மறுவல்]
* [http://www.religioustolerance.org/chr_jcno.htm ஒன்றாரியோ சமய்ய சகிப்பு தன்மைக்கான Ontario Consultants on Religious Tolerance - இயேசு உலகில் வாழ்ந்தாரா?]
* [http://www.hilalplaza.com/index.asp?PageAction=VIEWPROD&ProdID=225 இயேசூ உண்மையாக கூறியது என்ன?]
* [http://reluctant-messenger.com/issa.htm இயேசு தனது அகவை 12-29 வரை இமயமலைச்சாரலில் உள்ள இலாடாக்கில் (Ladakh) வசித்தார் என்ற சித்தாந்தமும் தடயங்களும்]
* [http://jesusteaching.swami-center.org/ இயேசுவின் உண்மையான போதனைகள்]
* [http://www.eliyah.com/nameson.htm இயேசு யஹுசுஹா(Yahushua) என அழைக்கப்பட்டார்]
* [http://www.aaiil.org/text/rlgn/rlgnmain.shtml இயேசுவி மரணம் பற்றிய பலதரப்பட்ட கட்டுரைகள்]
* [http://hebrew4christians.com/Articles/articles.html இயேசு பற்றிஅய் எபிரேய நோக்கு]
* [http://www.neo-tech.com/jesus/ இயேசுவின் இரகசிய செய்தி]

=== வரலாற்று உண்மைகள் ===
* [http://www.leaderu.com/truth/1truth22.html தற்கால ஆய்வுகளும் இயேசுவின் உயிர்பிற்கான வரலாற்றுச் சான்றுகளும்] விவிலிய உயிர்த்தெழுதல் பற்றிய குறிப்புகளில் உள்ள வரலாற்று உண்மைகள்.
* [http://www.religionfacts.com/christianity/history/jesus.htm இயேசுவின் வாழ்கை மேலோட்டம்] புதிய ஏற்பாட்டு குறிப்புகளின் தொகுப்பு.
* [http://www.pbs.org/wgbh/pages/frontline/shows/religion/ இயேசுவிலிருந்து கிறிஸ்த்துவுக்கு] – ஃபுரொன்ட் லைன் தொலக்காட்சி தொடரின் ஒரு விவரனக்குறிப்பு:- இயேசுவும் ஆதி கிறிஸ்தவரும்.
* [http://www.reportret.info/gallery/jesus1.html மறுசீரமைக்கப்பட்ட இயேசுவின் வரைப்படம்]
* [http://www.Jesus-Institute.org விவிலியத்துக்கு புறம்பான இயேசுவின் வாழ்க்கை]
* [http://st-takla.org/Gallery/Gallery-Jesus-01.html இயேசு-படத் தொகுப்பு]
* [http://www.atmajyoti.org/sw_unknown_life.asp இயேசுவின் அந்தரங்க வாழ்ககை] நிக்கொலஸ் நொட்விச்
* [http://www.uncc.edu/jdtabor/index.html இயேசு வாழ்ந்த உரோமன்-யூத சூழல்]
* [http://virtualreligion.net/iho/ இயேசு பற்றிய கருத்துக்கள்]
* [http://www.united.edu/portrait/ இயேசுவின் சரிதம்: கலிலேய யூதன் முதல் கடவுள் வரை]
* [http://www.ntgateway.com/Jesus/ பர்மிங்கம் பல்கலைகழகம்: வராற்று இயேசு]
* [http://www.atmajyoti.org/spirwrit-the_christ_of_india.asp இந்தியாவில் இயேசு] இயேசு தனது அந்தரங்க வாழ்வை இந்தியாவில் கழித்தார் என்பதற்கான சான்றுகள்
* [http://theologytoday.ptsem.edu/oct1993/v50-3-article8.htm இயேசு வரலாற்று தகவல்கள்]
* [http://www.vatican.va/jubilee_2000/magazine/documents/ju_mag_01031997_p-29_en.html இயேசுவும் பிற சமயங்களும்]
* [http://www.emerald-energies.com/biographies.php?authors_id=59 இயேசு:- யூதமத ராபி]
* [http://www.atmajyoti.org/ul_unknown_lives_forward.asp இயேசுவினதும் மரியாளதும் விவிலிதில் இல்லாத வாழ்க்கை]
* [http://www.ynca.com/Mini%20Studies/mistaken_j.htm பிழைத்த "J"]
* [http://www.yaim.com/Pages/missingJ.htm தொலைந்த "J"]

[[பகுப்பு:சமயத் தலைவர்கள்]]
[[பகுப்பு:இயேசு]]
[[பகுப்பு:முதற்பக்கக் கட்டுரைகள்]]

{{Link FA|ar}}
{{Link FA|de}}
{{Link FA|es}}
{{Link FA|hr}}
{{Link FA|pt}}

[[ab:Иесуа Қьырста]]
[[ace:Isa]]
[[af:Jesus van Nasaret]]
[[als:Jesus Christus]]
[[am:ኢየሱስ]]
[[an:Chesús de Nazaret]]
[[ang:Iesus]]
[[ar:يسوع]]
[[arc:ܝܫܘܥ]]
[[arz:يسوع]]
[[ast:Xesús]]
[[az:İsa peyğəmbər]]
[[ba:Ғайса]]
[[bat-smg:Jiezos Krėstos]]
[[be:Ісус Хрыстос]]
[[be-x-old:Ісус Хрыстос]]
[[bg:Исус Христос]]
[[bi:Jisas Kraes]]
[[bm:Yesu Krista]]
[[bn:যিশু]]
[[bo:ཡེ་ཤུ།]]
[[br:Jezuz Nazaret]]
[[bs:Isus]]
[[bxr:Иисус Христос]]
[[ca:Jesús de Natzaret]]
[[cbk-zam:Jesus]]
[[cdo:Ià-sŭ]]
[[ceb:Jesus]]
[[co:Gesù Cristu]]
[[cs:Ježíš Kristus]]
[[cu:Їисъ Хрїстъ]]
[[cv:Иисус Христос]]
[[cy:Iesu]]
[[da:Jesus]]
[[de:Jesus Christus]]
[[dsb:Jezus Kristus]]
[[dv:އީސާގެފާނު]]
[[ee:Yesu Kristo]]
[[el:Ιησούς Χριστός]]
[[eml:Gesü]]
[[en:Jesus]]
[[eo:Jesuo Kristo]]
[[es:Jesús de Nazaret]]
[[et:Jeesus]]
[[eu:Jesus Nazaretekoa]]
[[ext:Jesucristu]]
[[fa:عیسی]]
[[fi:Jeesus]]
[[fiu-vro:Jeesus]]
[[fj:Jisu Karisito]]
[[fo:Jesus]]
[[fr:Jésus de Nazareth]]
[[fur:Jesus]]
[[fy:Jezus Kristus]]
[[ga:Íosa Críost]]
[[gan:耶穌]]
[[gd:Ìosa Chrìosd]]
[[gl:Xesús de Nazareth]]
[[got:𐌹𐌴𐍃𐌿𐍃 𐍇𐍂𐌹𐍃𐍄𐌿𐍃]]
[[ha:Yesu Kristi]]
[[hak:Yâ-sû]]
[[he:ישו]]
[[hi:ईसा मसीह]]
[[hif:Jesus]]
[[hr:Isus]]
[[ht:Jezi]]
[[hu:Jézus]]
[[hy:Հիսուս]]
[[ia:Jesus Christo]]
[[id:Yesus]]
[[ig:Jisọs Kraịst]]
[[ilo:Jesus]]
[[is:Jesús]]
[[it:Gesù]]
[[iu:ᐱᐅᓕᑦᓯᔨ/piulitsiji]]
[[ja:イエス・キリスト]]
[[jbo:iecu,ys]]
[[jv:Yesus Kristus]]
[[ka:იესო ქრისტე]]
[[kab:Ɛisa]]
[[kg:Yesu]]
[[kk:Иса Мәсіх]]
[[kl:Jiisusi-Kristus]]
[[kn:ಯೇಸು ಕ್ರಿಸ್ತ]]
[[ko:예수]]
[[ksh:Jesus Christus]]
[[ku:Îsa]]
[[kv:Исус Кристос]]
[[kw:Yesu Krist]]
[[la:Iesus]]
[[lad:Yeshu]]
[[lb:Jesus vun Nazaret]]
[[lg:Jesu Kristo]]
[[li:Zjezus Christus]]
[[lij:Gesû Cristo]]
[[lmo:Gesü de Nazaret]]
[[lo:ພະເຍຊູ]]
[[lt:Jėzus Kristus]]
[[lv:Jēzus Kristus]]
[[mg:Jesoa]]
[[mhr:Исус Христос]]
[[mi:Ihu Karaiti]]
[[mk:Исус Христос]]
[[ml:യേശു]]
[[mn:Есүс Христ]]
[[mr:येशू ख्रिस्त]]
[[ms:Yesus Kristus]]
[[mt:Ġesù]]
[[mwl:Jasus]]
[[my:ယေရှုခရစ်တော်]]
[[nah:Yeshua Christós]]
[[nds:Jesus Christus]]
[[nds-nl:Jezus Christus]]
[[nl:Jezus (traditioneel-christelijk)]]
[[nn:Jesus]]
[[no:Jesus Kristus]]
[[nrm:Jésus-Chrît]]
[[nv:Doodaatsaahii (Jíísas)]]
[[ny:Yesu Kristu]]
[[oc:Jèsus]]
[[os:Йесо Чырысти]]
[[pa:ਈਸਾ ਮਸੀਹ]]
[[pdc:Yeesus Grischdus]]
[[pih:Jesus]]
[[pl:Jezus Chrystus]]
[[pms:Gesù ëd Nàsaret]]
[[pnb:یسوع]]
[[ps:عيسی]]
[[pt:Jesus]]
[[qu:Jesus]]
[[rm:Gesu da Nazaret]]
[[rn:Yezu Kirisitu]]
[[ro:Isus din Nazaret]]
[[ru:Иисус Христос]]
[[rw:Yesu Kristo]]
[[sah:Исус]]
[[sc:Gesùs]]
[[scn:Gesù Cristu]]
[[sco:Jesus Christ]]
[[sh:Isus]]
[[simple:Jesus]]
[[sk:Ježiš Kristus]]
[[sl:Jezus Kristus]]
[[sm:Iesu Keriso]]
[[so:Ciise]]
[[sq:Jezusi]]
[[sr:Исус]]
[[ss:Bukhristu]]
[[sv:Jesus]]
[[sw:Yesu]]
[[szl:Jezus Kristus]]
[[te:యేసు]]
[[tg:Исо]]
[[th:พระเยซู]]
[[tk:Isa Pygamber]]
[[tl:Hesus]]
[[to:Sīsū Kalaisi]]
[[tpi:Jisas]]
[[tr:İsa]]
[[tt:Ğaysa]]
[[tw:Yesu Kristo]]
[[ty:Iesu Mesia]]
[[ug:ئەيسا مەسىھ]]
[[uk:Ісус Христос]]
[[ur:عیسیٰ علیہ السلام]]
[[uz:Iso Masih]]
[[vec:Gesù]]
[[vi:Giê-su]]
[[vls:Jezus van Nazareth]]
[[war:Hesus]]
[[wo:Yéesu-kristaa]]
[[wuu:耶稣]]
[[xh:UYesu Kristu]]
[[yi:יעזוס]]
[[yo:Jésù]]
[[zh:耶稣]]
[[zh-min-nan:Iâ-so͘]]
[[zh-yue:耶穌]]

10:19, 10 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

நாசரேத்தின் இயேசு
Jesus of Nazareth
இத்தாலியில் ராவென்னா என்ற இடத்தில் உள்ள பசிலிக்கா தேவாலயத்தில் உள்ள இயேசு கிறித்துவின் 6-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வரைபடம்.
பிறப்புகிமு 4[1]
பெத்தலகேம், ரோமப் பேரரசு; நாசரேத்து, கலீலி[2]
இறப்புகிபி 30[1]
கால்வரி, ஜுடேயா, ரோமப் பேரரசு
இறப்பிற்கான
காரணம்
சிலுவையில் அறையப்பட்டார்
இனம்யூதர்

இயேசு (ஏசு, Jesus, கிமு 4 – கிபி 30[1]) கிறிஸ்தவ மதத்தின் காரணரும், மைய நபரும் ஆவார். இவர் இயேசு கிறிஸ்து, கிறிஸ்து இயேசு, நாசரேத்தூர் இயேசு மற்றும் நசரேயனாகிய இயேசு என்ற பெயர்களிலெல்லாம் அழைக்கப்படுகிறார். இஸ்லாம் மற்றும் பஹாய் போன்ற சமயங்களிலும் இவர் ஒரு முக்கியமான இறைத்தூதராகக் கருதப்படுகிறார். இயேசு பற்றிய தகவல்கள் புனித விவிலியத்தின் நான்கு நற்செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிறிஸ்தவர்கள் இயேசுவை கடவுளின் மகன் என்றும், விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் முன்னுரைக்கப்பட்ட மெசியா (இரட்சகர்) என்றும் விசுவாசிக்கின்றனர். மேலும், சிலுவையில் மரித்த இயேசு, மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததாகவும், அவர் மூலமாக தாங்கள் பாவத்திலிருந்து இரட்சிக்கப்பட முடியும் என்றும் நம்புகின்றனர்.


இஸ்லாமிய மதத்தவரும் இவரை கடவுள் அனுப்பிய முக்கியமான இறைத்தூதர்களில் ஒருவர் என்றும் இறையடியார் என்றும் நம்புகின்றனர். ஆனால் இயேசு "கடவுளின் மகன்" என்ற கிறிஸ்தவர்களின் கருத்திலிருந்து இது மாறுபட்டதாகும்.


வரலாற்று ஆய்வாளரின் கருத்துப்படி இயேசு கி.மு. 8–2 தொடக்கம் கி.பி. 29–36 வரை பூமியில் வாழ்ந்ததாகக் கருதுகின்றனர். அரமேய மொழி, இயேசுவின் தாய்மொழியாகக் காருதப்படுகிறது.

வாழ்க்கை வரலாறு

இயேசுவின் வாழ்க்கை வரலாற்று பரிசுத்த வேதாகமத்தின் நான்கு நற்செய்தி நூல்களில் எழுதப்பட்டுள்ளது. இப்பகுதி விவிலியத்தின் படியான இயேசுவின் வாழ்க்கையை விளக்கும்.

வாழ்கை சுருக்கம்

  1. இயேசுவின் பிறப்பு முன்னறிவிக்கப்படுகிறது.
  2. இயேசு கன்னியிடமிருந்து, ஒரு மாட்டுத்தொழுவத்தில் பிறந்தார். பிறப்பில் இயேசு யூதாராயிருந்தார்.
  3. சிறுவயதிலேயே ஞானம் மிகுந்தவராக காணப்பட்டார். அவர் பெற்றோருக்கு பணிந்திருந்தார்.
  4. வயது வந்தவுடன் யோர்தான் ஆற்றில் அருளப்பரிடம் (யோவான்) ஞானஸ்நானம் பெற்றார்.பின் பாலைவனம் சென்று 40 நாள் விரதமிருந்தார். இதன் போது அலகை (சாத்தான்) அவரை சோதித்தது. இதில் இயேசு வென்றார்.
  5. பின்னர் இயேசு மக்களுக்குப் போதிக்க தொடங்கினார். இயேசு உவமைகள் மூலம் பேசினார். பல புதுமைகளைச் செய்தார்.
  6. யூதமதத் தலைவர்கள் இயேசுமீது பொறாமை கொண்டு அவரைக் கொலை செய்ய வகை தேடினர். பல சூழ்ச்சிகளைச் செய்து தோல்விகண்டனர். மக்கள் இயேசுவோடு இருந்தபடியால் கைது செய்யப் பயந்தனர்.
  7. இயேசுவின் 12 சீடரில் (அப்போஸ்தலர்) ஒருவரான யூதாஸ் இஸ்காரியோத்து யூதமத தலைவரின் சூழ்ச்சிப் பிடியில் சிக்கி இயேசுவை 30 வெள்ளி காசுகளுக்குக் காட்டிக் கொடுக்க முன்வருகின்றான்.
  8. இயேசு கடைசி இராபோசனத்தை 12 சீடருடன் (யூதாஸ் உட்பட) உண்கிறார். தமது சீடரின் கால்களை கழுவி "தாழ்மையாக இருக்க வேண்டும்" என்பதை எடுத்து காட்டுகிறார்.
  9. பின்னிரவில் கொத்சமனி தோட்டத்தில் செபம் செய்து கொண்டிருக்கும் போது யூதாஸ் யூதமத தலைவருடனும் படைத்தலைவருடனும் வந்து இயேசுவை முத்தமிட்டுக் காட்டிக் கொடுக்கிறான்.
  10. யூதர் அப்போது யூதாவின் ஆளுனரான உரோமனாகிய பொந்தியு பிலாத்து முன்னால் கொண்டு சென்றார்கள். அவன், இயேசு குற்றமற்றவர் என கண்டு விடுவிக்க முயன்றும் யூதருக்கும், அரசுக்கும் பயந்து இயேசுவை சிலுவையில் அறையக் கட்டளையிட்டான்.
  11. இயேசு சிலுவையில் அறையப்பட்டார். மூன்று மணித்தியாலம் சிலுவையில் தொங்கி உயிர்விட்டார். மூன்று நாட்கள் கழித்து மரணத்திலிருந்து எழுந்தார். சீடர்களுக்கு தோன்றினார்.
  12. நற்செய்தியை உலகெங்கும் பரப்பும் படி தம் சீடருக்கு கூறிவிட்டு விண்ணகம் சென்றார்.

வம்சமும் உறவுகளும்

இயேசு உருவப்படம் கலாச்சாரங்களுக்கு ஏற்றபடி மாற்றி வரையப்படுகிறது

இயேசுவின் தாயாரான மரியாளின் கணவர் யோசேப்பு என்பவர் இயேசுவின் வளர்ப்புத் தந்தை ஆவார். விவிலியத்தில், (மத்தேயு 1:2-16; லூக்கா 3:23-38). இவை இரண்டின் படியும் இயேசு ஆபிரகாம் மற்றும் தாவிது அரசன் வழி வருபராவார். இயேசுவின் வளர்ப்பு தந்தையான யொசேப்பு பற்றி இயேசுவின் குழந்தை பருவத்துக்கு பின்னர் குறிப்புகள் எதுவும் காணப்படவில்லை. இவர் இயேசு பகிரங்க வாழ்க்கையை ஆரம்பிக்க முன்னதாக இறந்திருக்க கூடும் என ஊகிக்கப்படுகிறது. இது இயேசு சிலுவையில் தொங்கும் போது தனது தாயைக் கவனித்துக்கொள்ளுமாறு அவரது விருப்பத்துக்குரிய சீடருக்குப் பணித்ததிலிருந்து தெளிவாகிறது (யோவான் 19:25-27).

விவிலியத்தில், (மத்தேயு 13:55–56 & மாற்கு 6:3) யாக்கோபு, யோசே, சீமோன், யூதா என்பவர்கள் இயேசுவின் சகோதரர் என குறிப்பிடப்பட்டிருந்தபோதும் அவர்கள் யோசேப்புக்கும் மரியாளுக்கும் பிறந்தவர்களா அல்லது சகோதரர்கள் முறை கொண்டவர்களா என்பது குறிப்பிடப்படவில்லை. மேலும் முதலாம் நூற்றாண்டின் யூத வரலாற்று ஆசிரியரான யோசேபஸ் (Josephus) என்பவரும் யுதாவை இயேசு கிறிஸ்துவின் சகோதரர் என குறிப்பிடுகிறார் 1. மேலும் புனித பவுல் கலாத்தியருக்கு எழுதிய நிருபத்தில் கர்த்தருடைய சகோதரனாகிய யாக்கோபு (காலத்தியர் 1:19) என குறிப்பிடுகிறார். மறுபுறம் adelphos என்ற பதமே விவிலியத்தில் சகோதரன் என பெயர்க்கப்பட்டுள்ளது. இது ஒரு தாய் வழிவராச் சகோதரரையும் குறிக்கலாம். மேலும், அக்காலத்தில் ஒரே நம்பிக்கைக்குள் ஒன்றுபட்டு இருந்தவர்களையும் "சகோதரர்கள்" என்று அழைப்பது வழமையாயிருந்தது. ஆகவே விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் மரியாளுக்கு பிறந்தவர்கள் இல்லை; மரியாள் கன்னியாகவே வாழ்ந்தார் எனவும் கொள்ளக்கூடியதாயுள்ளது. இதுவே கத்தோலிக்க மற்றும் சில திருச்சபைகளின் வாதமும் போதனையுமாகும்.

புதிய ஏற்பாட்டில் யோவானின் தாயாகிய எலிசபேத் மரியாளின் உறவினர் எனக் கூறப்பட்டுள்ளது. எனினும் உறவு முறை குறிப்பிடப்படவில்லை.

இயேசுவின் பிறப்பு

இயேசுவின் பிறப்பு

மத்தேயு லூக்கா நற்செய்திகளில் கூறியுள்ளபடி இயேசு யூதேயாவிலுள்ள பெதலகேமில் கன்னிமரியிடமிருந்து பரிசுத்த ஆவியினால் பிறந்தார். லூக்கா நற்செய்தியின்படி கபிரியேல் தேவதூதர் மரியாளுக்கு இயேசுவைப் மரியாள் பெறுவாள் என்ற நற்செதியை அறிவித்தார். (லூக்கா1:26–38) கத்தோலிக்கரால் இந்நிகழ்வு மங்கள வார்த்தையுரைப்பு என நினைவு கூறப்படுகிறது. யோசேப்பும் மரியாளும் அப்போது யூதேயாவை ஆண்ட அகோஸ்த்து இராயரின் கட்டளையிடப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் தங்களைப் பதிவு செய்யும் நோக்கில் யோசேப்பின் சொந்த உரான பெத்லகேமுக்கு சென்றபோது மரியாள் பிரசவ வலி கொண்டு இயேசுவை ஒரு மாட்டுகொட்டிலில் பெற்றார்.

இயேசுவின் பிறப்பு முதலாவதாக இடையர்களுக்கு தேவதூதரால் அறிவிக்கப்பட்டு அவர்கள் வந்து இயேசுவைப் பணிந்தார்கள். மேலும் இயேசுவின் பிறப்பின் போது ஒரு அதிசய விண்மீன் தோன்றியது. இதனை பார்த்த ஞானிகள் யூதரின் அரசன் பிறந்துள்ளார் என்று அறிந்து பெத்லகேம் வந்து இயேசுவை கண்டு பணிந்தார்கள். பல பரிசுபொருட்களையும் இயேசுவுக்கு கொடுத்தனர். மேலும் அப்போது யூதாவின் ஆளுனரான ஏரோது மன்னன் யூதரின் அரசன் பிறந்துள்ளார் என அறிந்து அப்பிரதேசதிலிருந்த 2 வயதுக்கு குறைவான சகல குழந்தைகளையும் கொலை செய்வித்தான். எனினும் முன்னரே தேவதூதரால் எச்சரிக்கப்பட்ட யோச்சேப்பு மரியாளையும் இயேசுவையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு தப்பிச் சென்றார். ஏரோது மரித்த பின்னர் யூதா நாட்டுக்கு திரும்பி நாசரேத்து என்னுன் ஊரில் வசித்தனர்.

இயேசுவின் குழந்தைப் பருவத்துக்கும் இளமை பருவத்துக்குமிடையே இயேசு 12 வயதில் ஆலயத்துக்கு சென்ற நிகழ்வுமட்டுமே விவிலியதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இடைப்பட்ட காலதில் இயேசு என்ன செய்தார் என்பதனை விவிலியத்தில் சேர்க்கப்படாத நற்செய்தி நூல்கள் மூலமே அறியலாம்.

திருமுழுக்கும் சோதனையும்

இயேசு அலகையால் சோதிக்கப்படுதல்

மாற்கு நற்செய்தியின் படி, இயேசு யோர்தான நதிக்கரைக்கு வந்து அங்கே திருமுழுக்கு கொடுத்துக் கொண்டிருந்த யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார். இயேசு கரையேறியபோது பரிசுத்த ஆவி அவர்மீது புறா வடிவில் வந்திறங்கினார். மேலும் நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று. (மாற்கு 1:10–11). லூக்கா நற்செய்தியில் யோவான் போதிக்க தொடங்கியது டைபீரியஸ் சீசரின் 15வது ஆண்டில் என குறிப்பிட்டுள்ளார் (லூக்கா 3:1). இது கி.பி. 28 ஆகும் எனவே திருமுழுக்கின் போது இயேசுவின் வயது சுமார் 30 ஆகும். மேலும் மத்தேயுவின் படி யோவன் இயேசு திருமுழுக்கு பெற வருவதை கண்டபோது இயேசுவைத் தடுத்து நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா என்றார். ஆனால் இயேசுவோ இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது எனக்கு பிரியமாக இருக்கிறது என்றார் (மத்தேயு 3:15).

திருமுழுக்கின் பின்னர் இயேசு பாலைவனத்துக்குச் சென்று 40 நாள் நோன்பிருந்தார். அப்போது அலகை அவரி மூன்று முறை சோதித்தது. மூன்று முறையும் இயேசு வென்றார். பின்னர் பாலைவனத்தை விட்டகன்று தமது முதல் சீடர்களைத் தெரிந்துகொண்டார் (மத்தேயு 4:12–22).

இயேசுவின் திருமுழுக்குடன் தொடர்புடைய இந்நிகழ்வுகள் மத்தேயு மாற்கு லூக்கா நற்செய்திகளில் மட்டுமே காணப்படுகிறது. யோவான் நற்செய்தியில் இது பற்றிய குறிப்பேதும் கிடையாது.

பகிரங்க வாழ்க்கை

விவிலிய நற்செய்திகளில் கூறப்பட்டுள்ளதன்படி இயேசு, மெசியா, மனித குமாரன், கர்ததர், "மனிதரது பாவங்களை தீர்க்க பலியானாவர்", விண்ணரசின் நற்செய்தியை அறிவிக்கவந்தவர் ஆவார் (மாற்கு 10:45, லூக்கா 4:43, யோவான் 20:31). மேலும் விவிலியத்தில் இயேசு தனது போதனைகளின் போது பல புதுமைகளை செய்த்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இவை நோய்களை குணமாக்குதல், நீரின் மேல் நடத்தல், நீரை திராட்சை இரசமாக்குதல், சிலரை மரணத்திலிருந்து எழுப்புதல் (யோவான் 11:1–44). போன்றவையாகும்.

இயேசுவின் பகிரங்க வாழ்விபோது மூன்று பாஸ்கா பண்டிகைகளை யோவான் நற்செய்தி குறிப்பிடுகிறது. இதிலிருந்து இயேசுவின் பகிரங்க வாழ்கை மூன்று ஆண்டுகள் நீடித்ததாகக் கருதப்படுகிறது. இயேசு பொதுமக்களுக்கு போதித்தார் எனினும் தனது பிரதான போதனைகளை அப்போஸ்தலர் என அழைக்கப்பட்ட தனது நெருங்கிய பன்னிரு சீடருக்கு மட்டுப்படுத்தினார். இயேசுவின் போதனைகளின் உச்சக்கட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்களைக் கவர்ந்தார். இயேசு கூடுதலாகப் போதனை செய்த இடங்கள் கலிலேயா (இன்றைய வட இசுரேல்) மற்றும் பெறாயா (இன்றைய மேற்கு ஜோர்தான்) என்பனவாகும்.

மலைப் பிரசங்கம் (மத்தேயு 5-7) இயேசுவின் போதனைகளில் முக்கியமானதாகும். இதில் பல ஆசீர்வாதங்களும் கிறிஸ்து கற்பித்த செபம்மும் காணப்படுகிறது. மலைப்பிரசங்கத்தில் இயேசு கோபம், பெருமை, விவாகரத்து, சத்தியங்கள், பழிவாங்குதல் என்பவை குறித்து போதித்தார். இயேசுவின் போதனைகளில் சில மரபு வழியானவையாகும். மேலும் சில மரபுகளைப் புறக்கணித்தவையாகும். இயேசு மோசேயின் சட்டங்களை பின்பற்றும்படி கூறினார். அதேவேளை ஒருகன்னத்தில் அடித்தவனுக்கு மறுகன்னத்தையுன் காட்டு போன்ற மோசேயின் சட்ட்டத்துக்கு புறம்பான விடயங்களையும் போதித்தார்.

மலைப்பிரசங்கம்

இயேசு மக்களுக்கு போதிக்கும் போது, ஊதாரி மைந்தன் உவமை (லூக்கா 15:11-32), விதைப்பவன் உவமை (மத்தேயு 13:1-9) போன்ற உவமைகளைப் பரவலாகப் பயன்படுத்தினார். அவரது போதனைகள் விண்ணரசு, மனிதநேயம் மற்றும் உலக முடிவு பற்றியதாக இருந்தது. அவர் தாழ்மை, சாந்தம், பாவ மன்னிப்பு, கடவுள் நம்பிக்கை, முடிவில்லா விண்ணரசு போன்றவற்றையும் போதித்தார்.

இயேசு தனது போதனைகளின் போது யூத சமயத்தலைவர்களுடன் (பரிசேயர், சதுசேயர்) தர்க்கத்தில் ஈடுபட்டார். சதுசேயர் மரணத்திலிருந்து மீண்டும் உயிர்த்தெழல் இல்லை என நம்பினர். இயேசு இவ்விடயதில் அவர்களோடு இணங்கவில்லை (மத்தேயு 22:23-32). பரிசேயருடனான் இயேசுவின் தொடர்பு சிக்கலானதாகும். இயேசு பரிசேயரை அவர்களது வெளிவேடத்துக்காகக் கடிந்து கொண்ட (மத்தேயு 23:13–28) அதேவேளை அவர்களில் சிலரோடு ஒன்றாக உணவு அருந்தினார். (லூக்கா 7:36–50). இயேசு பரிசேயரின் ஆலயங்களில் போதித்தார் (மாற்கு 23:1-3) மேலும் இயேசு பரிசேயரது போதனைகளை தன்னை பின்பற்றியவர்களுக்கு போதித்தார் (மத்தேயு 23:1-3). நிக்கோதேமு போன்ற பரிசேயர் இயேசுவின் சீடர் எனக் கொள்ளப்பட்டனர் (யோவான் 7:50-51).


இயேசுவின் நாற்களில் யூதேயா மற்றும் கலிலேயா

கூடுதலான நேரங்களில் இயேசு அன்றைய சமுதாயத்தில் ஒதுக்கப்பட்ட, வரிவசூலிப்பவர் (உரோமை அரசுக்கு வரி வசூலிப்பவர்கள்) போன்றவர்களுடன் தனது நேரத்தை செலவளித்தார். பிரிசேயர் இதை பற்றி முறையிட்டபோது இயேசு மருத்துவன் நோயாளிக்கே அதிகம் தேவை என்று பதிலளிக்கிறார் (மத்தேயு 9:9-13). இயேசு தனது போதனைகளை சமாரியாவுக்கும் விரிவுபடுத்தியிருந்தார் (யோவான் 4:1-42).


இயேசுவின் பகிரங்க வாழ்வின் இறுதியில், எருசலேமுக்கு கோலாகலமாக நுழைந்தார். இது யூத மாதப்படி நிசான் 15 ஆம் திகதியாகும். யோவான் நற்செய்தியின் (யோவான் 12:12–19) படி இயேசு எருசலேமுக்கு வருகிறாரென்று பாஸ்கா பண்டிகைக்கு வந்த திரளான மக்கள் கேள்விப்பட்டு, குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு, அவரை எதிர்கொண்டுபோய் ஓசன்னா, கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா ஆசீர்வதிக்கப்பட்டவர் என்று ஆர்ப்பரித்தார்கள். பலர் தங்களது மேலாடைகளை அவர் வந்த வழியில் விரித்தனர். இயேசு கழுதை மேல் ஏறி எருசலேமுக்குள் ஓர் அரசர்போல நுழைந்தார்.

இயேசுவின் வாய்மொழிகள்

  • வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே ! நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் (மத்தேயு 11:28)
  • நல்ல ஆயன் நானே (யோவான் 10.14)
  • நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் என்னாலன்றி ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். (யோவான்14:6)
  • நீங்கள் உலகமெங்கும் போய், எல்லோருக்கும் நற்செய்தியை அறிவியுங்கள் (மாற்கு 16:15)

பாடுகள் மரணம்

போன்சியோ பிலாத்து, "இதோ இம்மனிதரை உங்களுக்கு கொடுக்கிறேன் இவர் இரத்த பாவம் என் மிது இல்லை"

புனித விவிலியத்தின் படி, இயேசு விழாக்கோலத்தில் எருசலேமுக்க்குள் நுழைந்த பிறகு ஏரோதில் ஆலயத்தில் வியாபாரிகளை இது செப வீடு கள்வர் குகையாய் மாற்றாதீர் எனக்கூறி அவர்களை விரட்டி விட்டார் (யோவான் 12:13-17). அதே கிழமையில் தனது கடைசி இராப்போசனத்தை தனது சீடருடன் உட்கொண்ட பிறகு செபம் செய்வதற்காக் கெத்சமணி தோட்டதுக்குப் போனார்.

தோட்டத்திலிருந்தபோது, ஆசாரியர்களதும் தலைமை குரு கைப்பாசினதும் (பிறகு கூறப்பட்டுள்ளப்படி, மத்தேயு 26:65-67) கட்டளைப்படி இயேசு உரோமை போர்வீரர்களால் கைது செய்யப்பட்டார். இயேசுவின் புகழ் மக்களிடம் ஓங்கியிருந்தபடியால் இயேசுவின் கைது திட்டமிட்டு இரவில் மேற்கொள்ளப்பட்டது (மாற்கு 14:2). இயேசுவை கைதுசெய்யவந்த கூட்டத்தோடு பன்னிரு சீடரில் ஒருவரான யூதாசும் வந்தான். யோவான் நற்செய்தியின்படி, யூதாஸ் முன்வந்து முத்தம் செய்து இயேசுவை அடையாளம் காட்டினான். இயேசுவை போர்வீரர் கைதுசெய்ய முயன்றபோது பன்னிரு சீடரின் இன்னொருவரான பேதுரு தனது பட்டயத்தை உருவி பிரதான குருவின் பணியாளது கதை வெட்டினார்.

இயேசுவின் பாடுகள்

அப்போது இயேசு கத்தியெடுத்தவன் அதிலே அழிவான் எனச்சொல்லி பேதுருவை பட்டயத்தை உறையிலே போடுமாறு கூறினார். பின்பு லூக்கா நற்செய்தியின்படி (லூக்கா 22:51), இயேசு அப்பணியாளது காதைத் தொட்டுச் சுகமாக்கினார். பின்பு இயேசுவை அவர்கள் கைது செய்தனர். இயேசுவின் சீடர் தலைமறைவாகினார்கள். இயேசுவை ஆசரியர்களும் மூப்பர்களும் உள்ள சபைக்கு விசாரணக்காக அன்றிரவே கொண்டுசென்றனர். இயேசுவை பிரதான ஆசரியரும் மூப்பர்களும் இயேசுவை விசாரித்து அவர் கடவுளின் மகனா? என வினவினார்கள். அதற்கு இயேசு நீரே அவ்வாறு கூறினீர் என்றார் (லூக்கா 22:70-71). இதை கேட்ட அச்சபையினர் இயேசு கடவுளை பழித்தார் என தீர்ப்பிட்டனர். பின்பு இயேசு யூதரின் கடவுள் என தம்மை கூறிக்கொண்டார் எனக்கூறி உரோமை ஆளுனரான போன்சியோ பிலாத்துவிடம் இயேசுவை கொண்டுச் சென்றனர் (மத்தேயு 27:11;மாற்கு 15:12).

பிலாத்து தனது விசாரணைகளின் போது இயேசு குற்றமற்றவர் எனக்கண்டு பாஸ்கா பண்டிகையின் போது குற்றவளி ஒருவரை விடுவிக்கும் வழக்கப்படி இயேசுவை விடுவிக்க முயன்றார். ஆனால் மக்கள் கூட்டம் பரப்பாஸ் என்ற வேறு ஒரு கைதியை விடுதலை செய்யுமாறும் இயேசுவை சிலுவையில் அறையுமாறும் கூச்சலிட்டனர். மக்களுக்கு பயந்த பிலாத்து, இதோ இம்மனிதரை உங்களுக்கு கொடுக்கிறேன் இவர் இரத்த பாவம் என் மீது இல்லை எனக்கூறி இயேசுவைச் சிலுவையில் அறைவதற்கான கட்டளையை கொடுத்தார். மேலும் ஒரு பாத்திரத்தில் நீர் கொண்டு தனது கையை கழுவி தனது பாவத்தை கழுவிக்கொண்டார்.


சிலுவையில் இயேசு

பின்பு போர்வீரர் இயேசுவை கூட்டிச்சென்று வாரினால் அடித்து பின்னர் அவரைச் சிலுவையில் அறையுமுகமாக கொல்கத்தா என அழைக்கப்பட்ட மலைக்கு கூட்டிச்சென்றனர். இயேசு தனது சிலுவையை சுமந்து சென்றார். அங்கே இயேசுவை சிலுவையில் அறைந்து பிலாத்துவின் கட்டளைப்படி "நாசரேனாகிய இயேசு, யூதர்களின் அரசர்" என எழுதப்பட்ட பெயர் பலகையை அவர் தலைக்கு மேல் தொங்கவிட்டனர். மூன்று மணிநேரம் சிலுவையில் தொங்கிய இயேசு, "ஏலோய், ஏலோய் லாமா சபக்த்தானி" (என் ஆண்டவரே என் ஆண்டவரே ஏன் என்னை கைவிட்டீர்) எல்லாம் நிறைவேறிற்று எனக்கூறி உயிர்விட்டார். லூக்கா 23:48 இன் படி இதை பார்த்த மக்கள் கூட்டம் சோகமாக காணப்பட்டது.

நான்கு நற்செய்திகளின் படியும், இயேசு மாலையாவதற்கு முன்பே மரித்துவிட்டார். செல்வந்தனான அரிமத்தியாவைச் சேர்ந்த யோசேப்பு (மாற்கு 15:42-46;லூக்கா 23:50-56) பிலாத்துவிடம் இயேசுவின் உடலை சிலுவையிலிருந்து இறக்குவதற்கு அனுமதி பெற்று இயேசுவை ஒரு புதிய கல்லறை ஒன்றில் அடக்கம் செய்தனர்.

உயிர்ப்பும் விண்ணேற்றமும்

இயேசுவின் உயிர்ப்பு
16வது நூற்றாண்டு ஓவியம்

விவிலியத்தின் படி, இயேசு சிலுவையில் அறையுண்ட மூன்றாவது நாள் மரணத்தில் இருந்து உயிர்த்தார்[3]. மத்தேயு நற்செய்தியின் படி, இறை தூதர் ஒருவர் இயேசுவின் கல்லறை அருகே தோன்றி இயேசுவின் உயிர்ப்பை அவரது உடலுக்கு வாசனை பொருட்கள் பூச வந்த பெண்களுக்கு அறிவித்தார். லூக்காவின் படி இரண்டு இறைதூதராகும் மாற்குவின் படி அது வெண்ணிர ஆடை அணிந்த வாலிபனாகும். மாற்கு இயேசு முதலாவதாக மர்தலேன் மரியாளுக்கு தோன்றினார் [4]. யோவான் நற்செய்தியில் மரியாள் கல்லைறயுள் பார்க்கும் போது இரண்டு இறைத்தூதர் உயிருடன் உள்ளவரை இங்கு ஏன் தேடுகிறீர்கள் என கேட்டார். அவர் திரும்பியபோது இயேசுவைக் கண்டார், எனினும் இயேசு பெயர் சொல்லி அழைக்கும் வரை அடையாளம் காணமுடியாதிருந்தார் [5].

அப்போஸ்தலர் பணி நூல் இயேசு அதற்கு பிறகு, நாற்பது நாட்களுக்கு பல இடங்களில் சீடருக்கு தோன்றியதாகக் குறிப்பிடுகிறது. இயேசுவின் உயிர்ப்பின் சில மணிகளுக்குப் பிறகு எம்மாவுஸ் நகருக்கு திரும்பிக்கொண்டிருந்த இரண்டு சீடருக்குத் தோன்றினார். அன்று மாலை ஒன்றாக கூடியிருந்த சீடருக்கு தோன்றினார். இயேசுவின் பணி யூதரை முதன்மை படுத்தி நடந்தாலும் இயேசு இவ்வேளையில் சீடருக்கும் உலகெங்கும் சென்று சகலருக்கும் நற்செய்தியை அறிவியுங்கள் என்றார். இதை கூறிய பின்பு இயேசு ஒலிவ மலையில் இயேசு விண்ணேறினார். அவரை ஒரு முகில் மறைத்து விண்ணுக்கு எடுத்துக் கொண்டது. இயேசு தான் திரும்பவும் வருவதாக வாக்களித்தார் இது இரண்டாம் வருகை என் அழைக்கப்படுகிறது [6]

தீர்க்கதரிசனம் நிறைவேறல்

நற்செய்திகளுக்கிணங்க இயேசுவின் பிறப்பு,வாழ்க்கை,மரணம்,உயிர்ப்பு என்பன பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ள தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றமாகும். உதாரணமாக இயேசு கன்னியிடமிருந்து பிறப்பதையும் அவர் எகிப்துக்கு தப்பியோடுவதையும் ஏசாயா 7:14 இல் காணலாம்.

உசாத்துணை

  • விவிலியம் (ஜேம்ஸ் மன்னனின் பதிப்பு, கத்தோலிக்க புதிய மொழிபெயர்ப்பு)
  • யூதா
  1. 1.0 1.1 1.2 Sanders (1993).p.11, p 249.
  2. "Our conclusion must be that Jesus came from Nazareth." Theissen, Gerd; and Merz, Annette. The historical Jesus: A comprehensive guide. Minneapolis: Fortress Press. 1998. Tr from German (1996 edition). p. 165. ISBN 978-0-8006-3123-9
  3. மத்தேயு நற்செய்தி 28:5-10; மாற்கு நற்செய்தி 16:9;லூக்கா நற்செய்தி 24:12-16;யோவான் நற்செய்தி 20:10-17; அப்போஸ்தலர் பணி 2:24 ;கொரிந்தியருக்கு எழுதிய முதலாவது நிருபம் 6:14
  4. மாற்கு நற்செய்தி 16:9
  5. யோவான் நற்செய்தி 20:11-18
  6. மத்தேயு நற்செய்தி 15:24; மாற்கு நற்செய்தி 16:19;லூக்கா நற்செய்தி 24:51; அப்போஸ்தலர் பணி 1:6-11 ;கொரிந்தியருக்கு எழுதிய முதலாவது நிருபம் 6:14 இரண்டாம் வருகை மத்தேயு நற்செய்தி 24:36-44

வெளி இணைப்புகள்

கிறிஸ்தவ நோக்கு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Jesus
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

கிறிஸ்தவரல்லாதோரின் நோக்கு

ஏனய நோக்குகள்

வரலாற்று உண்மைகள்

வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=இயேசு&oldid=627982" இலிருந்து மீள்விக்கப்பட்டது