99942 அப்போஃபிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
99942 அப்போஃபிஸ்
கண்டுபிடிப்பு[1]
கண்டுபிடித்தவர்(கள்) ரோய் டக்கர், டேவிட் தோலென், பாப்ரீசியோ பெர்னார்டி
கண்டுபிடிப்பு நாள் ஜூன் 19, 2004
பெயர்க்குறிப்பினை
சிறு கோள்
பகுப்பு
அட்டென்
காலகட்டம்நவம்பர் 26, 2005
சூரிய சேய்மை நிலை1.099 AU
சூரிய அண்மை நிலை 0.746 AU
அரைப்பேரச்சு 0.922 AU
மையத்தொலைத்தகவு 0.191
சுற்றுப்பாதை வேகம் 323.587 நாள்
சராசரி சுற்றுப்பாதை வேகம் 30.728 கிமீ/செக்
சராசரி பிறழ்வு 111.000°
சாய்வு 3.331°
Longitude of ascending node 204.466°
Argument of perihelion 126.364°
சிறப்பியல்பு
பரிமாணங்கள் ~270 மீ[1]
நிறை 2.7×1010 கிகி
விடுபடு திசைவேகம்~0.52 கிமீ/மணி[2]
சுழற்சிக் காலம் ~30 மணி[3]
எதிரொளி திறன்0.33 [1][3]
வெப்பநிலை ~290K
விண்மீன் ஒளிர்மை 19.7 [1][3]

99942 அப்போஃபிஸ் (99942 Apophis) என்பது பூமிக்குக் கிட்டவாக உள்ள சிறுகோள் (Asteroid). டிசம்பர் 2004 ஆம் ஆண்டு ஆய்வுகளின் பின்னர் இச்சிறுகோள் 2029 ஆம் ஆண்டில் பூமியை மோதும் வாய்ப்பு 45,000 இற்கு ஒன்று என அறியப்பட்டது. பின்னர் எடுக்கப்பட்ட தகவல்களின் படி இந்த வாய்ப்பு 2029 இல் பூமியையோ அல்லது நிலவையோ தாக்கும் வாய்ப்புகள் நிராகரிக்கப்பட்டன. எனினும், 2029 ஆம் ஆண்டில் பூமிக்குக் கிட்டவாக இது வரும்போது புவியீர்ப்பின் காரணமாக விண்வெளியில் ஏறத்தாழ 600 மீட்டர் விட்டமுள்ள பகுதிக்கூடாக இது செல்லும் என்றும், அப்போது இது 2036 ஆம் ஆண்டு பூமியை மோதும் வாய்ப்புகள் உருவாகியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாய்ப்பு ஆகஸ்ட் 2006 வரை டொரினோ மோதல் அளவுகோலில் முதலாவது நிலையில் வைக்கப்பட்டிருந்தது[4].

குறித்த மேலதிக அவதானிப்புகள் இச்சிறுகோள் பூமியை அடையமாட்டாது என்பதை உறுதிப்படுத்தி, 2006, ஆகஸ்ட் 5 இல் டொரினோ அளவுகோல் 0 இற்குக் குறைக்கப்பட்டது. 2009, அக்டோபர் 7 ஆம் நாளன்று 2036 இல் பூமியை மோது வாய்ப்பு 250,000 இற்கு 1 ஆகக் கணிக்கப்பட்டது[5]. மேலதிக மோதல் நாள் 2037 ஆம் ஆண்டாகக் கணிக்கப்பட்டு அதன் வாய்ப்பு 12.3 மில்லியன்களுக்கு 1 ஆகக் கணிக்கப்பட்டது.

அப்போபிஸ் பூமியை மோதவிடாமல் தடுக்கும் முயற்சி ஒன்றைத் தாம் ஆராய்ந்து வருவதாக 2009 டிசம்பர் 30 இல் ரஷ்யாவின் நடுவண் விண்வெளி ஆய்வு நிறுவனமான ரொஸ்கொஸ்மொசின் தலைவர் அனத்தோலி பெர்மீனொவ் தெரிவித்தார்[6].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "JPL Small-Body Database Browser: 99942 Apophis (2004 MN4)". பார்க்கப்பட்ட நாள் 2008-02-02.
  2. assuming radius of 0.135 km and mass of 2.1e10 kg yields an escape velocity of 0.14 m/s or 0.52 km/h.
  3. 3.0 3.1 3.2 "99942 Apophis". The Near-Earth Asteroids Data Base at E.A.R.N. Archived from the original on 2012-02-25. பார்க்கப்பட்ட நாள் 2009-10-15.
  4. "Near-Earth Asteroid 2004 MN4 Reaches Highest Score To Date On Hazard Scale". NASA's Near Earth Object Program Office. December 23, 2004. Archived from the original on 2007-08-18. பார்க்கப்பட்ட நாள் 2007-08-16. Today's impact monitoring results indicate that the impact probability for April 13, 2029 has risen to about 1.6%, which for an object of this size corresponds to a rating of 4 on the ten-point Torino Scale.
  5. Brown, Dwayne (2009-10-07). "NASA Refines Asteroid Apophis' Path Toward Earth". பார்க்கப்பட்ட நாள் 2009-10-07.
  6. "Russia 'plans to stop asteroid'". பிபிசி. 2009-12-30. http://news.bbc.co.uk/2/hi/science/nature/8435829.stm. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=99942_அப்போஃபிஸ்&oldid=3540727" இலிருந்து மீள்விக்கப்பட்டது